Rasi Palan This Week: குருவின் அருளால் மகர ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. சிக்கல்கள் எல்லாம் தீரும்
வார ராசி பலன்: டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். லாபம் ஏற்படும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். பண வரவு உண்டாகும். எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். நல்ல அனுகூலங்கள் ஏற்படும். உறவுமுறையில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் கூடும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். பைரவர் வழிபாடு, பைரவர் காயத்ரி சொல்லி வருவது ஏற்றத்தைக் கொடுக்கும்.
துணையின் தேக ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பற்கள், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் அதீத கவனம் தேவை. புதிய முதலீடுகளை செய்வீர்கள். வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, இன்டீரியர் டெக்கரேட் செய்வது, வாகனத்தில் மாற்றங்கள் செய்வது, அடுத்தடுத்து அனுகூலங்கள் பெறுவது போன்ற யோகங்கள் உண்டாகும்.
யோக பலன்
உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவது, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடுகளைத் தவிர்ப்பது நல்லது. மேலதிகாரிகள் விஷயத்தில் யோக பலத்தை அதிகளவில் பெறும் நல்ல காலகட்டம். பிப்ரவரி 14 ஆம் தேதி வரை சிறிது நிதானமாகவும், பொறுமையாகவும் இருப்பது நல்லது. பிப்ரவரி 14 ஆம் தேதிக்குப் பிறகு பெரிய ஏற்றங்களைப் பெறுவீர்கள்.
நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பலம் கிடைக்கும். உங்களுடைய செல்வாக்குகள், நல்ல பணவரவு உண்டாகும். வெற்றிகள் குவியும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு நீங்கள் நினைத்தது போன்று நடக்கும் யோகம் உமண்டாகும். தொழில் ரீதியாக அனுகூலங்கள் காணப்படும். சுபகாரியத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும்.
தொழிலில் முன்னேற்றம்
யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய அற்புதமான காலகட்டம். உறவு முறையில் இருந்த சிக்கல்கள் தீரும். சமூகத்தில் பெரிய மனிதர்களுடன் சந்திப்புகள் ஏற்படும். தொடர்ச்சியாக இருந்த பயணங்கள் ஏற்றத்தை ஏற்படுத்தும். விரயத்தில் செவ்வாய் இருந்தாலும் ராஜகிரகம் லாப ஸ்தானத்தில் அமருவது சர்வ தோஷ நிவர்த்தி உண்டாகும். பெரிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
நட்பு வட்டாரங்களில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். நிலப் பிரச்சனைகள் தீரும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். அரசுத் துறையில் நிதி மேலாண்மை செய்யும் யோகம் உண்டாகும். வீட்டுக் கடன், கல்விக் கடன் கிடைக்கும். நிறைய பேருக்கு கோழிப் பண்ணை, ஆடு, பசு வளர்க்கும் யோகம் ஏற்படும்.
நிலப் பிரச்சனை தீரும்
நிலப் பிரச்சனைகள் தீரும். நீதிமன்றம், வழக்கு சார்ந்த விஷயங்கள் முடியும். விவகாரத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் தீரும். வாகன விபத்து தொடர்பான நஷ்ட ஈடுகள் கிடைக்கும். முயற்சிகள் அனைத்தும் ஏற்றத்தைக் கொடுக்கும். எலும்பு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது மேன்மையைத் தரும். யோகமான வாரமாக இந்த வாரம் உங்களுக்கு அமையும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கும்ப ராசிக்கு கடன் வாங்குவதால் வரும் அதிர்ஷ்டம்.. பகையும் வரும் கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: தனுசு ராசிக்கு கட்டம் சரியில்லை.. வச்சு செய்யும் சனி, குரு.. ரொம்ப கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications