Rasi Palan This Week: மகர ராசிக்கு வாயில தான் கண்டம்.. ஆனா மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு
வார ராசி பலன்: நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். பேச்சில் இனிமையைக் கடைப்பிடிப்பது உங்களுக்கு நன்மையை ஏற்படுத்த வேண்டும். வாகனங்களில் செல்லும்போது சர்க்கஸ் எதுவும் செய்யாமல் விதிமுறைகளைப் பற்றி மெதுவாக செல்வது நல்லது. அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும் அற்புதமான காலகட்டம்.
சுபகாரியம்
முதலீடுகளுக்கு எந்தவித குறைகளும் இருக்காது. நகைகளை வாங்கி மகிழ்வீர்கள். பங்குச் சந்தையில் இருந்த இருந்து வந்த பாதிப்புகள், சிக்கல்கள் எல்லாம் நீங்கும். முதலீடு செய்வீர்கள். வைரம் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் எல்லாம் நீங்கி நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மகர ராசியினர் இருக்கும் வீட்டில் எல்லாவிதமான நன்மைகளும் ஏற்படும்.
வீடு கட்டும் யோகம்
வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, பிள்ளைகள் வருவது, 60 வது கல்யாணம் கைகூடுவது, திருமண யோகம் போன்ற அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். 60 ஆம் கல்யாணம் செய்வதற்கான யோகம் ஏற்படும். மகர ராசியினர் வீட்டில் இருந்தாலே சுபிக்ஷங்களுக்கு குறைவில்லாமல் இருக்கும். குடும்பத்தில் சுபிக்ஷங்களுக்கு குறைவில்லாமல் சந்தோஷங்களும், அனுகூலங்களும் ஏற்படும்.
ஆதாயம்
வேற்று மனிதர்களால் உங்களுக்கு ஆதாயம் நிச்சயமாக கிடைக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தலைவலி, நரம்பு, ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முடிந்தளவுக்கு சனி விலகலால் ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது பெரிய வெற்றியையும், சந்தோஷத்தையும் பெறக்கூடிய பாக்கியம் உண்டாகும்.
வாக்குவாதம் வேண்டாம்
தர்க்கம், வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. அஷ்டமத்தில் இருக்கும் கேதுவாலும், 2 ஆம் இடத்தில் இருக்கும் ராகுவாலும் பாதிப்புகள் வரும் என்பதால் பேச்சில் மட்டும் மிகுந்த கவனமாக இருப்பது நன்மையைத் தரும். வாராஹி வழிபாடு, அம்மன் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications