Magaram Rasi Palan: மகர ராசிக்கு மே மாதம் எப்படி இருக்கும்? முழு ராசி பலன் இங்கே!
மே மாத பலன்கள் 2026: மகர ராசியினருக்கு மே மாதத்தில் என்ன விதமான நல்ல பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மே மாதத்தில் செவ்வாய், சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் முக்கியமான பெயர்ச்சிகளை சந்திக்கின்றன. மாதத்தின் ஆரம்பத்தில் ரிஷப ராசியில் செவ்வாய், புதன், சூரியன் ஆகியவை ஒன்றாக கூடும் நிலை உருவாகிறது. அதனைத் தொடர்ந்து மாதத்தின் பிற்பகுதியில் ரிஷபத்தில் புதன் மற்றும் சூரியன் இணையும் சேர்க்கையும் நடைபெறுகிறது.

இந்த கிரக அமைப்புகள் 12 ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை. அந்த வகையில், மகர ராசியினரின் தொழில், வருமானம், குடும்பம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
மகர ராசி பலன்
மகர ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. மார்பகம், கண், பின்பகுதிகளில் கவனம். முதல் குழந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வீடு கட்டும் யோகம், நிலம் வாங்கும் யோகம் உண்டு. சொத்துக்கள் குவியும் யோகம் உண்டாகும். வீடு இன்டீரியர் டெக்கரேட் செய்வது, வீட்டை சரிசெய்து மீண்டும் கட்டுவதற்கு கடன் வாங்குவது, வண்டி வாங்க கடன் வாங்குவது, படிப்புக்காக கடன் வாங்குவது அமைப்பு உள்ளது.
கடன் வாங்கும் அமைப்பு
முதல் பாதியில் கடனை அடைத்து விட்டு மீண்டும் கடன் வாங்கக்கூடிய அமைப்பு உள்ளது. முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். மனம், ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. ரத்த அழுத்தம், சளி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பேச்சில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. அலர்ஜி விஷயத்தில் கவனம்.
பணவரவு
வேலை பார்க்கும் மகர ராசியினருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். அலுவலகத்தில் உங்கள் திறமைகள் பாராட்டப்படும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு பற்றிய நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் செய்பவர்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கலாம். பணவரவு சீராக இருக்கும். பழைய நிலுவைத் தொகைகள் கைக்கு வர வாய்ப்பு உள்ளது. வீண் செலவுகளை கட்டுப்படுத்தினால் சேமிப்பு அதிகரிக்கும். முதலீடு செய்யும் முன் யோசித்து முடிவு எடுப்பது நல்லது.
குடும்ப வாழ்க்கை
குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் குறையும். கணவன், மனைவி உறவில் புரிதல் அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பும் உருவாகலாம். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். முயற்சி எதுவாக இருந்தாலும் அவை உங்களுக்கு சாதகமாக முடியும்.
வழிபாடு
கணவர், மனைவியின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் 70, பொருளாதார ஏற்றம் 90 சதவீதம் நன்றாக இருக்கும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications