Magaram: மகரம் ராசி அடிச்சான் பாரு அப்பாய்ன்மென்ட் ஆர்டர் – அரசு உத்யோகம் உறுதி
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். கார்த்திகையில் நிறைய விசேஷங்கள் நடக்கும். ஐயப்ப பக்தர்கள் லட்சக்கணக்கானோர் மாலை போடும் காலம். கார்த்திகை தீபம் வரும் மாதம். நவம்பர் 17 முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரையிலான கார்த்திகை மாதம்.

கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை தீபம் மிகவும் பிரதானமானதாகும். வீட்டில் ஒற்றைப் படையில் தீபமேற்றுவது நன்மை பயக்கும். கார்த்திகை மாதம் முழுவதும் சோமவாரம் எனும் திங்கள்கிழமை விசேஷமான காலமாகும். சிவன் கோயிலில் நடைபெறக்கூடிய சங்காபிஷேகத்தில் கலந்துகொள்வது, அபிஷேகத்தில் கலந்துகொள்வது நன்மையை ஏற்படுத்தும்.
பரிகாரம்
கடன் குறைய வேண்டும், தேக ஆரோக்கியத்தில் பலம் பெற வேண்டும் என்றால் கோயிலுக்கு பழங்கள் வாங்கிக் கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும். கடன் குறைய வேண்டும் என்றால் திங்கள்கிழமை தோறும் பச்சரிசி வாங்கிக் கொடுப்பது நன்மை பயக்கும். பஞ்சாங்கத்தின்படி, கார்த்திகை மாதத்தில் கன மழை பெய்யும். தமிழகம் முழுவதும் வெள்ளக் காடாக மிதக்கும் சூழ்நிலை ஏற்படும். இந்த கார்த்திகை மாதத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதி அற்புதமாக இருக்கும். கடந்த காலங்களில் இழந்தவற்றை இந்த முறை மீட்பீர்கள். சொந்த வீடு கனவு நனவாகும். நிலம், வீடு, வண்டி, வாகனம், தங்கம், வைரம், வெள்ளி நகை உள்ளிட்ட அசையும், அசையா சொத்து சேர்க்கை உண்டு. உங்கள் மனதிற்கு பிடித்தபடியான வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் விஷயத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி நல்ல பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும்.
பண வரவு
குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் ஏற்படும். பங்குச்சந்தையில் முதலீடு செய்வீர்கள். முதலீடுகளில் பலமடங்கு லாபம் அதிகரிக்கும். பண வரவு திருப்தியாக இருக்கும். சுப காரிய தடைகள் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு வீடு தேடி நல்ல செய்தி வரும். குழந்தை பாக்கிய முயற்சியில் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் சரியாகி மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பிரிந்த உறவுகள் ஒன்றிணைவார்கள். குடும்பத்தில் புதியவர்கள் வருகை உறுதியாக இருக்கும்.
வெற்றி
பழைய வீடுகளில் புனரமைப்பு பணி மேற்கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் திறமைக்கேற்ற பதவி உயர்வு உள்ளிட்ட அங்கீகாரம் கிடைக்கும். கலை, ஊடகம் துறையினருக்கு விருது உள்ளிட்டவை தேடி வந்து பெயர், புகழ் அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். குழப்பம், சோம்பல் எல்லாம் நீங்கி மனதில் புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். எல்லா காரியங்களிலும் தெளிவான திட்டமிடலுடன் வெற்றி பெறுவீர்கள். உங்கள் கடினமான உழைப்புக்கு கை மேல் பலன் கிடைக்கும்.
அரசு உத்யோகம்
வம்பு வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பணியில் முன்னேற்றம் உண்டு. அரசு உத்யோகத்திற்கு முயற்சி செய்து வருவோருக்கு இந்த காலத்தில் நல்ல செய்தி கிடைக்கும். போட்டி தேர்வில் வெற்றி உண்டு. மனதிற்கு பிடித்த நீண்ட காலமாக திட்டமிட்ட பொருட்களை வாங்குவது, பயணம் செய்வது இருக்கும். சிலர் அடிமை தொழிலில் இருந்து விலகி புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது.
வழிபாடு
ஸ்டார்ட் அப் தொழிலில் அமோகமான வெற்றி கிடைக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை துணையுடன் வீண் வாக்குவாதத்தை தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். குடும்பத்தில் அந்நியர் தலையீடு கூடாது. எதிர்பாலினத்தவர் விஷயத்தில் கவனம் வேண்டும். ராகவேந்திரர் வழிபாடு ரணங்களை குறைக்கும்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications