Magaram: ஆட்டத்தை ஆரம்பிக்கும் மகர ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்
March month rasi palan: மார்ச் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மகர ராசியினருக்கு மார்ச் மாதத்தில் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மார்ச் மாதத்தில் கும்ப ராசியில் ராகு, செவ்வாய், புதன் ஆகிய கிரகஹ்கள் மாதம் முழுவதும் அங்கேயே இருக்கின்றன. குரு பார்வையில் இருப்பதால் பெரிய அளவில் முன்னேற்றத்தைத் தரும். மாதத்தின் பிற்பகலில் சுக்கிரன் உச்சத்தை அடைகிறார். குருவுக்கு நிகரான மிகப்பெரிய சுபரான சுக்கிரன் உச்சத்தை அடைவதால் பெண்கள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். பெண்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டக் கூடிய தன்மை ஏற்படும். [Magaram]

ஆண்களால் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். சனி பகவான் உச்ச சுக்கிரனோடு சேர்ந்து சுபத்துவத்தை அடைவதால் தொழிலாளர் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தினருக்கு நன்றாக இருக்கும் காலகட்டம். சிலருக்கு காதல் மலரும். அந்த வகையில் இந்த மார்ச் மாதத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
மகரம் மார்ச் மாத பலன்
மகர ராசிக்காரர்களுக்கு பண வரவுகள் சிறப்பாக இருக்கக்கூடிய மாதமாக இருக்கும். 6 ஆம் இடத்தில் இருக்கக்கூடிய குரு பகவான் 2 ஆம் இடத்தில் இருக்கக்கூடிய உங்கள் லாபாதிபதியான செவ்வாயைப் பார்க்கிறார். 2, 11 ஆம் இடங்கள் வலுத்து இருக்கிறது. 11 ஆம் அதிபதி 2 ஆம் வீட்டில் இருப்பதால் கடந்த காலங்களில் எந்த விஷயங்களில் எல்லாம் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அந்த விஷயங்களில் இருந்தெல்லாம் லாபம் வரக்கூடிய காலகட்மடாக இருக்கும்.
தடைகள் நீங்கும்
தொழிலை ஆரம்பித்துவிட்டு ஏன் தான் ஆரம்பித்தோமோ என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த தன்மைகள் எல்லாம் மாறும் அமைப்பு உள்ளது. வியாபாரத்தில் புதிய கிளையை ஆரம்பிக்கலாமா, டீலர்ஷிப் எடுக்கலாமா, விரிவுபடுத்தலாமா என்ற யோசனைகளில் இருந்து வந்த தடைகள் எல்லாமே நீங்கும். எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக மாறக்கூடிய அமைப்பு உள்ளது.
பண வரவு கொட்டும்
2026 ஆம் ஆண்டு மகர ராசிக்கான வருடம். போன ஆண்டே ஏழரை சனி முடிந்திருந்தாலும் அதனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது போன்ற நிலைமைகள் இருக்கும். இதுபோன்ற அமைப்புகள் எல்லாமே மாறி நல்ல திருப்பத்தைத் தரும் மாதமாக மார்ச் மாதம் அமையும். பணம் வரக்கூடிய வழிகளை அடையாளம் காணக்கூடிய சிறப்பு மாதமாக இருக்கும்.
தன்னம்பிக்கை
எந்த இடத்தில் பணம் இருக்கும். எந்த இடத்தில் நன்மையை ஏற்படும் என்பதை தெளிவாகக் கண்டறியக்கூடிய மாதமாக இந்த மாதம் இருக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். 5, 6 ஆண்டுகளாக இருந்து வந்த தோல்விகள் அத்தனையும் இனிமேல் விலகும். சிலருக்கு திருமண யோகம் உண்டாகும். ஏற்கனவே திருமணமாகி கோர்ட், கேஸ் என்று அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்துக்குள்ளேயே ஒரு சுமூகமான தீர்வு கிடைக்கும். அதற்கான நம்பிக்கைகள், ஆயத்தங்கள் ஏற்படும்.
இளமை திரும்பும்
இரண்டாவதாக கிடைக்கும் வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அதற்கான அடிப்படை அறிமுகங்கள் நடக்கக்கூடிய ஆரம்ப மாதமாக இருக்கும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதுவரை இருந்து வந்த உடல்நலக் கோளாறுகள் நீங்கும். ஏழரை சனி முடிந்துவிட்டதால் இளமையாக உணருவீர்கள். மனதிலும் உடம்பிலும் இளமை திரும்பும். 2026 ஆம் ஆண்டில் ஏற்கனவே இருந்து வந்த தொழில் பிரச்சனை, பணப் பிரச்சனை, மனப் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கக்கூடிய அற்புதமான மாதமாக அமையும்.












Click it and Unblock the Notifications