Magaram: குரு, சுக்கிரனின் அருளால் மகர ராசிக்கு கொட்டும் லாபம்.. நீண்டநாள் கனவு நிறைவேறும் அமைப்பு
மே மாத ராசி பலன்: 2026 மே மாதம் பிறக்கவுள்ளது. இந்த மே மாதத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசியினருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். கிரக நிலைகள் ஒவ்வொரு ராசிக்கும் வேறுபட்ட பலன்களை தரும் நிலையில், மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எப்படி அமையும்? எந்த கிரகங்கள் சாதகமாக உள்ளன, எவற்றில் கவனம் தேவை? இதோ மே மாத மகரம் ராசிக்கான கிரக பலன்கள்.

மகரம்
மகரம் ராசியினருக்கு நீசத்தில் இருந்த பாக்கியாதிபதியான புதன் மே மாதம் 1 ஆம் தேதி 4 ஆம் இடத்துக்கு மாறுகிறார். பெரிய நல்ல அமைப்பாக இருக்கும். ராசிநாதன் செவ்வாயுடன் சேர்ந்திருக்கிறார். இந்த செவ்வாய் 11 ஆம் தேதி 4 ஆம் இடத்துக்கு ஆட்சியாக மாறுகிறார். ராஜயோகாதிபதியான சுக்கிர பகவான் 5 ஆம் இடத்தில் நீண்ட நாட்களாக இருப்பது பின்னர் 6 ஆம் இடத்துக்கு மாறுகிறது.
அலைச்சல்
6 ஆம் இடத்தில் இருந்து குருவும், சுக்கிரனும் 12 ஆம் இடத்தை பார்ப்பது மிகப்பெரிய நன்மையை ஏற்படுத்தும். அலைச்சல்கள் அதிகமாக இருக்கும் காலகட்டமாக இருக்கும். அலைச்சலை சமாளிக்கக்கூடிய அளவுக்கே இருக்கும். பெண்களால் லாபம் ஏற்படும். சிலருக்கு கணவர், மனைவி, பிள்ளைகளால் ஆதாயம் ஏற்படும் அமைப்பு உள்ளது. மகர ராசியினரின் நெடுநாள் கனவு நனவாகக்கூடிய யோகம் உண்டாகும்.
கவலை நீங்கும்
இதுவரை இருந்து வந்த கவலைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். இவர்தான் வாழ்க்கை துணை என்று தெரிந்து கொள்ளும் யோகம் உண்டாகும். ஆணுக்கு பெண்ணாலும், பெண்ணுக்கு ஆனாலும் அனுசரணை ஏற்படும். காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு மீண்டும் காதல் வரக்கூடிய அமைப்புள்ளது.
பிரபலமாகும் யோகம்
5, 10 ஆம் இடங்கள் வலுவாக இருப்பதால் வேலையில் நிம்மதி இருக்கும். புதிய காதல் வரேவற்கும் வகையில் திருமணத்தில் முடியும் யோகம் உண்டு. சோஷியல் மீடியாவில் பிரபலமாக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல மாதமாக இருக்கும். பிரபலமடையும் யோகமும், அதன் மூலம் நல்ல வருமானங்கள் கிடைக்கும் யோகமும் உண்டு. நல்ல வழிகாட்டுதல்கள், ஐடியாக்கள் கிடைக்கும்.
செலவு, வருமானம்
இந்த மே மாதத்தில் அதிகளவிலான செலவுகள் இருந்தாலும் நல்ல வருமானங்கள் உண்டாகும். எவ்வளவு அதிகமான செலவுகள் இருந்தாலும் கடன் வாங்குவதற்கான வாய்ப்பு இருக்காது. 20 ஆம் தேதிக்குப் பிறகு நல்ல வருமானங்கள் கிடைக்கும். கடைசி 10 நாட்கள் நிறைவான வருமானம் கிடைக்கும். சிலருக்கு நல்ல வேலைமாற்றம் உண்டாகும்.
சொந்த வீடு
புதிய வேலைகள் கிடைக்கும். வேலை போனாலும் கவலைப்படத் தேவையில்லை. அதிக சம்பளத்துடன் வேலை கிடைப்பது, புதிய தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். வெளிநாடு, வெளிமாநிலம் தொலைதூரத்தில் இருப்பவர்களுக்கு இருக்கும் இடத்திலேயே சொந்த வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டு. அற்புதமான மாதமாக இந்த மே மாதம் உங்களுக்கு அமையும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications