Magaram Rasi Palan: சொல்லி அடிக்கும் மகர ராசி.. ஜாக்பாட் அடிப்பது கன்ஃபார்ம்

Subscribe to Oneindia Tamil

Magaram Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் (Magaram Rasi Palan).

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

magaram-rasi-palan-what-kind-of-benefits-will-get-magaram-rasi-people-from-february-16-to-22

மாசி மாதம் பிறந்துள்ளது. பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

மகரம் ராசி பலன் (Magaram Rasi Palan)

மகரம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அற்புதமான காலகட்டமா இருக்கும். எடுத்த காரியங்களில் எல்லாமே வெற்றி ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விட்டுக் கொடுக்கக்கூடிய மனப்பான்மை அதிகரிக்கும். கண் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். இந்த வாரம் முழுக்க உங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

ஆரோக்கியம்

காது, மூக்கு, தொண்டை, சைனஸ், ஒற்றை தலைவலி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. வார்த்தைகளில் அதீத கவனமாக இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் உண்டாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். தொழிலில் வேண்டாமென்று சொன்னாலும் கூட தனித்தொழில் தொடங்கி வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

தடைகள் நீங்கும்

படிப்பு, உத்தியோகம், வியாபாரம், தொழிலில் இருந்த தடைகள் எல்லாம் தவிடுபொடியாகும் காலகட்டம். தனிப்பட்ட விஷயங்களில் பிரம்மாண்டமான ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். உத்தியோகத்தில் சகலவித நன்மைகள் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் நன்மையை ஏற்படுத்தும். சிக்கல்கள், பாதிப்புகள், கஷ்டங்கள் எல்லாம் நீங்கி வசந்தம் ஏற்படும்.

அனுகூலம்

எடுக்கக்கூடிய முடிவுகள் பலரால் பாரட்டப்படக்கூடிய அமைப்பு ஏற்படும். அனுகூலமும், சந்தோஷமும் மிகப்பெரிய நன்மையை ஏற்படுத்தும். இளம்வயதை சார்ந்த மகர ராசியினருக்கு மனக் கஷ்டங்களும், பணக் கஷ்டங்கள் அனைத்தும் தீரக்கூடிய அமைப்பு. குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாகனத்திலும், வார்த்தைகளிலும், நரம்பு தொடர்பான விஷயங்களிலும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.

வழிபாடு

பொருளாதார விஷயத்தில் குடும்பத்தில் மட்டும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. இடமாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் கைகூடக் கூடிய அற்புதமான காலகட்டம். ஆஞ்சநேயர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+