"அய்யோ பாதளக் கிணறு".. மகர ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி.. ரொம்ப கவனம்
Weekly Rasi Palan: ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி (ஆவணி 3 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி (ஆவணி 3 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன்
மகரம் ராசியினர் ஆவணி மாதத்தில் வாகனத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கையெழுத்து போடுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை படித்து பார்த்துக் கொள்வது நல்லது. சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களில் ஈடுபடுவோரின் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வேறு மாநிலம், வேறு மொழி பேசும் இடத்திற்குச் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
கவனம்
அற்புதமான வாரமாக இருக்கும். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். அஷ்டமத்தில் சூரியன் கேது இருப்பதால் உடல் சூடு, பின்புற வலி, முதுகு வலி, வயிறு எரிச்சல் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. பெண்கள் சம்பந்தப்பட் விஷயம், வண்டி வாகனங்கள் தொடர்பான விஷயங்களில் விபத்து, வண்டியை மாற்றுவது, பழுது போன்றவை ஏற்படும்.
குரு பார்வை
குரு, புதன் பார்வை இருப்பதால் ரிலேசன்ஷிப் நன்றாக இருக்கும். புதிய நண்பர்கள், புதிய பார்ட்னர்கள் கிடைப்பார்கள். பெரிதாக கவலைப்படும் அளவுக்கு எந்தவொரு விஷயமும் நடக்காது. ஆன்மீகத்தில் நாட்டம், உயர்வு ஏற்படும். உபவாசம் செய்வது, சுவாமியை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். பூதராஜர் வழிபாடு ஏற்றத்தைத் தரும்.
நிதானம்
எந்தவொரு விஷயத்திலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. பொதுஇடங்கள், பயணங்கள் செல்லும் இடத்தில் கவனம் தேவை. பாஸ்போர்ட்களை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அஷ்டமத்தில் சூரியன், கேது இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தினந்தோறும் காரியசித்தி மாலை கேட்பது ஏற்றத்தைத் தரும்.
வழிபாடு
சனியின் அதிபதியான ராசி என்பதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், ரத்த அழுத்தம் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பூதராஜர் சுவாமி வழிபாடு ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 65 சதவீதம் நன்மையைத் தரும்.


Click it and Unblock the Notifications
