Magaram: சிகரம் தொடும் மகர ராசி.. பணத்திற்குப் பஞ்சமே இருக்காது
Magaram Rasi Palan: மே 11 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை, சித்திரை 28 ஆம் தேதி முதல் வைகாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த வாரம் சித்திரை முடிந்து வைகாசி மாதம் பிறக்கிறது. அந்த வகையில், மே 11 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை, சித்திரை 28 ஆம் தேதி முதல் வைகாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மகர ராசி பலன் (Magaram Rasi Palan)
மகர ராசியினருக்கு தனிப்பட்ட முறையில் யோகம், சந்தோஷம் உண்டாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். நரம்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் இல்லாமல் உறுதுணையாக இருப்பது நன்மையை ஏற்படுத்தும்.
சிக்கல் தீரும்
வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள், சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும். நீண்ட நாட்களாக இருந்த தடைகள் தவிடு பொடியாகும். நிறைய நன்மைகள் ஏற்படும் காலகட்டம். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். சிறு சிறு தடைகள் காணப்பட்டாலும் விநாயகர் வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
பொறுப்பு
வீடு கட்டும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் ஒரு பெரிய பொறுப்பு வந்து சேரும். மார்பகம், நெஞ்சகம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நீர் கோர்ப்பது போன்ற பாதிப்பு ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் முகம், கண், பல் தொடர்பான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உங்களுக்கு காய்ச்சல், சளி பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
பணவரவு
பணத்திற்கு எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது. உங்களுடைய நிலைமை மாறும். திட்டமிட்ட காரியங்களை நடத்தி முடிப்பீர்கள். புதிய விஷயங்களை தைரியமாக எடுத்து செய்வீர்கள். நேர்மையாக இருக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். நிதி, ஆடிட்டிங், மீடியா துறையில் இருப்பவர்களுக்கு திருமணம் செய்யக்கூடிய யோகம் உண்டாகும். வேலை மாற்றம் உறுதியாக நடக்கும்.
கவனம்
பணத்தை மற்றவர்களிடம் கொடுத்து சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பிள்ளைகளின் கண்ணாடியை மாற்றுவது, உங்களுக்கு மூங்கில் சேர் வாங்குவது நன்மையைத் தரும். மனதாரா சந்தோஷம் பெறும் காலகட்டமாக இருக்கும். அடிவயிறு, கழிவுகள் செல்லும் பாதைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்சும். சந்தோஷம் 70 சதவீதமும், பொருளாதாரம் 90 சதவீதமும் நன்றாக இருக்க வேண்டும்.
வழிபாடு
ஹயக்ரீவர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். மதிப்பு, கெளரவம் ஏற்படும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் அனுகூலம் காணப்படும். ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தூக்கமின்மையைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.
-
குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்கு பேச்சில் தான் கண்டமே.. இந்த விஷயங்களை செய்திடவே செய்திடாதீங்க -
Guru Peyarchi: கும்ப ராசிக்கு காத்திருக்கும் ஆபத்து.. இந்த விஷயங்களில் மிகுந்த கவனம் அவசியம் -
Guru Peyarchi: மகர ராசிக்கு காத்திருக்கும் ராஜவாழ்க்கை.. இந்த விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் -
Guru Peyarchi: தனுசு ராசியினரே தயாராகுங்கள்! குரு தரப்போகும் அபார யோகங்கள் -
விருச்சிகத்துக்கு பொற்காலம் ஆரம்பம்.. குருவின் அருளால் வரப்போகும் ராஜயோகம் -
Guru Peyarchi: கிங்காக மாறப்போகும் துலாம் ராசி.. 10 இல் வரும் குரு அள்ளித் தரும் அதிர்ஷ்ட யோகங்கள் -
அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. லாபத்தில் குரு.. கன்னி ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட் -
குரு 12-இல்.. சிம்ம ராசிக்கு வெளிநாட்டு யோகம், புதிய வாய்ப்புகள்.. வாழ்க்கையில் பெரிய திருப்பம்! -
Guru Peyarchi: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரும் குருப்பெயர்ச்சி.. வாழ்க்கையை மாற்றும் 3 விஷயங்கள் -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. வேலையில் முன்னேற்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications