Magaram: மகர ராசியினருக்கு சோம்பல் தான் எதிரி.. ஆகஸ்ட் மாதத்தில் அதிர்ஷ்டமும் காத்திருக்கு

Subscribe to Oneindia Tamil

ஆகஸ்ட் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஆடி அமாவாசை வருகிறது. பித்ருக்களான தர்ப்பணங்களை இந்த நாளில் செய்வது நன்மையைத் தரும். ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு மேல் ஆவணி மாதம் பிறக்கவுள்ளது. ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கல் வைப்பது நன்மை பயக்கும். ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஆவணி அவிட்டம் வருகிறது. இந்த நாளில் கல்வியைத் தொடங்குவது ஏற்றத்தைத் தரும்.

magaram-rasi-palan-what-kind-of-benifts-will-get-magaram-rasi-people-in-this-august-month

பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் வலுவிலந்து காணப்படுவதால் வண்டி, வாகனங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறு பிள்ளைகளுக்கு பிரச்சனையாக இருப்பது நல்லது. குறிப்பாக பெண்கள், பெண் குழந்தைகள் கவனமாக இருப்பது நல்லது. அந்த வகையில், மகர ராசியினருக்கு இந்த மாதம் எப்படி அமையும் என்று பார்க்கலாம்.

மகரம் ராசி பலன்

மகர ராசி பெண்களுக்கு சோம்பல் எட்டிப் பார்க்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். இருப்பினும், வேலை, தொழில், உத்தியோகம், திருமண வாழ்க்கை என அனைத்து விஷயங்களிலும் சந்தோஷம் ஏற்படும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ராசியை உச்ச குரு பார்ப்பதால் எந்த விதத்திலும் தான் குறைந்தவர் இல்லை என்கிற நம்பிக்கை ஏற்படும். தள்ளிப் போடுவதையும், சோம்பலையும் தவிர்த்துக் கொள்வது ஏற்றத்தைத் தரும்.

பிரச்சனை நீங்கும்

கணவன், மனைவிக்குள் மூன்றாம் நபர்கள் தலையீட்டால் அதிகளவிலான பிரச்சனைகள் வந்திருக்கும். தள்ளிப்போடும் தன்மை இருந்தாலும் திருமண வாழ்க்கையில் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது. கணவன், மனைவிக்குள் மூன்றாம் நபர்களால் இருந்து வந்த பிரச்சனை படிப்படியாக நீங்கும். நிறைய ரகசியங்களை இனி காக்க ஆரம்பிப்பீர்கள். சோஷியல் மீடியா வாழ்க்கையை கொஞ்சம் தவிர்த்துக் கொள்வது நல்லது.

கவனம்

மலச்சிக்கல், காது, மூக்கு, தொண்டையில் சில பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் அதீத விடுமுறை எடுக்கும் நிலைமைகள் போன்றவை இருக்கும். திட்டமிட்டு போட்ட பயணங்களைத் தவிர்க்கும் சூழல் ஏற்படும். இந்த மாதத்தில்நீங்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் வேகமாக செல்வது, இரவுப் பயணங்களைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.

வெளிநாடு யோகம்

வெளிநாடு செல்வதற்கான யோகம் உண்டாகும். 12 ஆம் அதிபதி உச்சமாகியுள்ளதால் வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் சேரும் யோகம் உண்டாகும். உங்களை விட உங்கள் கணவருக்கு வெளிநாடு செல்லும் அமைப்பு ஏற்படும். அவர்கள் மூலமாக நீங்களும் வெளிநாடு செல்லக்கூடிய அமைப்பு உள்ளது. மாரியம்மன் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.

வழிபாடு

வெள்ளிக்கிழமை தோறும் அம்பாள், மாரியம்மன் வழிபாடு நன்மையைத் தரும். வயதிற்கு தகுந்தவாறு தினந்தோறும் நடைப்பயிற்சி செய்வது நன்மையைத் தரும். வியர்வை வரும் வேலைகளைச் செய்வது ஏற்றத்தை தரும். வயதாவர்களுக்கு உதவுவது மேன்மையை ஏற்படுத்தும். அதிர்ஷ்ட நிறம் கருப்பு, நீலம். அதிர்ஷமான எண் - 8. 10க்கு 9.5 சதவீதம் நன்மைகள் கிடைக்கும் நல்ல காலகட்டம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+