Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொத்துகளைக் குவிக்கப் போகும் மகர ராசி.. வீடு, நிலம், இடம்னு லைப் செட்டிலாகப் போகுது.. கவனமும் தேவை

Subscribe to Oneindia Tamil

செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூலை 28 முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் செவ்வாய்ப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த செவ்வாய் பெயர்ச்சியின்போது மகர ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய் பகவான் சகோதரக்காரகன். நிலம், பூமிக்கு அதிபதியானவர். ரத்தத்துக்கும், ஆக்ரோஷத்துக்கும், கோபத்துக்கும் காரணமானவர். கட்டிடம், நெருப்பு, சிவப்பு நிறம், உடற்பயிற்சி, விளையாட்டுத் துறைக்கு தொடர்பானது செவ்வாய் கிரகம். இந்த செவ்வாய் பகவான் ஜூலை 28 ஆம் தேதி சிம்மத்தில் இருந்து கன்னி மனைக்கு பெயர்ச்சி ஆகப்போகிறார். செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி வரையிலான 48 நாட்கள் கன்னியில் இருந்து செவ்வாய் பகவான் பலனைக் கொடுக்கப் போகிறார்.

Sevvai peyarchi palangal Magaram lucky zodiac signs

இந்த காலகட்டத்தில் உத்திர நட்சத்திரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை சூரிய பகவானின் நடசத்திரத்தில் பயணம் செய்கிறார். ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அஸ்தம் எனும் சந்திரனின் நட்சத்திரத்திலும், செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தனது சொந்த நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் பயணம் செய்யப் போகிறார்.

இந்த செவ்வாய்ப் பெயர்ச்சி காலகட்டத்தின்போது மகர ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்கள், மாற்றங்கள் நமக்கு கிடைக்கும். எந்த தெய்வ வழிபாடு உகந்தது என்பது குறித்து பார்க்கலாம்.

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு 9 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் அமருகிறார். உங்களுக்கு 4க்கு உரியவர் சுகத்தை கொடுக்கக் கூடியவர். வீடு, வண்டி, வாகனம் ஸ்தானத்தின் அதிபதி, 11க்கு உரியவர் லாபத்தைக் கொடுக்கக் கூடியவர். பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் அமரப் போகிறார். கடந்த சில மாதங்களாகவே செவ்வாய் பகவான் நீச்சத் தன்மையில் இருந்திருப்பார். ஏதாவதொரு தொல்லைகளை சந்தித்து வந்திருப்பீர்கள். இந்த செவ்வாய் பெயர்ச்சி காலகட்டத்தில் நல்லவை நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

வீடு வாங்கும் யோகம்

வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு, நிலம் வாங்குவதில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். பிடித்த வீட்டை, நிலம், இடத்தை வாங்குவீர்கள். வீட்டை புனரமைப்பது, வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது, வீடு சம்பந்தப்பட்ட எண்ணங்கள் வரும். தாயின் உடல்நலம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். உங்கள் உடல்நலப் பிரச்சனைகளுக்கு சரியான மருத்துவம் கிடைக்கும்.

பணவரவு கிடைக்கும்

தொழில், வேலைக்கான பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். லாபாதிபதி தனக்கு 11 ஆம் இடத்தில் இருப்பதால் செய்யக்கூடிய தொழிலின் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும். விற்பனையாகாத விஷயங்கள் அனைத்தும் விற்பனையாகும். வியாபாரம் நன்றாக இருக்கும். கன்சல்டன்சி, தரகு தொழிலில் லாபம் கிடைக்கும். புத்திசாலித்தனம், ஐடி துறை மூலமாக நல்ல பண வரவு கிடைக்கும். ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் செவ்வாய் பகவான் உத்திரம் நட்சத்திரத்தில் பயணிக்கிறது. தந்தையின் ஆரோக்கியம், தந்தை சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

திருமண யோகம்

அரசு சார்ந்த, அரசு விரோதம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வலியைக் கொடுத்துக் கொண்டிருந்த விஷயங்கள் உங்களுக்கு பாக்கியமாக மாறும். வழக்கில் இருந்து விடுதலை அடைவீர்கள். நிலம், இடங்களில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் செவ்வாய் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை பயணிப்பதால் திருமண எண்ணங்கள் வரும். திருமணமானவர்கள் வீடு வாங்குவது, இடமாற்றம் ஆகும் யோகம் உண்டாகும்.

நில பிரச்சனை தீரும்

கணவன், மனைவிக்கு வேலையில் செட்டிலாகும் யோகம் பெறுவீர்கள். இடம், நிலம் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். சமுதாயம் சார்ந்த எண்ணங்கள், பொதுப் பணிகளில் ஈடுபடுவீர்கள். அதன் மூலம் உங்களுக்கு மதிப்பு, மரியாதை கிடைக்கும். தாய் சார்ந்த விஷயங்கள் சிறப்பு பெறும். மனதில் இருந்து வந்த ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுவீர்கள். தூர தேசப் பிரயாணம், கடல் கடந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்நிய தேசம் சென்று வரும் யோகம் உண்டு.

சம்பள உயர்வு

செப்டம்பர் 3 முதல் 12 ஆம் தேதி வரை செவ்வாய் தனது சொந்த நட்சத்திரத்தில் பயணிக்கும்போது செவ்வாய் வலுப்பெறும். சீருடை அணிந்து பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, வளர்ச்சி, அதிகாரம், நிர்வாகம் ஆகியவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வெளிநாட்டுக்குச் சென்று உயர்கல்வி படிக்கும் யோகம் உண்டாகும். படிப்பில் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+