Rasi Palan This Week: உங்க பேச்சை இனி ஊரே கேட்கும்.. மகர ராசிக்கு உயரும் செல்வாக்கு

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான ஆவணி 23 முதல் ஆவணி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Weekly rasi palan Magaram Lucky zodiac signs

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். பொதுவாக இந்த மாதம் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.

சூரிய கிரகணம், குரு வக்கிர பெயர்ச்சி உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், செப்டம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எல்லாவற்றிலும் மிகுந்த கவனமாக இருப்பது அவசியம். உத்யோகம், தொழில் இரண்டிலும் அதிக விழிப்புடன் செயல்படுங்கள் உத்யோகத்தில் உயரதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் அகல கால் வைக்க வேண்டாம். எனவே இருப்பதை தக்க வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.

மரியாதை

இந்த தடைகளையும் கடந்து உத்யோகம், தொழிலில், வியாபாரம் ஆகிய மூன்றிலும் சீரான முன்னேற்றம் நிச்சயம் இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகி நிம்மதியான சூழல் உருவாகும். உங்களின் வாக்கு ஸ்தானம் பலமடைகிறது. குடும்பம் மற்றும் உத்யோகம், தொழிலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் பேச்சுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். சுப செலவுகள் அதிகமாகும்.

கவனம்

வண்டி, வாகனத்தில் மிகவும் கவனமாக பயணிக்க வேண்டும். அதிவேகம், வித்தைக் காட்டுவது ஆபத்தில் முடியும். இரவு நேர பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. அவ்வபோது மன அழுத்தம், தூக்கமின்மை பிரச்சனை வந்து செல்லும். உடற்பயிற்சி, தியானம், யோகா மூலம் மனதை ஒருநிலைப்படுத்தலாம். இல்லையென்றால் மிகப்பெரிய சிரமத்தில் மாட்டிக் கொள்வீர்கள். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். உத்யோகம், தொழிலில் பொறுமையாக இருக்க வேண்டும்.

பரிகாரம்

அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்துவிட வேண்டாம். எல்லாவற்றிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பணிச்சுமை, அலைச்சல் அதிகமாக இருக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். ஆவணி மாதம் நிறைவடைந்த பிறகு நிலைமை படிப்படியாக மாறும். உங்கள் வீட்டின் அருகே உள்ள பிள்ளையார் கோயில் சென்று வழிபடுவது சகல விஷயங்களிலும் ஏற்றத்தை கொடுக்கும். தினசரி காயத்ரி ஜெபம் உச்சரிப்பது மனதில் நேர்மறையான சிந்தனைகளை உருவாக்கி வெற்றிக்கு வித்திடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+