தை மாதம் பிறந்ததும்.. பொங்கலுக்குப் பிறகு நல்ல நேரம் பிறக்கப்போகும் ராசிகள்?
மகர சங்கராந்தி 2025: மகர ராசிக்குள் பெயர்ச்சியாகும் சூரிய பகவானால் 4 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் ஆரம்பிக்கப் போகிறது. அந்த வகையில், அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் யோக ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.. (Makara Sankaranti 2025)
கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுபவர் சூரிய பகவான். சூரிய பகவான் மகர சங்கராந்தியான பொங்கல் பண்டிகையன்று தனது ராசியை மாற்றுகிறார். ஜனவரி 14 ஆம் தேதி சூரிய பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அன்றைய தினம் சூரிய பகவான் தட்சிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு இடம்பெயருகிறார். அன்றைய தினம் தான் மகர சங்கராந்தி கொண்டாடப்படும்.

ஜனவரி 14 ஆம் தேதி காலை 9.03 மணிக்கு சூரிய பகவான் மகர ராசியில் பிரவேசிக்கவுள்ளார். பிப்ரவரி 12 ஆம் தேதி இரவு 10.03 மணி வரை மகர ராசியில் தங்கவுள்ளார். சூரியனின் இந்த இடப்பெயர்ச்சியால் தை மாதம் முதல் 4 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் ஆரம்பிக்கப் போகிறது. சாதகமான பல்வேறு நற்பலன்களைத் தரப் போகிறது. எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தைப் பெறப் போகின்றனர் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்: தை மாதம் முதல் சூரியனின் ராசி மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் காலமாக இருக்கும். ஜனவரி 14 முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை அனைத்து விதமான நல்ல காரியங்களும் நடக்கும். பணத்திற்குப் பஞ்சம் ஏற்படாது. பொருளாதார சூழல் மேம்படும். வருமானம் பெருகும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். நீங்கள் விருப்பப்பட்ட வேலைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதிர்ஷ்டம் குறைவில்லாமல் இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் காண்பீர்கள். முன்னேற்றமான காலமாக இருக்கும். உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை பொது வெளியில் கூறாமல் இருப்பது நல்லது.
சிம்மம்: சூரியனின் இடப்பெயர்ச்சியால் பிறக்கும் தை மாதத்தில் நல்ல பலன்களை சிம்ம ராசியினர் பெறப் போகின்றனர். சிம்ம ராசிக்கு அதிபதியே சூரியன் என்பதாலும், மகர ராசியில் பிரவேசிப்பதாலும் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். பண வரவு உண்டாகும். நிதி சார்ந்த விஷயங்களில் லாபத்தைக் காண்பீர்கள். பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. திடீர் பண வரவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. முதலீடுகளில் லாபத்தை காண்பீர்கள். எடுத்த காரியங்களிலும், முயற்சிகளிலும் வெற்றியடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
விருச்சிகம்: சூரியனின் ராசி மாற்றம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொடுக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உருவாகும். பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெறுவதற்கான யோகங்கள் ஏற்படும். உங்களுடைய கனவுகள் நிறைவேறும். வீட்டில் சுப காரியங்கள் செய்வதற்கான சூழல் உருவாகும். தை மாதம் சிறப்பான காரியங்களை செய்து முடிக்கும் காலமாக இருக்கும்.
மகரம்: மகர ராசிக்கு இடம்பெயரும் சூரியனால் தை மாதத்தில் சாதகமான பலன்களை அனுபவிப்பீர்கள். எடுத்த காரியங்களை சுறுசுறுப்பாக செய்து முடித்து நற்பெயர் வாங்குவீர்கள். அதனால் ஆதாயத்தையும் பெறுவீர்கள். உங்களுடைய புகழும், பெருமையும் உயரும் காலமாக இருக்கும். வேலை வாய்ப்புகள் அமையும், சமூகத்துடனான தொடர்புகள் அதிகரிக்கும். சமுதாயத்தில் அந்தஸ்தில் இருப்பவர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இதனால், அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவீர்கள். நிதி சார்ந்த விஷயங்களில் லாபத்தைக் காண்பீர்கள். பொருளாதாரம் வலுவடையும்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications