உத்தியோகம், தொழிலில் செம அதிர்ஷ்டம்.. மகரம் ராசிக்கு சர்ப்ரைஸ் தரும் மாசி மாதம்
மாசி மாதம்: தமிழ் மாதங்களின் அடிப்படையில் நாம் தற்போது தை மாத இறுதியில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் (13.2.2025 தேதி முதல் 14.3.2025 தேதி வரை) கிரகங்களின் மாற்றம் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மகர ராசியில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்களை காணலாம்.
உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சனி, புதன், சூரியன் ஆகிய 3 கிரகங்கள் உள்ளன. மூன்றாம் இடமான தைரிய, வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று ராகுவுடன் இணைந்திருக்கிறார்கள். ராசிக்கு ஐந்தாம் இடத்தில் குரு பகவான் உள்ளார். சுக்கிரன் - குரு பரிவர்த்தனை நடைபெறவுள்ளது. ஆறாம் இடத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்துள்ளார். ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் கேது அமர்ந்துள்ளார்.

மாசி 1 ஆம் தேதி (13.2.2025) சூரிய பகவான் உங்கள் இரண்டாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். மாசி 12 ஆம் தேதி (24.2.2025) ஆறாம் இடத்தில் செவ்வாய் வக்கிர நிவர்த்தி அடைகிறார். மாசி 15 ஆம் தேதி (27.2.2025) புதன் உங்களின் இரண்டாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்கு பெயர்ச்சியாக உள்ளார்.
மீன ராசியில் புதன் நீசமாகப் போகிறார். அதே ராசியில் சுக்கிரன் உச்சத்திலும், குரு பரிவர்த்தனையால் நீச்சபங்க ராஜயோகம் கிடைக்கும். ஒரு கிரகம் உச்சத்தில் இருந்து மற்றொரு கிரகம் நீச்சமாகும்போது. அதை நீச்சபங்க ராஜயோகம் என்பார்கள். இது நல்ல பலன்களை தரும். மாசி 17 ஆம் தேதி (1.3.2025) உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சுக்கிரன் வக்கிரமாக போகிறார்.
சூரிய பகவான் மூன்றாம் இடத்தில் இருந்து ஏராளமான கஷ்டங்களை கொடுத்திருப்பார். அவர் இரண்டாம் இடத்துக்கு மாறுவதால் உங்களுக்கு வரவேண்டிய பழைய பாக்கி வசூலாகும். குடும்ப உறுப்பினர்களின் பிணைப்பு பலமாகும். வாழ்க்கை துணை மூலம் ஆதாயமடைவீர்கள். வருவாய் பெருகி, சேமிப்பு அதிகரிக்கும். லாட்டரியில் நல்ல அதிர்ஷ்டம் உள்ளது. எதிர்பாராத வருவாய் கிடைக்கும்.
குடும்பத்தில் உள்ள நன்மைகள் வெளிப்படும். பிரச்னைகளும் படிப்படியாக குறையும். செவ்வாய் வக்கிரத்தால் நிலம், வீடு, வாகனம், அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கான சூழல் உள்ளது. இதுதொடர்பான கடனும் எளிதில் கிடைக்கும். தொழிலில் முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் திறமையால் எதிரிகளை எளிதில் வீழ்த்துவீர்கள்.
வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வெளிநாடு, வெளிமாநில வேலை வாய்ப்புகளால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். வீடு, நிலம் வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் இது உகந்த காலம். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியம் உண்டாகும். தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும்.
உங்கள் ராசி அதிபதி சனியை சூரியன் அஸ்தமனம் செய்வதால், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பணியிடத்தில் கவனமாக பேச வேண்டும். குடும்பத்தில் பணம் கொடுக்கல் - வாங்கலில் சங்கடம் ஏற்படும். அதனால் பணம் கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். வாக்கு ஸ்தானம் பலவீனமாக இருப்பதால் எந்த இடத்திலும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம்.
நண்பர்கள் விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். பணிச்சுமை அதிகரிக்கும். தாய் வழி உறவுகளிடமும் சற்று கவனமாக இருப்பது நல்லது. கோபத்தை தவிர்க்கவும். குழந்தைகளின் உடல்நலத்திலும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். கணவன் - மனைவி இடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் நீங்கும். கவலைகள் நீங்க அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வரலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications