மகர ராசிக்கு தங்க வேட்டை.. வாழ்க்கையை புரட்டி போடும் அதிர்ஷ்டம்
வார ராசி பலன்: புதிய நம்பிக்கை, எதிர்பார்ப்புகளுடன் இந்த வாரம் தொடங்கியுள்ளது. தடைபட்ட காரியங்கள் இந்த வாரத்திலாவது நடைபெறுமா என்று ஆவலுடன் காத்திருப்பார்கள். அந்த வகையில் இந்த வாரத்தில் மகரம் ராசிக்கு கிடைக்கக் கூடிய பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
நம் ராசி பலன்களுக்கு சனி, குரு, ராகு கேது மாறியான கிரகங்களின் அமைப்பு மட்டுமே முக்கியமல்ல. வருடாந்திர பெயர்ச்சியாகும் கிரகங்களை போலவே மாதந்திர பெயர்ச்சியாகும் கிரகங்களின் அமைப்பு முக்கியம். ஒவ்வொரு வாரமும் கிரக நிலைகளில் மாற்ற இருக்கும். ஆனி மாதத்தின் கடைசி மாதமாகும்.

அடுத்த வாரம் ஆடி மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் 7.7.2025 முதல் 13.7.2025 வரையிலான காலகட்டத்தில் 12 ராசிகளுக்குமான வார ராசி பலன்களை ஒவ்வொன்றாக காணலாம். இந்தக் கட்டுரையில் மகரம் ராசிக்கான பலன்களை காணலாம்.
மகரம்
மகரம் ராசியினர் இந்த வாரத்தில் அதிகளவு நற்பலன்களை பெறப் போகிறீர்கள். தொட்டதில் எல்லாம் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். கடவுளின் அனுகிரகத்தால் மனதில் நினைத்த காரியங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேறும். மனதில் இருந்த கவலைகள் முற்றிலும் நீங்கி மனதில் மகிழ்ச்சி பொங்கும்.
உத்யோகம், தொழில்
எட்டாம் அதிபதியான சூரியன் ஆறாம் இடத்தில் இருக்கிறார். இது அற்புதமான பலன்களை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் நீண்ட காலமாக இருந்தப் பிரச்னையில் நிவர்த்தி காணப்படும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை உணர்வீர்கள். உத்யோகம், தொழிலில் உயர்வு காணப்படும். முதலீட்டில் லாபம் சிறப்பாகவே இருக்கும்.
லாபம்
கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுப காரிய தடைகள் விலகும். திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். நிலம், வீடு, ஆபரணங்கள், வண்டி, வாகனம் உள்ளிட்ட அசையும், அசையா சொத்துகளின் சேர்க்கை இருக்கும். பங்குச்சந்தை, தங்கம் ஆகியவற்றில் செய்யும் முதலீடுகளில் சிறப்பான லாபம் கிடைக்கும்.
முன்னேற்றம்
வீட்டில் நீண்ட காலமாக திட்டமிட்ட புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வீர்கள். சுப செலவுகள் அதிகளவு இருக்கும். தொழிலில் இருந்த கஷ்டங்கள தீரும். வாழ்க்கை முன்னேற்ற பாதையில் பயணிக்க தொடங்கும். உத்யோகத்தில் அற்புதமான முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கைக்கொடுக்கும். நிலம் வாங்குவது, விற்பது நடைபெறும்.
பரிகாரம்
அரசு, அரசியல் துறையினர் நல்ல ஏற்றம் காண்பார்கள். எதிலும் துணிந்து ரிஸ்க் எடுக்கலாம். புதிய பொறுப்புகள் தேடி வரும். சின்ன சின்ன வீண் விரயம் இருந்தாலும் பண வரவில் குறை இருக்காது. வயிறு, மலக்குடல், சிறுநீரகம் சம்ந்தப்பட்ட பிரச்னை இருப்போர் மட்டும் ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெருமாள் வழிபாடு சிறப்பான ஏற்றத்தை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications