மார்ச் மாத ராசிபலன் 2022: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் பிறந்தாச்சு
மார்ச் மாதம் நவகிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும், அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: சூரியபகவான் கும்ப ராசியில் பாதி நாட்களும் மீன ராசியில் பாதி நாட்களும் பயணம் செய்கிறார். சனி, செவ்வாய், சுக்கிரன்,புதன் என கிரகங்கள் மகர ராசியில் இணைந்திருக்கின்றன. ராகு ரிஷபத்திலும் கேது விருச்சிக ராசியிலும் பயணம் செய்கின்றன. கிரகங்களின் கூட்டணி பார்வையால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளில் பிறந்தவர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
மார்ச் 6ஆம் தேதி புதன் பெயர்ச்சி நிகழப்போகிறது. மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி. மார்ச் 24ஆம் தேதி மீன ராசிக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி அடைகிறார். 15ஆம் தேதி சூரியன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
மழை காலமும் பனி காலமும் முடிந்து இன்னும் சில நாட்களில் வசந்த காலம் தொடங்கப்போகிறது. மாசி, பங்குனி இணைந்த மார்ச் மாதத்தில் துலாம்,விருச்சிகம், தனுசு ராசிகளில் பிறந்தவர்களுக்கு பண வரவு வருமா? வேலையில் புரமோசன் கிடைக்குமா என்று பார்க்கலாம்.

துலாம்
துலாம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு இரண்டாவது வீட்டில் கேது, நான்காம் வீட்டில் சனி, சுக்கிரன், செவ்வாய், புதன் என கிரகங்கள் இணைந்துள்ளன. ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு சூரியன் இணைந்துள்ளன. எட்டாம் வீட்டில் ராகு பயணம் செய்கிறார். 10, 11ஆம் வீடுகளில் கிரகங்களின் பார்வை விழுகிறது. உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமும் பூர்வ புண்ணிய ஸ்தானமும் வலுவடைந்துள்ளது. நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருந்த பிரச்சினை நீங்கும். வேலையில் மாற்றம் கிடைக்கும். இடமாற்றம் உண்டாகும். வெளிநாடு செல்லும் யோகம் வரும்.

திருமண சுப காரியம் கை கூடும்
நல்ல நேரம் கை கூடி வந்துள்ளது. சாதகமான மாதமாக அமைந்துள்ளது. லாப ஸ்தானத்தில் குரு பார்வை படுவதால் வீடு கட்ட, பிசினஸ் ஆரம்பிக்க வங்கி லோன் கிடைக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும். பதவியில் பாராட்டும் சம்பள உயர்வும் கிடைக்கும். சொத்து சேர்க்கை, வண்டி வாகன யோகம் வாங்க நேரம் கை கூடி வந்துள்ளது. திருமணம் சுப காரியம் தடைகளைத் தாண்டி கை கூடி வரும். வரன்பார்க்க ஆரம்பிக்கலாம். காதல் வாழ்க்கை திருமணத்தில் முடிய வாய்ப்பு உள்ளது. பேச்சுக்களில் கவனம் தேவை, விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வெளிப்படையாக பேசி காரியம் சாதிக்கலாம். குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் மாதமாக அமைந்துள்ளது. மாணவர்களின் முயற்சிகள் கை கூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சின்னச்சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை.

விருச்சிகம்
செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்கள் ராசிக்குள் கேது, மூன்றாம் வீட்டில் சனி, செவ்வாய், சுக்கிரன், புதன், நான்காம் வீட்டில் குரு, சூரியன்,ஏழாம் வீட்டில் ராகு என கிரகங்கள் கூடியுள்ளன. இந்த மாதம் உங்கள் ராசிக்கு கிரகங்கள் சுபமாக உள்ளன. ராசிநாதன் உச்சம் பெற்றுள்ளார். வேலையில் அற்புதமான காலமாக உள்ளது. உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும். முழு உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். சூரியன் பார்வை தொழில் ஸ்தானத்தில் விழுகிறது. குருவும் பார்வையிடுவதால் வேலைக்கு செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும்.

சந்தோஷம் அதிகரிக்கும்
குருவின் பார்வை பலத்தால் மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதனின் பெயர்ச்சியால் உங்களுக்கு யோகம் கை கூடி வருகிறது. மாணவர்களுக்கு நல்ல மாதம். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நன்றாக தேர்வுகளை எதிர்கொள்வீர்கள். சுக்கிரன் பார்வையால் செவ்வாய் சுக்கிரன் கூட்டணியால் திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. வரன் பேசி முடிக்கலாம். சகோதர சகோதரி வீட்டு விசேசங்களில் பங்கேற்பீர்கள். புதிய காதல் வரும். மனதில் காதல் மணியடிக்கும். திருமணம் முடிந்த தம்பதியினருக்கு நெருக்கம் கூடும். புத்திரபாக்கியம் கை கூடி வரும். ஆலய தரிசனத்திற்கான சிறு பயணம் செல்வதற்கு ஏற்ற மாதம். உறவினர்களுடன் கூடி மகிழ்வீர்கள்.

தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சனி, செவ்வாய், சுக்கிரன், புதன் கூடியுள்ளன. மூன்றாம் வீட்டில் குருவும் சூரியனும் இணைந்துள்ளன. விரைய ஸ்தானத்தில் கேது, ஆறாம் வீட்டில் கேது என கிரகங்கள் கூடியுள்ளன. எத்தனையோ பிரச்சினைகளை கடந்து வந்திருப்பீர்கள். பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கான நேரம் கை கூடி வந்துள்ளது. உங்களின் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. காரணம் இதுநாள் வரை உங்களை கஷ்டப்படுத்தி சோதனைகளை கொடுத்த கிரகங்கள் இனி உங்களை சாதிக்க வைத்து சந்தோஷப்படுத்தப்போகின்றன. நல்ல செய்தி தேடி வரப்போகிறது.

குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்
உங்களின் பயணங்களால் நன்மைகள் நடைபெறும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். இதுநாள்வரை உங்களைத் திட்டித்தீர்த்தவர்கள் பாராட்ட ஆரம்பிப்பார்கள். ராகு கேது பெயர்ச்சி, குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி முன்னோட்டமாக நற்காரியங்கள் நிறைய நடைபெறப்போகின்றன. வேலையில் நிறைய மாற்றங்கள் ஏற்படப்போகிறது. வேலை தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். திருமண சுபகாரியங்களில் சில தடைகள் வந்து நீங்கும். இந்த மாதம் காதல் கை கூடி வரும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சிக்கல்கள் முடிவுக்கு வரும். கசப்பான அனுபவங்கள் முடிந்து பிரிந்தவர்கள் ஒன்று சேரும் காலமாக உள்ளது. மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். இல்லத்தரசிகளுக்கு தொல்லைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications