மார்ச் மாத ராசி பலன் 2024: பேசும் வார்த்தைகள் எதிரியாகும்.. கவனமாக இருக்க வேண்டியது யார்?
சென்னை: மார்ச் மாதம் ஆங்கில மாதத்தில் 3வது மாதம். மகத்துவம் நிறைந்த மாதம் மார்ச் மாதம். மாசியும் பங்குனியும் இணைந்த மாதம். இந்த மாதத்தில் சூரியன் முதல் பாதி நாட்கள் கும்ப ராசியிலும் பிற்பகுதியில் மீன ராசியிலும் பயணம் செய்வார். நவ கிரகங்களின் பயணத்தினால் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும்? சாதகமா? பாதகமா என்று பார்க்கலாம்.
கடகம்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும். நவகிரகங்கள் பயணம் சற்றே சாதகமற்ற நிலையில் உள்ளது.

7ஆம் வீட்டில் சுக்கிரனும் செவ்வாயும் இணைந்து இருந்தாலும் மாதத்தின் முதல் வாரத்திலேயே சுக்கிரன் இடப்பெயர்ச்சியாகி 8ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைவது சிறப்பல்ல. அஷ்ட ஸ்தானத்தில் ஏற்கனவே சனி, புதன், சூரியன் சேர்ந்திருக்க கூடவே சுக்கிரனும் இணைவதால் பண விசயங்களில் கவனமாக இருப்பது நல்லது. எந்த விசயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்வது நல்லது.
மாதத்தின் முதல் 15 நாட்கள் அஷ்டம சனியோடு சூரியன் பயணம் செய்வதால் எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவு செய்யாதீர்கள். 16ஆம் தேதிக்கு மேல் செவ்வாய் இடப்பெயர்ச்சியாகி சனியோடு இணைவதால் குழப்பமான மனநிலை ஏற்படும். பத்தாம் வீட்டில் பயணம் செய்யும் குருவினால் பதவியில் திடீர் மாற்றம் வரும். வேலையில் இடமாற்றம் உண்டாகும்.
யுத்த கிரகங்களின் சேர்க்கை மன உளைச்சலை ஏற்படுத்தும். மார்ச் மாதத்தில் புதிய முடிவுகளை எடுக்காதீர்கள். குடும்ப வாழ்க்கையில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும். திருமணம் சுபகாரியம் தொடர்பாக இந்த வாரம் பேசாதீர்கள் தள்ளிப்போடுவது நல்லது. புதிய தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம், கூடுதல் விழிப்புணர்வு தேவைப்படும்.
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பிரச்சினைகள் ஏற்படும். உணர்வு பூர்வமாக முடிவெடுப்பதை விட இந்த மாதம் அறிவுப்பூர்வமாக முடிவெடுப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள். இந்த மாதம் மகாசிவராத்திரி நாளில் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். பங்குனி உத்திரம் நாளில் அன்னதானம் செய்வது நல்லது. வேலையிலும் உடல் ஆரோக்கியத்தில் வரக்கூடிய பிரச்சினைகள் கட்டுப்படும். மார்ச் மாதத்தில் கடக ராசிக்காரர்கள் கவனமாக இருப்பது நல்லது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications