மார்ச் மாத ராசி பலன் 2024: வேலையில் புரமோசன்.. தொட்டதெல்லாம் பொன்னாகும் யாருக்கு?
சென்னை: மார்ச் மாதம் ஆங்கில மாதத்தில் 3வது மாதம் மகத்துவம் நிறைந்த மாதம். மாசியும் பங்குனியும் இணைந்த மாதம். இந்த மாதத்தில் சூரியன் கும்ப ராசியிலும் மீன ராசியிலும் பயணம் செய்வார். நவ கிரகங்கள் பயணத்தினால் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது. வேலை மாற்றம் எதுவும் ஏற்படுமா புரமோசன் கிடைக்குமா என்று பார்க்கலாம்.
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு மார்ச் மாதத்தில் நவ கிரகங்களும் சாதகமான நிலையில் பயணம் செய்கின்றன. பிருகு மங்கல யோகம் உள்ளதால் வெளிநாடு யோகம் கைகூடி வரப்போகிறது. நல்ல இடப்பெயர்ச்சி உண்டாகும். ஊர் மாற்றம் ஏற்படும். வேலையில் இருந்த பிரச்சினை நீங்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். பிரிந்தவர்கள் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது.

வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு யோகமான கால கட்டம். மாணவர்களுக்கு வெளிநாட்டில் படிப்பதற்கு யோகம் கைகூடி வருகிறது. நீண்ட தூர பயணங்கள் செல்வீர்கள். சனிபகவான் சூரியனுடன் இணைந்து பயணம் செய்யப்போகிறார். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.
இந்த மாதத்தில் பத்தாம் வீட்டில் சனி சூரியன் சேர்க்கை, சனி செவ்வாய் சேர்க்கை என இருப்பதால் வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது அவசியம். குடும்ப வாழ்க்கையில் அற்புதமான கால கட்டமாகும். கடன் வாங்க வேண்டாம். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. வரும் வருமானத்தை சேமித்து பழகுவது நல்லது. அகலக்கால் வைக்காதீர்கள்.
செவ்வாய் உச்சம் பெற்று செவ்வாயுடன் இணைந்திருக்கும் காலத்திலும் சனியோடு இணையும் காலத்திலும் உங்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் புதன் சூரியன் இடப்பெயர்ச்சி லாப ஸ்தானத்திற்கு செல்கிறது. சுக்கிரன் சாதகமாக இருந்தாலும் புதன் பயணம் ராகு உடன் இருப்பதால் பண முதலீட்டில் கவனம் தேவை. அதே நேரத்தில் வீடு வாகனம் வாங்கவும் சரியான மாதமாகும்.
உடலும் மனமும் உற்சாகமாக இருக்கும். நினைத்தது நினைத்தபடி நிறைவேறும். திருமணம் சுபகாரியம் தொடர்பாக பேசி முடிக்கலாம். புது முயற்சிகள் வெற்றியைத் தேடித்தரும். பெண்களின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பண விசயத்தில் கவனமாகவும் நிதானமாகவும் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு அற்புதமான மாதம். வெளிநாடு சென்று படிப்பதற்கான நேரம் கைகூடி வரப்போகிறது. விருப்பங்கள் நிறைவேறும் அற்புதமான மாதமாக மார்ச் மாதம் அமைந்துள்ளது. முன்னேற்றத்தை நோக்கி செல்லப்போகிறீர்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications