தனுசுக்கு கொட்டிக் கொடுக்க போகும் குரு பகவான்.. ஆனா இவங்களால ஆப்பு கன்ஃபார்ம்.. உஷார்
மார்ச் மாத பலன்: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். மார்ச் மாதத்தில் தனுசு ராசிக்கான பலன்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சனிப்பெயர்ச்சியானது மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருப்பது சனி தான்.

சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.
அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தில் தனுசு ராசிக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடிய யோக மாதமாக இருக்கும். சுக்கிரன், சனி, புதன் இந்த மூன்று கிரகங்கள் பலவீனமாக இருக்கின்றன. நல்ல கிரகங்கள் வலுவான நிலையில் இருக்கின்றன. அபயோக கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் கொடுத்து வைத்த ராசியாகத்தான் இருக்கிறீர்கள். 6 ஆம் இடத்தில் இருப்பதால் உங்களுக்கு கடந்த 10 மாதங்களாக நன்றாக இல்லை. கடனோ, நோயோ, சாதகமற்ற தன்மைகள், எதிர்ப்பு இருக்கும் நிலைதான் இருக்கும். மே மாதம் வரை பொறுத்துக் கொள்வது நல்லது.
மே மாதம் 14 ஆம் தேதி மாறக்கூடிய குருப்பெயர்ச்சியின் மூலமாக உங்களுடைய ராசிநாதன் உங்கள் ராசிக்கே வந்து நல்லவிதமாக இருப்பது நல்ல அமைப்பாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சீராக இருக்கும். சிறு சிறு சண்டைகள் வந்தாலும் பெரிய சோதனைகள் வராது. முதல் திருமணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது திருமணம் இந்த ஆண்டில் நடக்கக்கூடிய அமைப்பு உள்ளது. முதல் திருமணமும் நன்றாகவே இருக்கும். குருப்பெயர்ச்சி மூலமாக திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் உண்டு.
ஜீவனஸ்தானத்தை 4, 5 கிரகங்கள் வலுவாகப் பார்ப்பது பெரிய யோக அமைப்புகளை கொடுக்கும். வேலை, தொழில், விவசாயம், வியாபாரம் எதை செய்தாலும் அது நன்றாக இருக்கும். நல்லவைகள் நடக்கக்கூடிய அமைப்புகள் உண்டு. படிப்படியாகத்தான் நடக்கும். எந்தவொரு விஷயத்திலும் அகல கால் வைக்காமல் இருப்பது நல்லது. குறிப்பாக, நண்பர்கள், உறவினர்களை நம்பாமல் இருப்பது நல்லது. ஆறு, எட்டு, 12 இடத்தில் குரு இருப்பதால் நல்ல அமைப்பு உள்ளது. யாரையும் நம்பி ஒரு விஷயத்தை செய்யாமல் இருப்பது நல்லது. பொறுமையாக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications