மார்ச் மாத பலன்:ஜென்ம சனியில் இருந்து கும்ப ராசிக்கு விடுதலை.. அடிச்சது லாட்டரி, அதிர்ஷ்டம் கொட்டும்
மார்ச் மாத பலன்: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். மார்ச் மாதத்தில் கும்ப ராசிக்கான பலன்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சனிப்பெயர்ச்சியானது மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருப்பது சனி தான்.

சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.
அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தில் கும்ப ராசிக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் இருந்து பெரிய விடுதலை கிடைக்கப் போகிறது. 15 ஆம் தேதி வரை மந்தமாகத்தான் இருக்கும். சுக்கிரன், புதன் ஆகியோர் ராகுவோடு சேர்ந்திருக்கிறார்கள். எந்த கிரகம் கெட்டாலும் இந்த மாதத்தில் உங்களுக்கு ஜென்மச் சனி முடியப் போகிறது. இது உங்களுக்கு மிகப்பெரிய யோக அமைப்பை கொடுக்கும். 2 ஆண்டுகளுக்கு அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய 3 நட்டத்திரக்காரர்களும் கடுமையான பலன்களை எதிர்கொண்டிருப்பீர்கள்.
ஜென்ம சனி உங்களை புரட்டி எடுத்திருக்கும். இனி உங்களுக்கு படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். வயதிற்கு ஏற்றாற்போல நன்மைகள் நடக்கும். பெளர்ணமி சமயத்தில் பிறந்தவர்கள், சந்திரன் குரு சுக்கிரனுடன் தொடர்பில் இருந்திருப்பவர்கள் ஓரளவுக்குத்தான் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் சுற்றாக வந்து வீடு, சொத்துபத்துகள், நல்ல வருமானத்தை கொடுத்திருக்கும்.
ஆனால், இளைய பருவத்தினரை போட்டு படுத்தியிருக்கும். அதிலிருந்து நீங்கள் விடுதலை அடைவதற்கான தன்மைகள் உண்டு. தொழில் நன்றாக இருக்கும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். புதிய நம்பிக்கை, உத்வேகம் பிறக்கும். இழந்து போன அமைப்புகள் மீண்டும் திரும்ப வரும் அமைப்புகள் உண்டு.
அவமானப்பட்டவர்கள் எல்லாம் இனி தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய தன்மைகள் உள்ள நல்ல மாதமாக இருக்கும். மார்ச் 15 ஆம் தேதி முதல் சுறுசுறுப்பு, வேதனை நீக்கம், முகத்தில் பொலிவு, தன்னம்பிக்கை கிடைக்கும். இனி தொட்ட காரியங்கள் அனைத்திலும் நற்பலன்களைக் காணும் யோகம் உண்டாகும். உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள்.
பெரிய அடி விழுந்துவிட்டதால் இனி உங்களுக்கு சந்தோஷமான காலகட்டமாக இருக்கும். 5, 8 ஆம் இடம் புதனின் நீச்சத்தால் பலவீனமாக உள்ளது, குழந்தைகளால் கஷ்ட நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அவர்களை கண்காணித்து வருவது நல்லது. குழந்தைகளைப் பற்றிய சிந்தனை இருந்துகொண்டே இருக்கும். ஆனாலும் சமாளித்துக் கொள்ளக்கூடிய நல்ல மாதமாக இந்த மார்ச் மாதம் உங்களுக்கு இருக்கும்.












Click it and Unblock the Notifications