துலாம் ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் புதன் பகவான்.. வீடு, தொழில், பணம்னு ராஜவாழ்க்கை வாழ்வீங்க இனி

Subscribe to Oneindia Tamil

மார்ச் மாத பலன்: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். மார்ச் மாதத்தில் துலாம் ராசிக்கான பலன்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சனிப்பெயர்ச்சியானது மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருப்பது சனி தான்.

March month rasi palan Thulam sani peyarchi

சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.

அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தில் துலாம் ராசிக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசிக்காரர்களுக்கு 6, 8 இல் பரிவர்த்தனை நடைபெறுகிறது. போன மாதத்தில் இருந்தே சுக்கிரன் வலுத்து இருக்கிறார். ஆனால், புதன் இந்த மாதம் முழுவதும் நீச்சமடைந்திருக்கிறார். நீச்ச நிலையில் 12 ஆம் இடத்தைப் பார்ப்பார். 12 ஆம் இடத்தை 4 கிரகங்கள் வலுத்து பார்ப்பது என்பது செலவுகள் மற்றும் பயணங்களை அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில், பஸ் ஓட்டுநர், நடத்துநர், பொருளை இயக்க கூடியவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் அதிக பயணம் செய்ய வேண்டியதிருக்கும். ஆனால், வருமானம் உண்டாகும்.

மார்ச் மாதம் முழுவதும் உங்களுக்கு அருமையான பண வரவு உண்டாகும். ராசி நாதன் உச்சம் மற்றும் பரிவர்த்தனை அடைந்திருப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வந்து சேரும். இரட்டிப்பு சம்பாத்தியம் சம்பாதிக்க கூடிய யோகம் உங்களுக்கு உண்டு. வரும் 3 ஆண்டுகளுக்கு உங்களுக்கு நல்ல காலமாக இருக்கும். பிறந்த ஜாதக அமைப்பு, தசாபுத்தி அமைப்புகள் வலுவாக இருந்தால் உங்களுக்கு கோடிகளை சம்பாதிக்க கூடிய யோகம் உண்டாகும்.

வெளிநாட்டு வேலை, வெளிநாட்டு யோகம், தொழில், நல்ல லாபம், வெளிநாட்டில் செட்டிலாவது, அங்கேயே வீடு வாங்குவது போன்ற சொத்து சேர்க்கும் அமைப்பு உள்ளது. பெரிய குறைகள் எதுவும் இருக்காது. துலாம் ராசிக்காரர்களுக்கு சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும், அதனை சமாளிக்கக்கூடிய அமைப்பாக இருக்கும். சிறப்பு அம்சங்கள், நற்பலன்களை அள்ளித் தரும் மாதமாக இந்த மார்ச் மாதம் உங்களுக்கு அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+