Thulam Rasi Palan: துலாம் ராசிக்கு வேலையில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. கொட்டும் அதிர்ஷ்டம்
மார்கழி மாத பலன்கள்: மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். அந்த மார்கழி மாதம் விரைவில் பிறக்கவுள்ளது. 2025 ஆம் வருடத்தின் இறுதி, 2026 ஆம் வருடத்தின் தொடக்கம் ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகளும் மார்கழி மாதத்தில் நிகழ உள்ளது. மார்கழியை தெய்வங்களின் மாதம் என்பார்கள். அந்தளவுக்கு ஆன்மிக ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. இதில் கிரக நிலைகளில் பல்வேறு மாற்றங்கள், சில முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் துலாம் ராசி பெறப்போகும் பலன்களை காணலாம்.
மார்கழி மாதம் 16.12.2025 தொடங்கி 14.1.2026 வரை இருக்கிறது. குரு பகவான் மிதுன ராசியில் வக்ர கதியில் உள்ளார். கேது பகவான் சிம்ம ராசியில் இருக்கிறார். புதன் - சுக்கிரன் விருச்சிக ராசியிலும், சூரியன் - செவ்வாய் தனுசு ராசியிலும் இருக்கிறார்கள். சனி - ராகு கும்ப ராசியில் உள்ளனர். 21.12.2025 ஆம் தேதி குரு பகவான் வக்ர நிலையில் புனர்பூசம் நான்காம் பாதத்தில் இருந்து, புனர்பூசம் மூன்றாம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகவுள்ளார்.

மார்கழி மாத பலன்கள்
22.12.2025 சுக்கிரன் பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதேபோல 25.12.2025 அன்று புதன் பகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசுக்கு பெயர்ச்சி ஆகவுள்ளனர். 11.1.2026 புதன் தனுசு ராசியில் இருந்து மகரத்துக்கும், செவ்வாய் பகவான் 14.1.2026 தேதி தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளனர்.
நிகழ்வுகள்
19.12.2025 அன்று அனுமன் ஜெயந்தி, 20.12.2025 அமாவாசை நிகழ்வுகள் இருக்கின்றன. 30.12.2025 அன்றைய தினம் வைகுண்ட ஏகாதசி, 3.1.2026 ஆருத்ரா பெளர்ணமி, 14.1.2026 போகி பண்டிகை ஆகிய நிகழ்வுகள் உள்ளன. அதற்கு அடுத்த நாள் சூரிய பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். பொதுவாகவே மார்கழி மாதம் முழுவதுமே விசேஷம் தான். இந்த வருடம் இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் துலாம் ராசி பெற போகும் பலன்களை காணலாம்.
துலாம்
துலாம் ராசி மற்றும் லக்னத்தினருக்கு வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் துணிந்து எதிர்கொள்ளக் கூடியவர்கள். நேர்மை மற்றும் துணிவு மிக்க உங்களுக்கு மார்கழி மாதத்தின் ஆரம்பத்திலேயே சந்திர பகவான் உங்கள் ஜென்ம சனியில் இருப்பது மிகுந்த சிறப்பாகும். மனோகாரகன் சந்திர பகவான் உங்களுடைய ஜென்ம ராசியில் இருப்பது சிறப்பு. 10 ஆம் இடத்தின் அதிபதியாகவும் இருப்பதால் வேலை இல்லாதவர்களுக்கு அற்புதமான வேலை கிடைக்கும்.
வேலைவாய்ப்பு கிடைக்கும்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிடித்த வேலைவாய்ப்புகள் அமையும். மாற்று வேலைகளுக்கு முயற்சிப்பவர்களுக்கு இரட்டிப்பு சம்பளத்துடன் வேலை அமையும். 10 ஆம் இடத்திலேயே குரு பகவானும் உச்சம் பெற்றிருப்பதால் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறக்கூடிய மாதமாக அமையும். இந்த ஆண்டு முழுவதும் ஏனோதானோ என இருந்தாலும் இந்த மாதத்தில் மிகப்பெரிய ஏற்றம் உங்களுக்கு நிச்சயம் ஏற்படும்.
படிப்பில் ஆர்வம்
உங்கள் ஜென்ம ராசிக்கு 2 ம் இடத்தில் புதன் பகவான் இருப்பதால் மாணவர்களைப் பொறுத்தவரை படிப்பின் மீது ஆர்வம், மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உங்களுடைய சொந்த புத்தியால் ஆர்வம் ஏற்படும். உபஜெய லாப ஸ்தானத்தில் கேது பகவான் இருப்பதால் ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புண்ணியத் தலங்களுக்கு போய் வரும் யோகம் ஏற்படும்.
வழிபாடு
திடீரென்று கோயில்களுக்குச் செல்லும் யோகம் ஏற்படும். குலதெய்வ வழிபாடு செய்வது உங்களுக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும். 3 ஆம் இடத்தில் சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருப்பதால் தேவையில்லாத தடைகள், போட்டிகள் ஏற்படும். யாருக்கு நீங்கள் நல்லது செய்தீர்களோ அவர்களாலேயே கெடுதல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. போட்டி பொறாமைகளில் இருந்து விடுபட குலதெய்வ விருச்சத்துக்கு கற்பூரம் காட்டி வவிபாடு செய்வது நன்மை பயக்கும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications