Viruchigam Rasi Palan: பிளாஸ்டு.. பிளாஸ்டு.. விருச்சிகம் ராசிக்கு அடிக்க போகும் ஜாக்பாட்
மார்கழி மாத பலன்கள்: மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். அந்த மார்கழி மாதம் விரைவில் பிறக்கவுள்ளது. 2025 ஆம் வருடத்தின் இறுதி, 2026 ஆம் வருடத்தின் தொடக்கம் ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகளும் மார்கழி மாதத்தில் நிகழ உள்ளது. மார்கழியை தெய்வங்களின் மாதம் என்பார்கள். அந்தளவுக்கு ஆன்மிக ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. இதில் கிரக நிலைகளில் பல்வேறு மாற்றங்கள், சில முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் விருச்சிகம் ராசி பெறப்போகும் பலன்களை காணலாம்.
மார்கழி மாதம் 16.12.2025 தொடங்கி 14.1.2026 வரை இருக்கிறது. குரு பகவான் மிதுன ராசியில் வக்ர கதியில் உள்ளார். கேது பகவான் சிம்ம ராசியில் இருக்கிறார். புதன் - சுக்கிரன் விருச்சிக ராசியிலும், சூரியன் - செவ்வாய் தனுசு ராசியிலும் இருக்கிறார்கள். சனி - ராகு கும்ப ராசியில் உள்ளனர். 21.12.2025 ஆம் தேதி குரு பகவான் வக்ர நிலையில் புனர்பூசம் நான்காம் பாதத்தில் இருந்து, புனர்பூசம் மூன்றாம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகவுள்ளார்.

மார்கழி மாத பலன்கள்
22.12.2025 சுக்கிரன் பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதேபோல 25.12.2025 அன்று புதன் பகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசுக்கு பெயர்ச்சி ஆகவுள்ளனர். 11.1.2026 புதன் தனுசு ராசியில் இருந்து மகரத்துக்கும், செவ்வாய் பகவான் 14.1.2026 தேதி தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளனர்.
நிகழ்வுகள்
19.12.2025 அன்று அனுமன் ஜெயந்தி, 20.12.2025 அமாவாசை நிகழ்வுகள் இருக்கின்றன. 30.12.2025 அன்றைய தினம் வைகுண்ட ஏகாதசி, 3.1.2026 ஆருத்ரா பெளர்ணமி, 14.1.2026 போகி பண்டிகை ஆகிய நிகழ்வுகள் உள்ளன. அதற்கு அடுத்த நாள் சூரிய பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். பொதுவாகவே மார்கழி மாதம் முழுவதுமே விசேஷம் தான். இந்த வருடம் இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் விருச்சிகம் ராசி பெற போகும் பலன்களை காணலாம்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசி மற்றும் லக்னத்தினருக்கு இந்த மார்கழி மாதம் சிறப்பான பலன்களை தரப்போகிறது. கடந்த காலங்களில் தடைபட்ட காரியங்கள் நிவர்த்தியாகி, எல்லாவற்றிலும் சத்தமே இல்லாமல் வெற்றி கிடைக்க போகிறது. புதன் பகவான் உங்களின் ஜென்ம ராசியில் இருக்கிறார். பொதுவாக புதன் உங்களின் லாபாதிபதி ஆவார். இதனால் தொழில், வியாபாரத்தில் அதிகளவு லாபம் கொட்ட போகிறது.
கல்வி
புதன் - சுக்கிரன் இணைந்திருப்பதால் புத சுக்கிர யோகம் கிடைக்கிறது. இழுபறியாக இருந்த காரியங்கள் எல்லாம் அடுத்தடுத்து வேகமாக நிறைவேறும். பண வரவு திருப்தியாக இருக்கும். பொருளாதாரம் உயரும். புதன் பகவான் கல்விக்கும் அதிபதி. அதனால் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கல்வித்துறையில் பணியாற்றுவோர் சிறப்பான ஏற்றங்களை காண்பார்கள்.
பண வரவு
நீண்ட காலமாக திட்டமிட்ட விஷயங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு உருவாகும். திடீர் பண வரவு, திடீர் அதிர்ஷ்டம் ஆகியவற்றால் திக்கு முக்காடுவீர்கள். மனதில் இருந்த கவலைகள், சங்கடங்கள் விலகும். ராசிக்கு இரண்டாம் இடத்தில் செவ்வாய் பகவான் இருக்கிறார். தன ஸ்தானத்தில் செவ்வாய் - சூரியன் இணைந்துள்ளனர். இதுவும் அற்புதமான அமைப்பு. விளையாட்டு துறையில் இருப்போர் பல்வேறு சாதனைகளை படைப்பார்கள்.
வெளிநாடு யோகம்
அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நிறைவேறும். அரசுப் பணியில் இருப்போருக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும். உத்யோகத்தில் பதவி, உயர்வு, சம்பள உயர்வு போன்ற அங்கீகாரம் கிடைக்கும். கடல் கடந்து யோகம் உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான முயற்சியில் இருப்போருக்கு நல்ல செய்தி கிடைக்கும். பயணங்களினால் ஆதாயம் ஏற்படும். மனதில் மகிழ்ச்சி உண்டு. குலதெய்வ வழிபாடு கூடுதல் நன்மைகளை தரும்.












Click it and Unblock the Notifications