அட மேஷ ராசிக்கு கிடைச்ச அதிர்ஷ்டத்தை பாருங்க - வருட முடிவில் மெகா பம்பர்
மார்கழி மாத பலன்கள் மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். அந்த மார்கழி மாதம் விரைவில் பிறக்கவுள்ளது. 2025 ஆம் வருடத்தின் இறுதி, 2026 ஆம் வருடத்தின் தொடக்கம் ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகளும் மார்கழி மாதத்தில் நிகழ உள்ளது. மார்கழியை தெய்வங்களின் மாதம் என்பார்கள். அந்தளவுக்கு ஆன்மிக ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. இதில் கிரக நிலைகளில் பல்வேறு மாற்றங்கள், சில முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மேஷம் ராசி பெறப்போகும் பலன்களை காணலாம்.
மார்கழி மாதம் 16.12.2025 தொடங்கி 14.1.2026 வரை இருக்கிறது. குரு பகவான் மிதுன ராசியில் வக்ர கதியில் உள்ளார். கேது பகவான் சிம்ம ராசியில் இருக்கிறார். புதன் - சுக்கிரன் விருச்சிக ராசியிலும், சூரியன் - செவ்வாய் தனுசு ராசியிலும் இருக்கிறார்கள். சனி - ராகு கும்ப ராசியில் உள்ளனர். 21.12.2025 ஆம் தேதி குரு பகவான் வக்ர நிலையில் புனர்பூசம் நான்காம் பாதத்தில் இருந்து, புனர்பூசம் மூன்றாம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகவுள்ளார்.

மார்கழி மாத பலன்கள்
22.12.2025 சுக்கிரன் பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதேபோல 25.12.2025 அன்று புதன் பகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசுக்கு பெயர்ச்சி ஆகவுள்ளனர். 11.1.2026 புதன் தனுசு ராசியில் இருந்து மகரத்துக்கும், செவ்வாய் பகவான் 14.1.2026 தேதி தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளனர்.
நிகழ்வுகள்
19.12.2025 அன்று அனுமன் ஜெயந்தி, 20.12.2025 அமாவாசை நிகழ்வுகள் இருக்கின்றன. 30.12.2025 அன்றைய தினம் வைகுண்ட ஏகாதசி, 3.1.2026 ஆருத்ரா பெளர்ணமி, 14.1.2026 போகி பண்டிகை ஆகிய நிகழ்வுகள் உள்ளன. அதற்கு அடுத்த நாள் சூரிய பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். பொதுவாகவே மார்கழி மாதம் முழுவதுமே விசேஷம் தான். இந்த வருடம் இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் மேஷ ராசி பெற போகும் பலன்களை காணலாம்.
மேஷம்
மேஷம் ராசி மற்றும் லக்னத்தினருக்கு இந்த மார்கழி மாதத்தில் ஏராளமான நன்மைகள் ஏற்படும். உங்களின் ராசி அதிபதியான செவ்வாய் பகவான் பாக்கிஸ ஸ்தானத்தில் இருக்கிறார். பூர்வீக சொத்துகளில் இருந்த வழக்குகள் மற்றும் சிக்கல்கள் தீர்ந்து, சொத்து உங்கள் கைத்தேடி வரும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. உறவினர்களிடம் உங்களின் மதிப்பு, மரியாதை உயரும்.
பொருளாதாரம்
பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டு. வாழ்க்கையில் முன்னேற்ற பாதைக்கு செல்வதற்கான பல கதவுகள் திறக்கும். வீடு, நிலம் உள்ளிட்ட புதிய சொத்துகள் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. மனதில் தன்னம்பிக்கை தைரியம் அதிகரித்து உற்சாத்துடன் வலம் வருவீர்கள். எல்லாரிடமும் அன்பு செலுத்துவீர்கள். தெளிவான திட்டமிடல்களால் இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறும்.
ஆரோக்கியம்
சுப காரிய தடைகள் விலகும். நீண்ட காலமாக திருமணத்திற்கு முயற்சி செய்வோருக்கு இந்த மாதம் நல்ல செய்தி வீடு தேடி வரும். வாழ்க்கை துணை யார் என்று அடையாளம் காட்டப்படும் காலம் இது. சுக ஸ்தானத்தில் குரு பகவான் உச்சம் பெறுகிறார். ஆரோக்கியத்தில் தொந்தரவுகள் இருந்தவர்களுக்கு இந்த மாதம் அது அடியோடு நீங்கும். ஆரோக்கியத்தில் அபாரமான முன்னேற்றம் காணப்படும்.
பரிகாரம்
ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்களின் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். செவ்வாய் - சூரியன் இணைவால் தேவையில்லாத சங்கடங்கள், செய்யாத தவறுக்கு பழி வாங்கப்படுவது, சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. குழந்தைகளால் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து செல்லும். குல தெய்வ வழிபாடு அற்புதமான மாற்றங்களை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications