செவ்வாய் சூரியனின் சதாஷ்டக யோகம்.. மேஷம் முதல் கன்னி வரை ஜாக்பாட் அடிக்கும் ராசியினர்?
செவ்வாய் பெயர்ச்சி: பிப்ரவரி 7 ஆம் தேதி சூரியனும் செவ்வாயும் இணைந்து சதாஷ்டக யோகத்தை உருவாக்குகின்றன. இந்த யோகத்தால் சில ராசிகளுக்கு அதிர்ஷடமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. மேஷம் முதல் கன்னி வரை எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும். இந்த இடப்பெயர்ச்சியால் 12 ராசிகளும் அதன் தாக்கத்தை அனுபவிக்கும். சில ராசிக்காரர்களுக்கு அதிகமான சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். பிப்ரவரி மாதம் பிறந்துள்ள நிலையில், இந்த மாதத்தில் முக்கியமான மூன்று கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது.

நட்சத்திரங்கள், கிரகங்களின் இடப்பெயர்ச்சி இயக்கத்தை கணக்கிட்டே ஒருவரது ராசிபலன் கணக்கிடப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி பிப்ரவரி 7 ஆம் தேதி சூரிய கிரகமும், செவ்வாய் கிரகமும் பிற்பகல் 02:08 மணிக்கு சதாஷ்டக யோகத்தை உருவாக்குகின்றன. பொதுவாக சூரிய பகவான் கிரகங்களின் ராஜாவாகவும், ஒருவரின் ஆன்மா, சுய அடையாளத்தை குறிப்பவராகவும் சூரியன் விளங்குகிறார். செவ்வாய் கிரகம் ஒருவரின் ஆர்வம், முழுமை, போட்டி மனப்பான்மையின் அடையாளமாக உள்ளார்.
சூரிய கிரகமும், செவ்வாய் கிரகமும் இணைந்து சதாஷ்டக யோகத்தை உருவாக்குகின்றன. இந்த யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் அதனுடைய தாக்கம் இருக்கும். குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷடமான பலன்களை உண்டாக்கும். அந்த வகையில், அதிர்ஷ்டங்களையும், ராஜயோகங்களையும் அள்ளப் போகும் ராசிகள் எவை என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் - சதாஷ்டக யோகத்தால் உறவுகளிடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். எடுத்த வேலைகளில் தாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதற்காந வாய்ப்புகள் உண்டு. பணம் சார்ந்த விஷங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாழ்க்கைத் துணை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவுகள் வழியில் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
ரிஷபம் - எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. தாய் வழி உறவுகள் மூலம் உதவிகள் கிடைப்பதற்கான யோகம் உண்டு. நீண்டகாலமாக வராமல் இருந்து வந்த பணம் உங்களை வந்து சேரும். திருமண வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு பெருகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விநாயகர் வழிபாடு, ஏழைகளுக்கு தானம் அளிப்பது நல்ல பலன்களைத் தரும்.
மிதுனம் - சூரியன் செவ்வாய் உருவாக்கும் யோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நோய் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சில நபர்களால் உங்களுக்கு பிரச்சனைகள், சவால்கள் ஏற்பட்டு வந்திருக்கும். அந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்புள்ளது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கடகம் - கடக ராசிக்காரர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். குல தெய்வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுதலை அடைவீர்கள். உணவு தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புனர்பூஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருப்பது நல்லது.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த அனைத்து காரியங்களும் நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கூடுதல் பணம் செலவாவதற்கான வாய்ப்புகள் உண்டு. பணத்தை சேமித்து வைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் சில பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. நரசிம்மரை வழிபட்டு வருவது அனுகூலமான பலன்களைத் தரும்.
கன்னி - கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு பணப் புழக்கம் கணிசமாக உயரும். புதிய முயற்சிகள் மூலமாக வேலை வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக காத்திருந்த விஷயங்கள் அனைத்தும் நடப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சியான காலமாக இருக்கும். பணம் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications