செவ்வாய் வக்ர பெயர்ச்சி: விபரீத ராஜயோகம் பெறும் விருச்சிகம்.. கடன்கள் தீரும், ஆரோக்கியம் கவனம்

Subscribe to Oneindia Tamil

செவ்வாய் வக்ர பெயர்ச்சி: செவ்வாய் மிதுன ராசியில் வக்ரம் பெறுகிறார். இந்த செவ்வாய் கிரகம் வக்ரம் பெறுவதால் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் 8 இல் மறைகிறார். 6க்கு உரியவர் 8 இல் மறைவது விபரீத ராஜயோகத்தை குறிப்பது. இருந்தாலும் வக்ரம் பெற்று மறைவதால் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும். ரத்தம் தொடர்பான பிரச்சனைகள், மயக்கம், உடலில் சோர்வு உண்டாகும். ஒரு காரியத்தில் மிகவும் கவனமாக செயல்பட முடியாது.

Sevvai vakra peyarchi Viruchigam

கடன்கள் தீரும்

6க்கு உரியவர் 8 இல் மறையும்போது கடன்கள் அனைத்தும் தீரும். புதிதாக தொழில்களைத் தொடங்குவீர்கள். லாபத்தை அடைவீர்கள். இருந்தாலும் 1க்கு உரியவராகவும் இருப்பதால் உடம்பை படாதபாடு படுத்தும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உடல்நிலையை நீங்கள் தொடர்ந்து டென்சனாக வைத்துக் கொண்டிருப்பீர்கள்.

கவனம், பரிகாரம்

அரசுப் பணியில் இருப்பவர்கள் கெட்ட பெயர் வாங்குவது, அரசுப் பணிக்கு முயற்சிப்பவர்கள் தேர்வில் தோல்வி அடைவது போன்றவை ஏற்படும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது. செவ்வாய்க்கிழமைகளில் சிவப்பு நிற ஆடை அணிந்து, சிவப்பு அரளிகளை முருகனை அர்ச்சனை செய்து வழிபடுவது அமோகமான பலன்களைத் தரும். முருகனை வழிபட வழிபட உங்களுடைய ஒவ்வொரு பிரச்சனையும் படிப்படியாக குறைவதை கண்கூடாகப் பார்ப்பீர்கள்.

தரமான பொருள் விற்பனை நல்லது

ராசிநாதன் 8 ஆம் வீட்டில் மறைந்தாலும், புதனுடைய வீடு என்பதால் புத்திசாலித்தனமாக எல்லா பிரச்சனைகளில் இருந்தாலும் தப்பித்து வந்துவிடுவீர்கள். உங்களுக்கு 4 ஆம் பார்வையாக உங்களுடைய 11 ஆம் இடத்தை லாபத்தை பார்ப்பதால், தரமில்லாத பொருள்களை விற்கும் எண்ணம் இருந்தாலும் அதனை மாற்றிக் கொள்வது நல்லது. லாபம் குறைவாக கிடைத்தாலும் தரமான பொருள்களை விற்பது நல்ல பலன்களைத் தரும்.

சொத்து விஷயத்தில் கவனம்

பொருளாதாரத்தில் மிகுந்த மந்த நிலையை கொடுப்பார். 2 என்பது வார்த்தை. எந்த விஷயத்தை எடுத்தாலும் படார் படார் என பேச வைக்கும். எடுத்தெரிந்து பேசும் சூழ்நிலையை ஏற்படுத்தும். பொருளாதாரம் மிகவும் இறுக்கமானதாக இருக்கும். 3 ஆம் இடத்தை பார்ப்பதால் சகோதர பாவங்களால் மனக் கஷ்டத்தைக் கொடுப்பார். சொத்து பிரிப்பதில் பிரச்சனை, சகோதர விஷயங்களில் பிரச்சனை ஏற்படும். சொத்து பிரிக்கும் விஷயங்களில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

வாகனங்களில் எச்சரிக்கை

3 ஆம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால் முயற்சிகளில் தடை உண்டாகும். எதிலுமே நாட்டம் உண்டாகாது. தொடர்ந்து மந்தமான நிலையிலேயே வைத்திருக்கம். வண்டி வாகனங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சும்மா கூட வண்டிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. 8 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அறுவை சிகிச்சை செய்ய சிறந்த காலகட்டமாக இருக்கும்.

விபரீத ராஜயோகம்

எந்த நேரத்திலும் எதாவதொரு மன அழுத்தத்திலும், மன சோர்விலுமே இருப்பீர்கள். 6க்கு உரியவர் 8 இல் இருப்பதால் மற்ற விஷயங்களில் விபரீத ராஜயோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. புதிய தொழில் வியாபாரத்தை தொடங்கும் யோகம் உண்டாகும். அதில் முன்னேற்றத்தையும் லாபத்தையும் காண்பீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+