Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாசி மாத பலன்: அதிரவைக்கும் மாசி மாதம்.. உலகில் நிகழும் பெரிய மாற்றங்கள்.. தங்கம் விலை குறையுமா?

Subscribe to Oneindia Tamil

Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் உலகில் நிகழப் போகும் விஷயங்கள் என்னென்ன, மாற்றங்கள் ஏற்படுமா, தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம் என்பது மாசி மாதம் ஆகும். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

masi-matha-palan-what-kind-of-changes-will-occur-in-the-world-during-this-masi-month

சனிப்பெயர்ச்சி

வாக்கியப்படி மார்ச் 6 ஆம் தேதி காலை 8.26 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 17 ஆம் தேதி மயானக் கொள்ளை நடைபெறும். மார்ச் 3 ஆம் தேதி சந்திரகிரகணம் மாலை 3.30 மணி முதல் 6.47 வரை கிரகணம் நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் விரதம், வழிபாடு செய்வது நன்மையைத் தரும். இதைத்தொடர்ந்து, மாசி மகம் நடைபெறவுள்ளது. கும்பத்தில் சூரியன் இருந்து தன் சொந்த வீட்டைப் பார்ப்பார். இந்த மாதத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் குறித்து பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

நிலநடுக்கம்

அந்த வகையில் இந்த மாசி மாதத்தில், நிலநடுக்கங்கள் உலகத்தையே புரட்டிப் போடும். இந்தியாவில் ஹிமாலயப் பகுதிகளில், டெல்லி சுற்று வட்டாரத்தில் இருக்கக்கூடிய பகுதிகள் மற்றும் காஷ்மீர் வரை பூமி குலுங்குவது போன்ற நிகழ்வுகள் ஏற்படும். இலங்கையில் பெரும் பிரச்சனைகள் காணப்படும். கலவரங்கள், இயற்கைச் சீற்றங்கள் காணப்படும்.

இயற்கை சீற்றம்

கடல் பகுதியில் சீற்றங்கள், புயல் உருவாகுவது, கப்பல் விபத்துகள் போன்றவை ஏற்படும் சூழல் உள்ளது. கப்பல் போக்குவரத்துகள் தடைபடும். மனிதனின் வக்கிர புத்தியால் சாட்டிலைட்டுகளால் பாதிப்பு ஏற்படும். சாட்டிலைட்டுகளை செயலிழக்க வைக்கும் சூழல் விபத்து. விமான விபத்து, ஆகாய மார்க்க விமான விபத்துகள் பெரிய அளவில் நடைபெறும். விமானப் பயணிகள் மீது தாக்குதல் நடத்துவது, சதி வேலை செய்வது, அதன் மூலம் பல உயிர்கள் போவது போன்றவை ஏற்படும்.

தங்கம் விலை

பெரிய அளவுக்கு தங்கத்தின் விலை உயரும். திருச்செந்தூரில் கடல் உள்வாங்கும். காட்டுப் பகுதிகளில் இருக்கும் விலங்குகளுக்கு பாதிப்புகள் ஏற்படும். யானைகள் ரயிலில் அடிபடுவது, மின்சாரத்தில் அடிபடுவது, யானைக் கூட்டத்தின் வழித் தடங்களை அடைப்பதன் மூலம் பாதிப்புகளைச் சந்திக்கும் சூழல் உண்டு. விவசாயிகளுககு பெரிய பாதிப்புகல் ஏற்படும்.

வெளிநாடு

சரக்கு கப்பல், போர்க் கப்பல்களில் விபத்து, சேதாரம் ஏற்படும். சாதாரண படகு, டிரோன்கள் மூலமாக போர்க் கப்பல்கள் சேதப்படுத்தப்படும். இளைஞர்கள் பொது இடங்களில் வன்முறையில் இறங்குவது, கலவரம் ஏற்படுவது, அரசியல் தலைவர்களுக்கு மனக் குழப்பங்கள் ஏற்படும். அரசியல் தலைவர்களுக்குள் தகாத வார்த்தைகளைப் பேசுவது, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைப் பேசுவது, வெறுப்பான எண்ணங்களைப் பேசுவது, வெளிநாட்டில் வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலையில் பாதிப்பு ஏற்படுவது போன்ற அமைப்பு உள்ளது.

புதிய மருந்துகள்

இந்தியர்களின் வேலைகள், இந்தியர்கள் குறிவைக்கப் படுவார்கள். இந்தியர்களுக்கு எல்லா ஊர்களிலும் பிரச்சனை ஏற்படுத்துவது, சொத்துகளை சேதப்படுத்துவது போன்ற நிலை ஏற்படும். பிரதமர் முதல்கொண்டு பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் எல்லாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மருத்துவத் துறையில் பெரிய புரட்சிகள் ஏற்படும். புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு, கொடூர நோய்கள் தீருவது போன்ற நிலை ஏற்படும்.

காற்று, சூறாவளி

இந்தியாவின் பங்கு பெருமளவில் காணப்படும். ஆந்திராவில் விடிய விடிய மழை, பெருவெள்ளம் ஏற்படும். ரயில் விபத்து கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். காற்று, சூறாவளியால் பாதிப்பு உண்டு. தங்கத்தின் விலை அபரிமிதமான உயர்வைப் பெறும். உலகளவில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். மிகுந்த கவனம், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

சந்திர கிரகணம்

சூரியன் கும்ப மாதத்தில் இருப்பது, ராகுவுடன் சேர்ந்து சஞ்சரிப்பது, கேது பார்வையில் சூரியன் வருவது போன்ற நிலைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். சந்திர கிரகணம் வருவது பெரும் சிக்கலையும், கஷ்டத்தையும் ஏற்படுத்தும். டெல்லியில் பெரிய பாதிப்புகள் காட்டுவதால் அதீத கவனத்துடன் இருக்க வேண்டும். தெய்வ வழிபாட்டைக் கடைப்பிடிப்பது நல்லது. இந்தியர்களுக்கு பொறாமையால் பெரிய அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும் அமைப்பு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+