மாசி மாத பலன்: அதிர்ஷ்டத்தை அள்ளும் மேஷம் ராசி.. வீடு, நிலம், பணம் பெறும் யோகம்
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம் என்பது மாசி மாதம் ஆகும். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

சனிப்பெயர்ச்சி
வாக்கியப்படி மார்ச் 6 ஆம் தேதி காலை 8.26 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 17 ஆம் தேதி மயானக் கொள்ளை நடைபெறும். மார்ச் 3 ஆம் தேதி சந்திரகிரகணம் மாலை 3.30 மணி முதல் 6.47 வரை கிரகணம் நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் விரதம், வழிபாடு செய்வது நன்மையைத் தரும். இதைத்தொடர்ந்து, மாசி மகம் நடைபெறவுள்ளது. கும்பத்தில் சூரியன் இருந்து தன் சொந்த வீட்டைப் பார்ப்பார்.
இந்த மாதத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் குறித்து பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த மாசி மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான லாபங்கள் கிடைக்கும். சொத்து வாங்குவது, வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, முதலீடு செய்வது போன்ற யோகங்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக வராமல் இருந்து வந்த பணங்கள் வந்து சேரும். தொழிலை முறையாகச் செய்வீர்கள். தொழிலில் முதலீடு செய்வீர்கள், முதலீட்டாளர்கள் கிடைப்பார்கள். நல்ல கூட்டாளிகள் கிடைப்பார்கள்.
அதிர்ஷ்டம்
பெயர், புகழ் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் தனித்தொழில் செய்யும் யோகம் உண்டு. அரசாங்கத்தில் கெளரவங்கள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு தலைவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நல்ல பெயர் கிடைக்கும். பெரிய பொறுப்புகளுக்கு வருவீர்கள். நிறுவனங்களுக்கான நிர்வாக இயக்குநராகும் யோகம் உண்டு. வண்டியில் நல்ல மாற்றங்கள் கிடைக்கும். இளம் வயது மேஷம் ராசியினருக்கு திருமணத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும்.
மனநிம்மதி
குடும்பத்தில் அந்நியோன்யம் ஏற்படும். தொழில், உத்தியோகம் நிமித்தமாக பயணங்களை மேற்கொள்வீர்கள். வண்டியில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். எல்லா விஷயங்களிலும் பிஸியாக இருக்கும் காலகட்டமாக இருக்கும். நிம்மதியாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தே நிலைமைகள் மாறி இனி எல்லா விஷயங்களையும் அசால்டாக செய்வீர்கள்.
பொறுமை அவசியம்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என எல்லா விஷயங்களிலும் நன்மைகள் உண்டாகும். செல்வாக்குகள் கூடும் யோகம் உண்டு. மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் விஷயங்களில் எல்லாவற்றிலும் தலையிட்டு சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. நிதானத்துடனும், பொறுமையுடனும் இருப்பது நல்லது.
வழிபாடு
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். முதுகு தண்டுவடம், கால் வரையிலான பாகங்களில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைத் தரும். விநாயகர், ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.
-
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு ஜூன் 7க்குள் வரப்போகும் குட்நியூஸ்.. அதிர்ஷ்டம் காத்திருக்குது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications