Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mithunam Rasi Palan: மிதுன ராசியை வச்சு செய்யப் போகும் கிரகங்கள்.. ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம் என்பது மாசி மாதம் ஆகும். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

masi-matha-palan-what-kind-of-of-benefits-will-get-mithunam-rasi-people-during-this-month

சனிப்பெயர்ச்சி

வாக்கியப்படி மார்ச் 6 ஆம் தேதி காலை 8.26 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 17 ஆம் தேதி மயானக் கொள்ளை நடைபெறும். மார்ச் 3 ஆம் தேதி சந்திரகிரகணம் மாலை 3.30 மணி முதல் 6.47 வரை கிரகணம் நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் விரதம், வழிபாடு செய்வது நன்மையைத் தரும். இதைத்தொடர்ந்து, மாசி மகம் நடைபெறவுள்ளது. கும்பத்தில் சூரியன் இருந்து தன் சொந்த வீட்டைப் பார்ப்பார். இந்த மாதத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் குறித்து பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த மாசி மாதத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்துப் பார்க்கலாம்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசிக்காரர்கள் பயணங்கள் சமயத்தில் உங்களைப் பற்றி மற்றவர்களிடம் தேவையில்லாதவைப் பற்றி பகிர்ந்து கொள்வதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. பேருந்துகள், ரயில்களில் பயணம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிடுவது, தேவையில்லாதவற்றைப் பற்றி பேசுவதைப் பற்றித் தவிர்த்துக் கொள்வது நல்லது. பெரிய அளவுக்கு வெற்றிகளைக் கொடுக்கக் கூடிய காலகட்டம்

வழிபாடு

நிறைய விஷயங்களில் நன்மைகள் ஏற்படும். நீங்கள் செய்யும் காரியங்களில் எல்லாம் தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. காரியசித்தி மாலை , விநாயகர் வழிபாடு நன்மையைத் தரும். பெற்றோர், பெரியோர் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ரத்த அழுத்தம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நவக்கிரகத்தில் இருக்கும் குரு வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

ஆரோக்கியம்

அதீத ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின், ஹார்மோனல் இம்பேலன்ஸ் போன்ற பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. மிதுன ராசியினருக்கு திடீரென வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனத்துடன் பயணிக்க வேண்டும். உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது.

கவனம்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பு ரீதியாக நிறைய பிரச்சனைகள் ஏற்படும். தேவையில்லாத விஷயங்கள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் ரீதியாக அதீத கவனமாக இருக்க வேண்டும். வம்பை விலை கொடுத்து வாங்காமல் இருப்பது நல்லது. எல்லா விஷயங்களிலும் ஏற்றம் உண்டாகும்.

புதிய அறிமுகம்

யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். புதிய அறிமுகத்தில் அதீத கவனம் தேவை. மேலதிகாரிகள், உடன் பணியாற்றுபவர்களிடம் தேவையில்லாத வம்பு, வழக்குகளை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அரசுத் துறை, அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மருந்து மாத்திரைகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வது நல்லது.

சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுபவர்களுடன் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பிள்ளைகள், துணை விஷயங்களில் நன்மைகள் உண்டாகும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவுகளில் ஏற்றம் காணப்படும். திட்டமிட்டுச் செய்யும் காரியங்களில் வெற்றி ஏற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+