மாசி மாத பலன்: ரிஷப ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. கடன் எல்லாம் தீரும்.. நல்ல காலம் பிறந்தாச்சு
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம் என்பது மாசி மாதம் ஆகும். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

சனிப்பெயர்ச்சி
வாக்கியப்படி மார்ச் 6 ஆம் தேதி காலை 8.26 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 17 ஆம் தேதி மயானக் கொள்ளை நடைபெறும். மார்ச் 3 ஆம் தேதி சந்திரகிரகணம் மாலை 3.30 மணி முதல் 6.47 வரை கிரகணம் நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் விரதம், வழிபாடு செய்வது நன்மையைத் தரும். இதைத்தொடர்ந்து, மாசி மகம் நடைபெறவுள்ளது. கும்பத்தில் சூரியன் இருந்து தன் சொந்த வீட்டைப் பார்ப்பார். இந்த மாதத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் குறித்து பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த மாசி மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்துப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பு தொடர்பான விஷயங்களில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். படிப்பில் இருந்து வந்த தடைகள் நீங்கும். நல்ல ஏற்றங்கள் ஏற்படும். செவ்வாய் உச்சமாக இருப்பதால் குடும்பம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். விலை உயர்ந்த பொருள்களைக் கையாளும்போது மிகுந்த கவனம் தேவை. செலவுகள், அதிக விரயங்கள் ஏற்படும்.
லாபங்கள் கொட்டும்
உங்கள் குடும்பத்தில் மற்றவர்கள் தலையிடுவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. மற்றவர்கள் குடும்ப விஷயங்களில் நீங்களும் தலையிடாமல் இருப்பது நன்மை பயக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தொழில், உத்தியோகம், வியாபாரம் அற்புதமாக இருக்கும். மன அழுத்தம் தீரும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.
ஆரோக்கியம்
கணவனாக இருந்தால் மனைவியின் உடல்நிலை, மனைவியாக இருந்தால் கணவன் உடல்நிலையில் கவனம் தேவை. பெற்றோர், பெரியோகரின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். பெரிய அளவுக்கு பெயர், புகழ் கிடைக்கும் யோகம் உண்டு. இழந்த பெருமைகளை மீண்டும் பெறுவீர்கள்.
பணவரவு
புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய காலகட்டம். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும். செல்வாக்குகள் கூடும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. தொட்டது துலங்கக் கூடிய நல்ல காலகட்டம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
வழிபாடு
ஆவணங்கள், விலை உயர்ந்த பொருள்களை கையாளும்போது பத்திரமாகப் பாதுகாத்து வைத்துக் கொள்வது நன்மை பயக்கும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை தோறும் மதியம் வேளைகளில் சாப்பாடு, எலுமிச்சை ஊறுகாய் தானமாகக் கொடுப்பது நன்மை பயக்கும். விநாயகர், ராகவேந்திரர் வழிபாடு ஏற்றத்தைத்தரும்.
-
Dhanusu: தனுசு ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளும் நேரம்.. அள்ளிக் கொடுக்கும் குரு பகவான் -
Viruchigam: ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிக ராசி... குருவின் பார்வையில் கொட்டும் அதிர்ஷ்டம் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின்












Click it and Unblock the Notifications