Simmam Rasi Palan: சிம்ம ராசியினரே புதிய உறவுகளிடம் ரொம்ப கவனம்.. நம்பி ஏமாறாதீங்க
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம் என்பது மாசி மாதம் ஆகும். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

சனிப்பெயர்ச்சி
வாக்கியப்படி மார்ச் 6 ஆம் தேதி காலை 8.26 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 17 ஆம் தேதி மயானக் கொள்ளை நடைபெறும். மார்ச் 3 ஆம் தேதி சந்திரகிரகணம் மாலை 3.30 மணி முதல் 6.47 வரை கிரகணம் நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் விரதம், வழிபாடு செய்வது நன்மையைத் தரும். இதைத்தொடர்ந்து, மாசி மகம் நடைபெறவுள்ளது. கும்பத்தில் சூரியன் இருந்து தன் சொந்த வீட்டைப் பார்ப்பார். இந்த மாதத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் குறித்து பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த மாசி மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்துப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் துணை விஷயத்தில் இணக்கமாகச் செல்வது நல்லது. சண்டை போடுவது, சச்சரவுகள் செய்வது, கோபப்படுவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. 40 வயதைக் கடந்தவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் சொல்வதை நம்பி சிக்கலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும். கோபத்தை தவிர்ப்பது நல்லது.
தொழிலில் ஏற்றம்
ஆண்களாக இருந்தால் பெண்கள், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகம், வியாபாரம், படிப்பு, தொழில் என அனைத்து விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். உங்களைத் திட்டினாலும் உண்மையான அன்பு செலுத்துபவர்களிடம் இணக்கமாகச் செல்வது நல்லது. அவர்களைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் சொன்ன விஷயத்தின் மூலம் அவர்கள் ஆதாயம் காணும் நிலை ஏற்படும். அதன் மூலம் நீங்கள் தொந்தரவுகளை அனுபவிக்கும் காலகட்டமாக இருக்கும்.
வீடு வாங்கும் யோகம்
புதிதாக அறிமுகமாகும் நபர்கள் மூலமாக தொந்தரவுகள் ஏற்படும். பயணம், நட்பு, உறவு என இந்த மாதத்தில் புதிதாக வரும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். பிள்ளைகள், தாயார், தந்தை, நட்பு, உறவுகள் என எல்லா விஷயத்திலும் ஏற்றம் உண்டாகும். புதிதாக வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, தோட்டம் வாங்குவது போன்றவற்றில் அனுகூலம் ஏற்படும்.
யோக பலன்
யோக பலன்களை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். வெளியிடத்திலும், குடும்பத்திலும் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். திட்டமிட்டுச் செய்யும் காரியங்களில் ஏற்றம் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். எந்த விஷயத்தை எடுத்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது.
வழிபாடு
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பேச்சு விஷயத்தில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் பேசுவது நல்லது. நரம்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளையார் வழிபாடு, நவக்கிரகத்தில் இருக்கும் ராகு கேது வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். ஏழைகளுக்கு உணவு தானம் அளிப்பது உங்களுக்கு ஏற்படும் தடைகளை தவிடு பொடியாக்கும்.












Click it and Unblock the Notifications