மாசி மாத ராசி பலன் 2024: கும்ப ராசியில் சூரியன் + சனி கூட்டணி.. 4 ராசிக்காரர்கள் ரொம்ப கவனம்
சென்னை: மாசி மாதம் தமிழ் மாதங்களில் 11வது மாதமாகும். கும்ப ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் இதனை கும்ப மாதம் என்றும் அழைக்கின்றனர். மாசி மாதம் முழுவதும் சூரியன் சனியோடு கூட்டணி அமைத்து கும்ப ராசியில் பயணம் செய்கிறார். நவகிரகங்களின் கூட்டணி, சஞ்சாரத்தினால் துலாம், விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
துலாம்: உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடத்தில் சூரியன் சனியோடு இணைந்து பயணம் செய்யப்போகிறார். அரசு வேலை செய்பவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். செவ்வாய் ராசிக்கு நான்காம் வீட்டில் சுக்கிரன் உடன் பயணம் செய்வதால் வீடு மனை வாங்கி விற்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு தேர்வுகளில் அதிக மதிப்பெண் கிடைக்கும். முயற்சிகள் சாதகமாக முடியும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும். குரு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். செல்வச் செழிப்பு அதிகரிக்கும், பேச்சில் இனிமை கூடும் உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவைப்படும்.

விருச்சிகம்: உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சூரியன் சனியுடன் பயணம் செய்யப்போவதால் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு மனை கிடைக்கும், புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சுக்கிரன் உடன் இணைந்திருக்கிறார். இளைய சகோதரர்களின் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். சகோதரர்களுக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வாகனத்தில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. நான்காமிடத்தில் புதன் பயணம் செய்வதால் மாணவர்கள் படிப்பில் மேன்மை உண்டாகும் வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். பண வருமானம் கூடும் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
தனுசு: சூரியன் சனியோடு இணைந்து மூன்றாமிடத்தில் பயணம் செய்யப்போவதால் அலுவலகத்திலிருந்து நல்ல செய்தி தேடி வரும். அரசாங்க ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் உச்சம் பெற்று சுக்கிரன் உடன் பயணம் செய்வதால் பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் தேடி வரும். குடும்பதினருடன் சிறு உல்லாசப்பயணம் செல்வீர்கள் மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். பண வருமானம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மகரம் : சூரியன் இரண்டாமிடத்தில் சனியோடு பயணம் செய்கிறார். பதவி உயர்வும் சம்பளமும் அதிகரிக்கும், பேச்சில் அதிகாரத் தொனி உண்டாகும். கோபத்தை கட்டுப்படுத்தவும். செவ்வாய் உங்கள் ராசியில் உச்சம் பெற்று பயணம் செய்கிறார். கூடவே சுக்கிரன் இணைந்துள்ளார் மனதிலும் உடம்பிலும் சுறுசுறுப்பும் உற்சாகமுத் அதிகரிக்கும். வீடு மனை வாங்கும் யோகம் தேடி வரும். வண்டி வாகனம் வாங்குவீர்கள். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும், நினைத்தவை எளிதில் நிறைவேறும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ராசியில் பயணம் செய்வதால் ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். மனதில் தெம்பும் தைரியமும் அதிகரிக்கும்.
கும்பம்: சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் சனியோடு பயணம் செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும், அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் உடன் பயணம் செய்வதால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும் பேச்சில் இனிமை கூடும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செய்யும் செயல்கள் யாவும் சிறப்படையும், முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும், நினைத்தவை எல்லாம் நிறைவேறும் பணவருமானம் அதிகரிக்கும்.

மீனம்: சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் சனியோடு பயணம் செய்யப்போவதால் கவனம் தேவை. அரசாங்க விசயத்தில் கவனம் தேவை. அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்திவிடுவது நல்லது, அப்பாவுக்காக செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11வது வீட்டில் பயணம் செய்கிறார் கூடவே சுக்கிரன் இருப்பதால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். கோபத்தை கட்டுப்படுத்தவும். பணம் விசயத்தில் கவனம் தேவை. எதிர்பாராத அதிர்ஷ்டம் தேடி வரும். குல தெய்வ அருள் கிடைக்கும். செய்யும் தொழிலில் சிறப்பு உண்டாகும். மாசி மாதம் மீன ராசிக்காரர்களுக்கு மகத்துவம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications
