மாசி மாத ராசி பலன் 2022: ரிஷபம், மிதுன ராசிக்காரர்களுக்கு மாசியில் அதிர்ஷ்டம் தேடி வரும்
மாசி மாதம் கும்ப மாதம். இந்த மாதத்தில் நவகிரங்களின் சஞ்சாரம் கூட்டணியால் ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
சென்னை: மாசி மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். தமிழ் மாதங்களில் மாசி மாதம் 11வது மாதம். அனைத்து தெய்வங்களையும் வழிபட மிகச்சிறப்பு மிக்க மாதம். திருமால், மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான் என்கிறது புராணம். மகாசிவராத்திரி, மாசி மகம் உள்ளிட்ட பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்த மாதத்தில் கிரகங்களின் கூட்டணி சேர்க்கை பார்வையால் ரிஷபம், மிதுன ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
காலபுருஷ தத்துவப்படி சூரியன் குரு கூட்டணி லாப ஸ்தானத்தில் 11வது வீட்டில் நிகழ்கிறது. மாத இறுதியில் புதனும் கும்ப ராசியில் இணையப்போகிறார். மகர ராசியில் செவ்வாய் சனி,சுக்கிரன் இணையப்போகிறது. ராகு ரிஷபத்திலும் கேது விருச்சிகத்திலும் பயணம் செய்கின்றனர்.
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு ராசியில் ராகு, ஏழாம் வீட்டில் கேது, எட்டாம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் சனி, புதன், பத்தாம் வீட்டில் சூரியன் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இதே போல மிதுன ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் விரைய ஸ்தானத்தில் ராகு, ஆறாம் வீட்டில் கேது, ஏழாம் வீட்டில் சுக்கிரன், செவ்வாய், எட்டாம் வீட்டில் சனி,புதன், ஒன்பதாம் வீட்டில் குரு, சூரியன் என கிரகங்கள் பயணம் செய்கின்றன.இந்த கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

ரிஷப ராசி
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு நவ கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. வேலையில் நீண்ட காலமாக இருந்த பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு மேலோங்கும் பணவரவு அதிகரிக்கும் சேமிப்பு உயரும், பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டம் வந்து திக்கு முக்காட வைக்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் பங்கு சந்தை முதலீடுகள் லாபத்தைத் தரும். கலைத்துறையினருக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் கவலைகள் கஷ்டங்கள் நீங்கும் உறவினர்கள் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும்.

கடன் பிரச்சினை நீங்கும்
கொடுத்த கடன் வசூலாகும் நீண்ட நாட்கள் வராது என்று நினைத்த பணம் வசூலாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும் வீடு வாகன பராமரிப்புச் செலவு வரும். குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர்கள் அரசியல் துறையில் இருப்பவர்கள் உயர் பதவியில் இருப்பவர்கள் கவனமாக பேசுவது நல்லது நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். இந்த மாதம் உங்களின் வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும் பிள்ளைகளால் நல்ல செய்தி தேடி வரும் வேலையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறையும் பெண்கள் நீண்ட நாட்களாக நினைத்திருந்த காரியம் நிறைவேறும் சாதுரியமான பேச்சால் காரியத்தை சாதிப்பீர்கள். தொழில் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். புதிய தொழில் வியாபாரம் தொடங்க நல்ல நேரம் கை கூடி வந்துள்ளது. மாணவர்களுக்கு சாதகமான நேரம் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும், தேர்வில் திறமை பளிச்சிடும் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

மிதுன ராசி
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு மாசி மாதம் உற்சாகமான மாதம் உற்சாகமாக செயல்படுவீர்கள் புகழ் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சுபகாரியங்கள் நிறைவேறும். கணவன் மனைவிக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரம் செலவழிப்பீர்கள் சக பணியாளர்களிடம் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பேச்சில் கனிவு அதிகரிக்கும் உங்களின் பேச்சுக்கு மதிப்பு கூடும். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்கும் பங்குச்சந்தை முதலீடுகள் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும் எதிர்பார்த்த நல்ல செய்திகள் தேடிவரும்.

சுப காரியங்கள் நடைபெறும்
குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் அதிர்ஷ்டம் தேடி வரும். நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் விலகி ஆரோக்கியம் அதிகரிக்கும் கடன் பிரச்சினைகள் நீங்கும் எதிர்பார்த்த பணம் வரும் பொருளாதார நிலை உயரும் பயணங்களால் நன்மைகள் அதிகரிக்கும் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தினருக்கும் கணவன் மனைவியிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும் பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் நீங்கும். தொழில் வியாபார விஷயமாக வெளியூர் பயணம் செல்வீர்கள்.

பெண்களுக்கு அதிர்ஷ்டம்
வேலை செய்யும் இடத்தில் சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் சுப விரயச் செலவுகள் உண்டாகும். நீண்டகால நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும் அக்கம் பக்கத்தினர் இடையே செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும் பணிச்சுமை நீங்கும். பெண்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதமாக அமைந்துள்ளது. ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும் மாணவர்களுக்கு மன மாற்றம் மதிப்பெண்கள் அதிகரிக்கும், பைரவரை செவ்வரளி மாலை சாற்றி வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications