மாசி மாத ராசி பலன் 2022 : கன்னி ராசிக்காரர்கள் வாழ்வில் கவலைகள் நீங்கி சந்தோஷம் குடியேறும்

மாசி மாதம் கும்ப மாதம். இந்த மாதத்தில் நவகிரங்களின் சஞ்சாரம் கூட்டணியால் கன்னி ராசிக்காரர்களுக்கு கவலைகள் நீங்கி சந்தோஷம் குடியேறும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாசி மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். தமிழ் மாதங்களில் மாசி மாதம் 11வது மாதம். அனைத்து தெய்வங்களையும் வழிபட மிகச்சிறப்பு மிக்க மாதம். திருமால், மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான் என்கிறது புராணம். மகாசிவராத்திரி, மாசி மகம் உள்ளிட்ட பல பண்டிகைகளை கொண்டாடப்படுகின்றன. இந்த மாதத்தில் கிரகங்களின் கூட்டணி சேர்க்கை பார்வையால் கன்னி ராசிக்காரர்கள் வாழ்வில் கவலைகள் நீங்கி சந்தோஷம் குடியேறும். இன்னும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று விரிவாக பார்க்கலாம்.

காலபுருஷ தத்துவப்படி சூரியன் குரு கூட்டணி லாப ஸ்தானத்தில் 11வது வீட்டில் நிகழ்கிறது. மாத இறுதியில் புதனும் கும்ப ராசியில் இணையப்போகிறார். மகர ராசியில் செவ்வாய் சனி,சுக்கிரன் இணையப்போகிறது. ராகு ரிஷபத்திலும் கேது விருச்சிகத்திலும் பயணம் செய்கின்றனர்.

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் பாக்ய ஸ்தானத்தில் ராகு, மூன்றாம் வீட்டில் கேது, நான்காம் வீட்டில் சுக்கிரன், செவ்வாய், ஐந்தாம் வீட்டில் சனி,புதன், ஆறாம் வீட்டில் குரு, சூரியன் என கிரகங்கள் பயணம் செய்கின்றன.இந்த கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

 பண வருமானம் அதிகரிக்கும்

பண வருமானம் அதிகரிக்கும்

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு மாசி மாதத்தில் நவகிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் உங்களின் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும் நண்பர்கள் உறவினர்கள் உதவியோடு வெற்றிகள் தேடி வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெற ஏதுவாக பல வழிகளில் வருமானம் வந்து சேரும் நிதி நெருக்கடிகள் நீங்கும். பண வருமானம் அதிகரிக்கும் செழிப்பான மாதமாக உள்ளது.

வேலையில் சிக்கல் நீங்கும்

வேலையில் சிக்கல் நீங்கும்

வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் மந்த நிலை மாறி சுறுசுறுப்பும் உற்சாகம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும் வீடு மனை வாங்கும் யோகம் தேடி வரும் செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். குருவின் பார்வைகள் சாதகமாக இருப்பதால் குதூகலம் அதிகரிக்கும். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும்.

 பெண்களுக்கு சந்தோஷம்

பெண்களுக்கு சந்தோஷம்

பண வரவு திருப்தியாக இருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் நீங்கும் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பெண்கள் சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பேச்சில் இனிமை அதிகரிக்கும் உடல்நிலை நன்றாக இருக்கும். தாய்வழி சொந்தங்களால் நன்மைகள் நடைபெறும்.

தொட்டது துலங்கும்

தொட்டது துலங்கும்

மன தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் ஆலய தரிசனம் செய்வீர்கள் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் உங்களின் நேர்மையும் நாணயமும் பலராலும் பாராட்டப்படும். புதிய பதவிகள் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. அரசு வேலைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நீங்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். நினைத்த காரியம் நிறைவேறும் தொட்டது துலங்கும் மாதமாக மாசி மாதம் உள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+