மாசி மாத ராசி பலன் 2022 : துலாம் ராசிக்காரர்களுக்கு வெற்றி மீது வெற்றி வந்து சேரும் மாதம்
மாசி மாதம் கும்ப மாதம். இந்த மாதத்தில் நவகிரங்களின் சஞ்சாரம் கூட்டணியால் துலாம் ராசிக்காரர்களுக்கு கவலைகள் நீங்கி சந்தோஷம் குடியேறும்.
சென்னை: மாசி மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். தமிழ் மாதங்களில் மாசி மாதம் 11வது மாதம். அனைத்து தெய்வங்களையும் வழிபட மிகச்சிறப்பு மிக்க மாதம். திருமால், மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான் என்கிறது புராணம். மகாசிவராத்திரி, மாசி மகம் உள்ளிட்ட பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்த மாதத்தில் கிரகங்களின் கூட்டணி சேர்க்கை பார்வையால் துலாம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
காலபுருஷ தத்துவப்படி சூரியன் குரு கூட்டணி லாப ஸ்தானத்தில் 11வது வீட்டில் நிகழ்கிறது. மாத இறுதியில் புதனும் கும்ப ராசியில் இணையப் போகிறார். மகர ராசியில் செவ்வாய் சனி,சுக்கிரன் இணையப் போகிறது. ராகு ரிஷபத்திலும் கேது விருச்சிகத்திலும் பயணம் செய்கின்றனர்.
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் அஷ்டம ஸ்தானத்தில் ராகு, இரண்டாம் வீட்டில் கேது, மூன்றாம் வீட்டில் சுக்கிரன், செவ்வாய், நான்காம் வீட்டில் சனி,புதன், ஐந்தாம் வீட்டில் குரு, சூரியன் என கிரகங்கள் பயணம் செய்கின்றன.இந்த கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

துலாம் ராசி
மாசி மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியன் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் குரு உடன் இணைந்து லாப ஸ்தானத்தைப் பார்க்கிறார். காரியங்களில் வெற்றி உண்டாகும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் திருமண சுப காரியம் கை கூடி வரும். வரன் பார்க்கலாம் காரிய வெற்றி உண்டாகும். எதையும் நினைத்து பயப்பட தேவையில்லை. வெற்றி மீது வெற்றி வந்து சேரப் போகிறது.

காதல் இனிக்கும்
ராசி அதிபதி சுக்கிரன் செவ்வாயுடன் இணைந்து மூன்றாம் வீட்டிலும் நான்காம் வீட்டிலும் பயணம் செய்வதால் சுகமான மாதமாக அமையும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் காதல் இனிக்கும். குரு பார்வை இருப்பதால் சுப காரியங்கள் கை கூடி வரும். கால சர்ப்ப தோஷ காலமாக இருப்பதால் ஒவ்வொரு செயலையும் கவனத்தோடு செய்வது நல்லது.

பண வருமானம் அதிகரிக்கும்
பணம் கொடுக்கல் வாங்கல் விசயங்களில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பண வரவு வரும். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பிள்ளைகள் விசயங்களில் சுப காரியங்கள் நடைபெறும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சொந்தங்கள் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். ஒருமுறைக்கு இருமுறை எதையும் யோசித்து செய்வது நல்லது.

வேலை, புரமோசன் கிடைக்கும்
வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். ராகு எட்டாம் வீட்டில் இருப்பதால் சில காரியங்களை நிறுத்தி வைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். எதையும் நிதானமாக செய்து முடிப்பீர்கள். வீடு இடமாற்றம் உண்டாகும். சிலருக்கு வீடு கட்டும் யோகம் கை கூடி வரும். மூத்த குடிமக்கள் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மாணவர்களுக்கு இந்த மாதத்தில் சில தடுமாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளது லட்சுமி ஹயக்ரீவரை வணங்க நன்மைகள் நடைபெறலாம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications