மாசி மாத ராசி பலன் 2024: கும்ப ராசியில் சூரியன் + சனி கூட்டணி.. குடும்பத்தில் குதூகலம் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை.. 30 ஆண்டுகள் தாழ்ந்தாரும் இல்லை என்று சொல்வார்கள். கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்குப் பின் சனி ஆட்சி பெற்று அமர்ந்திருக்க சூரியன் கூட்டணி அமைக்கப்போகிறார். 30 நாட்கள்தான் என்றாலும் 30 ஆண்டு காலம் போல சிலர் வாழ்க்கையில் அதிரடி மாற்றம் ஏற்படும். மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் நவகிரகங்களின் கூட்டணியால் 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கிரகங்களின் மாற்றம்: மாசி மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் மகர ராசியில் நிற்கிறார். மகர ராசியில் நிற்கும் புதன் ஏழாம் தேதி கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார். பின்னர் 27ஆம் தேதி மீன ராசிக்கு செல்கிறார். குரு மேஷ ராசியில் இருக்கிறார். தனுசு ராசியில் இருக்கும் சுக்கிரன் 24ஆம் தேதி கும்ப ராசிக்கு செல்கிறார். சனி கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார். ராகு மீன ராசியில் இருக்கிறார். கேது கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.

Masi Month Rasi Palan 2024: Mesham to Meenam prediction for 12 zodiac signs

மேஷம்: வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
அரசாங்கத்தால் வருகின்ற நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்க. புதிய கான்ட்ராக்ட்கள் பெருவீங்க. நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி வெளிநாட்டிலிருந்து கிடைக்குமுங்க. வியாபாரத்தை விருத்தி செய்வீங்க. தொழில் போட்டிகளை துடைத்து எறிவீங்க. வழக்கறிஞர்களும் மருத்துவர்களும் புதிய சாதனை படைப்பீங்க. நண்பனோடு சேர்ந்து கூட்டாக தொழில் தொடங்குவீங்க. மனதுக்கு பிடித்த பெண்ணிடம் காதலை வெளிப்படுத்துவீங்க. சகோதரியின் திருமண ஏற்பாட்டை நடத்துவீங்க. இரும்பு சம்பந்தப்பட்ட வியாபாரத்தில் இறங்குவீங்க. குவாரி தொழிலில் கவனம் செலுத்துவீங்க. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் தடுமாறுவீங்க. நீதிமன்றத்தில் நடந்த சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பை பெறுவீங்க.
திருச்செந்தூர் முருகனை வழிபடுங்க. விருப்பமான காரியங்கள் நிறைவேறுமுங்க.


ரிஷபம்: கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....
எடுத்த காரியத்தில் இணையற்ற வெற்றி பெறுவீங்க. தொழிலில் முன்னேற்றம் அடைந்து சமுதாயத்தில் புதிய மரியாதையை அடைவீங்க. அரசாங்க வேலையில் சம்பள உயர்வு இடம் மாறுதலும் பெறுவீங்க. பழைய வீட்டை மராமத்து வேலை செய்து புதுப்பிப்பீங்க. இரவு நேரத்தில் தொந்தரவு செய்த இருமல் பிரச்சனைக்கு மருத்துவ ரீதியாக தீர்வு காண்பீங்க. குடும்பத்தினருடன் முக்கிய கோயில் தரிசனம் செய்வீங்க. கூடப்பிறந்த சகோதரருக்கு முக்கிய தேவைக்காக பண உதவி செய்வீங்க. வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வீங்க ஆடம்பரமான விருந்துகளில் கலந்துகொண்டு அந்தஸ்தை காட்டுவீங்க. வீண் சண்டை போட்டு சங்கடத்தில் மாட்டிக் கொள்ளாதீங்க. திருவண்ணாமலை சென்று வாங்க. பெருமையும் புகழும் அதிகரிக்குமுங்க.

மிதுனம்: எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே...
எதுக்கெடுத்தாலும் கோபப்படுவதை நிறுத்துங்க. மத்தவங்கள குறை சொல்லி உறவுகளை கெடுக்காதீங்க. தொழிலில் அதிகம் முன்னேற்றத்தை காண்பீங்க. குடும்பத்திற்காக இரவு பகல் பாராமல் வேலை செய்வீங்க. அரசாங்க ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீங்க. மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்து மகனின் ஆசை நிறைவேற்றுவீங்க. வியாபாரத்தை லாபத்தோடு நடத்துவீங்க. முக்கிய கடன்களை அடைத்து நிம்மதி பெருமூச்சு விடுவீங்க. எச்சரிக்கையாக வாகனம் ஓட்டுங்க. விபத்துகளில் சிக்கி அவதிப்படாதீங்க. இளைய சகோதரர் உங்களுக்கு பக்கபலமாக இருப்பாருங்க. கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்கு பண உதவி செய்வீங்க. திருமோகூர் காளமேகப் பெருமாளை வழிபடுங்க. சூழும் துன்பங்கள் தூர ஓடுமுங்க.

கடகம்: வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...
எடுத்தோம் கவிழ்த்தோம் என எந்த காரியத்திலும் இறங்காதீங்க. சிக்கனமா செலவு பண்ணுங்க. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்துவீங்க. வீடு கட்டுவதற்கு நிலம் வாங்குவீங்க. சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்குமுங்க. மாத முற்பகுதியில் மந்தமாக நடந்த வியாபாரம் பிற்பகுதியில் சூடு பிடிக்குமுங்க. வேலை இடத்தில் கவனம் அதிகமாக இருக்கணும்ங்க. ஆடல் பாடல் போன்ற நிகழ்ச்சிகளில் மனம் நாட்டம் கொள்ளுமுங்க. திடீரென்று வெளியூர் பயணம் போக வேண்டிய கட்டாயம் ஏற்படுமுங்க. நெருக்கமாக இருந்த ஒருத்தர் உங்களுக்கு எதிரா திரும்புவாருங்க. வியாபாரத்திற்கு இடையூறு செய்வாருங்க. குடும்பத்தினரிடம் அளவாக பேசுங்க. பெற்றோர் கேட்டுக்கிட்டதால காதலை கைவிடுவீங்க.
தஞ்சை பிரகதீஸ்வரர் பெருமானை வழிபடுங்க. நெஞ்சத்து ஆசைகள் எல்லாம் நிறைவேறுமுங்க.

சிம்மம்: அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
வரவுக்கு மேல் செலவு வந்து வாட்டி எடுக்குமுங்க. பெற்றோரிடம் சம்மதம் வாங்கி காதல் செய்த பெண்ணையே திருமணம் முடிப்பீங்க. தொழிலுக்கு இடையூறாக இருந்த எதிர்ப்புகளை முறியடிச்சு சாதனை படைப்பீங்க. சாமர்த்தியமாக பேசி வியாபாரத்தில் இருந்த சங்கடங்களை நீக்குவீங்க. தொழிலில் அதிக முதலீடு செய்யாதீங்க. எந்த காரியத்திலும் நிதானமா செயல்படுங்க. சகோதரிக்கு திருமணம் பேசி முடிப்பீங்க. கோபமா பிறந்த வீட்டுக்கும் போன மனைவியை கூட்டிட்டு வருவீங்க. தொழில் காரணமா சில நாள் குடும்பத்தை விட்டு வெளியூர் போவீங்க. ஆலோசனை சொல்கிறேன் என்ற வகையில் உறவினர்கள் குடும்பத்துக்கு கலகம் ஏற்படுத்துவாங்க எச்சரிக்கையா இருங்க. காளகஸ்திநாதரை வழிபடுங்க. கஷ்டங்கள் பறந்தோடுமுங்க.

கன்னி: அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...
எதிர்பார்த்த வங்கி கடனை எந்தவித இடையூறும் இல்லாமல் பெறுவீங்க. குலதெய்வம் கோயிலுக்கு போய் வழிபாடு செய்வீங்க. சிக்கலாக இருந்த நிலப்பிரச்சனையை பேசி முடிப்பீங்க. வெற்றிகரமா தொழிலை நடத்தி வருமானத்தை பெருக்குவீங்க. குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிக்கான ஏற்பாட்ட செய்வீங்க. கணவனும் மனைவியும் புரிஞ்சுக்காம சண்டை போடுவீங்க. விட்டுக் கொடுத்து போறது ரொம்ப நல்லதுங்க. ரியல் எஸ்டேட் தொழில் உங்களுக்கு கை கொடுக்குமுங்க. பெரிய மனிதர்களின் ஆதரவால் மதிப்பும் மரியாதையும் கூடுமுங்க. நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிக்கு மருத்துவரைப் பார்த்து பரிசோதனை செய்வீங்க..
காரைக்குடி முத்துமாரியம்மனை வழிபடுங்க. நிறைவான செல்வம் பெறுவீங்க.

துலாம்: தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...
தைரியமாக தொழிலில் முதலீடு செய்யுங்க. வியாபாரத்தில் எதிர்பாராத வெற்றி கிடைக்குமுங்க. உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்குமுங்க. வாகனங்களில் போகும்போது கவனத்தை சிதற விடாதீங்க. விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்குங்க. வசீகரமான பேச்சால் வாடிக்கையாளர்கள வளைச்சி போடுவீங்க. அரசு ஊழியர்களுக்கு இடம் மாறுதல் ஏற்படுமுங்க. கலகலப்பா பேசி காதலியின் மனசுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்குவீங்க. மூட்டு வலிக்காக ஹோமியோபதி வைத்தியம் பார்ப்பீங்க. பூர்வீக சொத்து கைக்கு வந்து சேருமுங்க. விளையாட்டா பேசுவதாக நினைத்து வில்லங்கத்தில் மாட்டிக்காதீங்க.
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாளை வழிபடுங்க. சகல சௌபாக்கியங்களும் சித்திக்குமுங்க.

விருச்சிகம்:
போர்க்குணம் கொண்ட பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...
அடுத்தவங்க விஷயத்துல தலையிடாதீங்க. அடிதடி ஆகி போலீஸ் ஸ்டேஷனுக்கு போற நிலைக்கு ஆளாதீங்க. வீம்புக்காக ஆடம்பர செலவு செய்வீங்க. முக்கியமான தேவைக்கு கடன் வாங்குவீங்க. நில விற்பனை தள்ளி போகுமுங்க. அவசரப்பட்டு யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. வெளிநாடு போவதற்கான ஏற்பாடுகளை செய்து முடிப்பீங்க. ரோட்டை கிராஸ் பண்ணும் போது மாடியில் ஏறும் போது கவனமா இருங்க. இரத்த காயம் பட வாய்ப்பு உண்டுங்க. பண வரவு தாராளமாக இருக்குமுங்க. வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீங்க. வீட்டுப் பிரச்சனையை தீர்க்க முடியாம தூக்கத்தை தொலைப்பீங்க.
பழனிமலை முருகனின் பாதம் பணியுங்க. கழனி செழித்து செல்வம் பெருகுமுங்க.

தனுசு: வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...
முக்கியமான கடனை அடைக்க முடியாமல் தடுமாறுவீங்க. வியாபாரத்தில் ஏற்பட்ட மந்தநிலையால் மனம் சங்கட்டப்படுவீங்க. ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு யோகமான காலமுங்க. புரிந்து கொள்ளாமல் பேசும் காதலியை சமாதானப்படுத்த முடியாமல் திணறுவீங்க. வெளியூர் பயணங்களில் அதிக நன்மையை எதிர்பாக்காதீங்க. கலைத்துறையினருக்கு பிரகாசமான வாய்ப்பு கிடைக்குமுங்க. வீட்டில் இருக்கும் நகை பணத்தை பத்திரமாக பூட்டி வையுங்க. அரசாங்கத் தேர்வில் வெற்றி பெறுவீங்க. வியாபாரத்தில் இருந்த சிக்கலை தீர்த்து சகச நிலைக்கு கொண்டு வருவீங்க.
பட்டமங்கலம் சென்று தட்சிணாமூர்த்தியை வணங்கி வாங்க. தொட்டதெல்லாம் துலங்குமுங்க.

மகரம்: வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
நினைத்த காரியம் நடக்கவில்லையே என்று மன வருத்தப்படுவீங்க. முக்கியமான கடனை அடைக்க முடியாமல் தடுமாறுவீங்க. இரும்பு மணல் ஜல்லி வியாபாரத்தில் நல்ல லாபம் பார்ப்பீங்க. இழுபறியாக இருந்து வந்த தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனையை மாசக் கடைசியில் முடிவுக்கு கொண்டு வருவீங்க. பெற்றோரை எதிர்த்து காதலியின் கரம் பிடிப்பீங்க. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை மருத்துவமனையில் சேர்ப்பீங்க. மனைவியின் கோபத்தை தவிர்க்க முடியாமல் மாமனாரோடு சண்டை போடுவீங்க. வரதட்சணை பிரச்சனையால் சகோதரியின் திருமணத்தில் தடங்கல் உண்டாகுமுங்க. திடீரென்று பண செலவு உண்டாகி சிரமப்படுவீங்க.
திருநள்ளாறு தர்ப்ப ஆரண்ய ஈஸ்வரரை வழிபடுங்க. அவமிருத்த யோகம் விலகும்முங்க.

கும்பம்: சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...
எதிர்ப்புகளை வெற்றிகரமாக முறியடிப்பீங்க. தொழில் போட்டியாளர்களை சாமர்த்தியமாக சமாளிப்பீங்க. உத்தியோகத்தில் உயர்ந்த பதவியை அடைவீங்க. ரத்த சம்பந்தப்பட்ட உறவுகளுக்கு செலவு செய்வீங்க. பிள்ளைகளை படிப்புக்காக வெளிநாடு அனுப்பி வைப்பீங்க. இரவு பகலாக வேலை பார்த்து வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீங்க. பக்கத்து வீட்டுக்காரருடன் இருந்த பிரச்சனையை பக்குவமாக பேசி தீர்த்துக் கொள்வீங்க. தடைபட்ட திருமணத்தை நடத்துவீங்க. முழு மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுவீங்க. இல்லாதவர்களுக்கு உதவி செய்து மரியாதையை உயர்த்துவீங்க. கணவன் மனைவி பிரச்சனையை கமுக்கமாக சரி செய்வீங்க.
ஒத்தக்கடை யோக நரசிம்மரை வழிபடுங்க. ஆயுள் விருத்தியாகுமுங்க.

மீனம்: பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே...
பிள்ளைகளால் சின்ன சின்ன பிரச்சினையை சந்திப்பீங்க. தொழிலுக்காக நெருங்கிய நண்பரிடம் கடன் வாங்குவீங்க. வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் போடுவீங்க. தேவையில்லாமல் சண்டை போட்டு காதலியின் கோபத்துக்கு ஆளாவீங்க. வியாபாரத்தை விரும்பிப்படுத்துவீங்க. வெற்றிகரமாக நடத்துவீங்க. தொழிலில் முதன்மையான இடத்தை பிடிப்பீங்க. குழந்தை பாக்கியம் கிடைத்து மகிழ்ச்சியில் திளைப்பீங்க. தாய்மாமன் பிரச்சனையால் நடைபெறவிருந்த திருமணத்தில் சிக்கல் உண்டாகுமுங்க. ஆசைப்பட்ட புதிய வாகனத்தை வாங்குவீங்க. ஆன்மீகப் பெரியவரின் ஆசியால் உயர்ந்த இடத்திற்கு வருவீங்க. ஒதுங்கிப் போன உறவினர்களை ஒன்று சேர்ப்பீங்க. அழகர் கோவில் கள்ளழகர் பெருமானை வழிபடுங்க. தொழில் விருத்தி அடையும்முங்க.

உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+