ஆரம்பிக்கலாங்களா.. தனுசு ராசிக்கு அற்புதமான மாற்றத்தை தரும் மாசி மாதம்
மாசி மாதம்: தமிழ் மாதங்களின் அடிப்படையில் நாம் தற்போது தை மாத இறுதியில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில்(13.2.2025 தேதி முதல் 14.3.2025 தேதி வரை) கிரகங்களின் மாற்றம் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தனுசு ராசியில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்களை காணலாம்.
உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமான தைரிய, வீரிய ஸ்தானத்தில் சனி, புதன், சூரியன் ஆகிய 3 கிரகங்கள் உள்ளன. நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று ராகுவுடன் இணைந்திருக்கிறார்கள். ராசிக்கு ஆறாம் இடத்தில் குரு பகவான் உள்ளார். சுக்கிரன் - குரு பரிவர்த்தனை நடைபெறவுள்ளது. ஏழாம் இடமான களஸ்திர ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்துள்ளார். ராசிக்கு 10 ஆம் இடத்தில் கேது அமர்ந்துள்ளார்.

மாசி 1 ஆம் தேதி (13.2.2025) உங்கள் ராசிக்கு 9 ஆம் இடத்துக்கான அதிபதியான சூரிய பகவான் மூன்றாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். மாசி 12 ஆம் தேதி (24.2.2025) செவ்வாய் வக்கிர நிவர்த்தி அடைகிறார். மாசி 15 ஆம் தேதி (27.2.2025) புதன் உங்களின் மூன்றாம் இடத்தில் இருந்து நான்காம் இடத்துக்கு பெயர்ச்சியாக உள்ளார்.
மீனம் ராசியில் புதன் நீசமாகப் போகிறார். அதே ராசியில் சுக்கிரன் உச்சத்திலும், குரு பரிவர்த்தனையால் நீட்சபங்க ராஜயோகம் கிடைக்கும். ஒரு கிரகம் உச்சத்தில் இருந்து மற்றொரு கிரகம் நீட்சமாகும்போது. அதை நீட்சபங்க ராஜயோகம் என்பார்கள். இது நல்ல பலன்களை தரும். மாசி 17 ஆம் தேதி (1.3.2025) உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சுக்கிரன் வக்கிரமாக போகிறார்.
உங்களின் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நம்பிக்கையும் பல மடங்கு உயரும். உங்கள் வளர்ச்சிக்கு தேவையான ஏராளமான மாற்றங்களை செய்யப் போகிறீர்கள். இதனால் உங்களின் வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடன் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் வரும்.
நகை, ஆபரணங்கள் சேர்க்கை ஏற்படும். உங்களின் மாமனார் மற்றும் இளைய சகோதரர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வீடு, இருப்பிடம் சார்ந்த மாற்றங்களால் ஆதாயம் உண்டு. மூன்றாவது மனிதர்களால் நன்மை ஏற்படும். நிலம், வீடு, வாகனம் சொத்து வாங்குவதற்கு தீவிரமாக முயற்சி செய்வீர்கள்.
மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். இஷ்ட தெய்வத்தின் அருளால் நீண்ட நாள் பயணம் ஏற்படும். தொழிலில் சிறிய பின்னடைவு ஏற்பட்டு பிறகு முன்னேற்ற பாதையில் செல்லும். தொழிலில் அதிக முதலீடு செய்வீர்கள். உத்யோகம் மற்றும் தொழிலில் பதவி உயர்வு, ஊக்கத்தொகை கிடைக்கும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
மாதத்தின் பிற்பகுதியில் மட்டும் உங்களின் பேச்சில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களை நம்பி முக்கிய வேலைகளை ஒப்படைக்க வேண்டும். செல்போன், லேப்டாப் உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகளை பத்திரமாக பார்த்து கொள்வது நல்லது. உங்களின் வாழ்க்கை துணையின் பிடிவாதம் அதிகரிக்கும். இதனால் மனச்சங்கடங்கள் ஏற்படும்.
தூக்கமின்மை, மன உளைச்சல் ஏற்படும். காதல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முக்கிய முடிவுகளை மாத இறுதியில் செய்வது நல்லது. கோபத்தை குறைத்துக் கொள்வது வீண் சங்கடங்களை தவிர்க்கும். வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுக்கு காது, மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. அருகில் உள்ள சிவாலயம் சென்று தரிசனம் செய்து வருவதால் நல்ல மாற்றங்கள் நிகழும்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications