நினைத்தே பார்க்க முடியாத லாபம்.. கடகம் ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் மாசி மாதம்

Subscribe to Oneindia Tamil

மாசி மாத பலன்கள்: தமிழ் மாதங்களின் அடிப்படையில் நாம் தற்போது தை மாத இறுதியில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் (13.2.2025 தேதி முதல் 14.3.2025 தேதி வரை) கிரகங்களின் மாற்றம் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடக ராசியில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்களை காணலாம்.

உங்கள் ராசியின் மூன்றாம் இடத்தில் கேது அமர்ந்திருக்கிறார். இது தைரிய, வீரிய ஸ்தானத்தை குறிக்கும். ராசிக்கு எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் சனி, புதன், சூரியன் ஆகிய 3 கிரகங்கள் உள்ளன. ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று ராகுவுடன் இணைந்திருக்கிறார்கள். ராசிக்கு 11ஆம் இடமான லாப ஸ்தானத்தில் குரு பகவான் உள்ளார். சுக்கிரன் - குரு பரிவர்த்தனை நடைபெறவுள்ளது. ராசிக்கு 12 ஆம் இடத்தில் செவ்வாய் அமர்ந்துள்ளார்.

Masi month rasi palan Kadagam

மாசி 1 ஆம் தேதி (13.2.2025) உங்கள் ராசிக்கு இரண்டாம் அதிபதியான சூரிய பகவான் எட்டாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். மாசி 12 ஆம் தேதி (24.2.2025) உங்களின் யோகாதிபதியான செவ்வாய் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இது ஓரளவுக்கு நல்ல பலன்களை தரும் மாசி 15 ஆம் தேதி (27.2.2025) புதன் எட்டாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடத்துக்கு பெயர்ச்சியாக உள்ளார்.

மீன ராசியில் புதன் நீசமாகப் போகிறார். அதே ராசியில் சுக்கிரன் உச்சத்திலும், குரு பரிவர்த்தனையால் நீச்சபங்க ராஜயோகம் கிடைக்கும். இதனால் 3, 12 இடம் பலமடைய போகிறது. மாசி 17 ஆம் தேதி (1.3.2025) உங்கள் ராசியின் சுகாதிபதியான சுக்கிரன் வக்கிரமாக போகிறார். சுக்கிரனின் நகர்வை முக்கியமாக பார்க்க வேண்டும்.

சூரியன் உங்களின் குடும்பம், பழக்க வழக்குத்துக்கு அதிபதி. அவர் ஏழாம் இடத்தில் இருந்து எட்டாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். அவர் இரண்டாம் இடத்தை பார்க்கிறார். உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்குள் இருந்த மன கசப்புகள் நீங்கும். குடும்பத்தினர் இணைந்து தொலைதூரத்தில் உள்ள கோயில்களுக்கு செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.

உங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை சரியாக முதலீடு செய்து வந்திருந்தால் இது தற்போது நல்ல பலன்களை கொடுக்கும். அரசு, அரசியல் தொடர்புடைய தொழிலில் இருந்த தடைகள், வழக்குகள் நீங்கும். பழைய பாக்கியில் ஒரு சிறிய பாகம் வருவதற்கு வாய்ப்புள்ளது. தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் இடமாற்றம் லாபத்தை தரும்.

குல தெய்வத்தின் அருள் இருக்கும். புதன் கிரகத்தின் பெயர்ச்சி உங்களுக்கு நல்ல மாற்றத்தை கொடுக்கும். புதன் கிரகத்தில் விபரீத ராஜயோகம் ஏற்படுகிறது. சின்ன சின்ன தடைகள் இருந்தாலும் அதில் நினைத்து பார்க்க முடியாத வளர்ச்சி கிடைக்கும். உங்கள் முன்னேற்றத்துக்கான அனைத்து முயற்சிகளும் கைகொடுக்கும். தந்தை வழி சொத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும்.

சகோதர வழி உதவிகளால் உங்களுக்கு நல்ல மாற்றங்கள் கிடைக்கும். சொத்து சார்ந்த ஆவணங்களிலும் எதிர்பார்த்த மாற்றம் இருக்கும். உங்கள் திறமைக்கேற்ற முழு அங்கீகாரம் கிடைக்கும். தாய் - தந்தை இடையே இருந்த பிரச்னைகள் நீங்கும். உங்கள் செயல்களால் உறவினர்கள் பெருமை கொள்வார்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.

உங்கள் சேமிப்பை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம். பணத்தை கவனமாக கையாள வேண்டும். வயது முதிர்ந்தவர்களுக்கு கண் பிரச்னை, தலை வலி, மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். குழந்தைகளின் கல்வியில் சற்று மந்தமாக இருக்கும். குழந்தைகள் மீது அதிக கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வாழ்க்கை துணை, தந்தை ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கும். தொழில் பார்ட்னர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். கணவன் - மனைவி இடையே வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். உத்தியோகம், தொழிலில் அலைச்சல் இருக்கும். வீண் விரயம் இருக்கும். மனக்குறைகள் நீங்கள் பிறந்த நாளில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வரலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+