வேலை, வாழ்க்கை துணையில் கவனம்.. கன்னி ராசிக்கு மாசி மாதத்தில் இரட்டை செக்
மாசி மாதம்: தமிழ் மாதங்களின் அடிப்படையில் நாம் தற்போது தை மாத இறுதியல் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில்(13.2.2025 தேதி முதல் 14.3.2025 தேதி வரை) கிரகங்களின் மாற்றம் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கன்னி ராசியில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்களை காணலாம்.
உங்கள் ராசியில் கேது அமர்ந்திருக்கிறார். ராசிக்கு ஆறாம் இடமான சத்ரு ஸ்தானத்தில் சனி, புதன், சூரியன் ஆகிய 3 கிரகங்கள் உள்ளன. ஏழாம் இடத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று ராகுவுடன் இணைந்திருக்கிறார்கள். ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் குரு பகவான் உள்ளார். சுக்கிரன் - குரு பரிவர்த்தனை நடைபெறவுள்ளது. ராசிக்கு பத்தாம் இடத்தில் செவ்வாய் வக்கிரமாக அமர்ந்துள்ளார்.

மாசி 1 ஆம் தேதி (13.2.2025) உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்துக்கான அதிபதியான சூரிய பகவான் ஆறாவது இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். மாசி 12 ஆம் தேதி (24.2.2025) உங்கள் ராசியில் பத்தாம் இடத்தில் உள்ள செவ்வாய் வக்கிர நிவர்த்தி அடைகிறார். மாசி 15 ஆம் தேதி (27.2.2025) உங்கள் ராசி அதிபதி புதன் ஆறாம் இடத்தில் இருந்து ஏழாவது இடத்துக்கு பெயர்ச்சியாக உள்ளார்.
புதன் பலமடைவதால் உங்கள் ராசிக்கு பக்க பலமாக இருக்க போகிறது. மீனம் ராசியில் புதன் நீசமாகப் போகிறார். அதே ராசியில் சுக்கிரன் உச்சத்திலும், குரு பரிவர்த்தனையால் நீட்சபங்க ராஜயோகம் கிடைக்கும். மாசி 17 ஆம் தேதி (1.3.2025) சுக்கிரன் வக்கிரமாக போகிறார். சுக்கிரனின் நகர்வை முக்கியமாக பார்க்க வேண்டும்.
குடும்பத்துக்கு தேவையான முக்கிய மாற்றங்கள் நிகழும். வருவாய் அதிகரிக்கும். உங்கள் தோற்றத்தில் ஆங்காங்கே மாற்றம் ஏற்படும். நீண்ட காலமாக யோசித்த சுற்றுலா தளங்களுக்கு சென்று வருவீர்கள். சுயதொழில் தொடங்க விரும்புவோருக்கு முயற்சியில் வெற்றி கிடைக்கும். சூரியன் ஆறாவது இடத்துக்கு பெயர்ச்சி ஆவதால் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
எதிரிகள் உங்களை கண்டு நடுங்குவார்கள். அதனால் அவர்களை எளிதில் வெற்றி பெறுவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட பணிகளில் காரியம் ஆக வேண்டியது இருந்தால் அதில் சில அலைச்சல்களுக்கு பிறகு வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகள் கூட உங்களுக்கு எதிராக வருவார்கள். ஆனால் அவர்களை எளிதில் வெற்றி கொள்வீர்கள்.
தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை தேடுவோருக்கு புதிய வேலை கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. புதிய கடன் வாய்ப்புகள் உருவாகும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்யாமல் இருப்பது நல்லது.
இரண்டாம் அதிபதியான சுக்கிரன் ஏழாவது இடத்துக்கு பெயர்ச்சி ஆவதால் உங்கள் வாழ்க்கை துணைக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு முழுமையாக இருக்கும். உங்கள் வருவாய், முதலீடு, நகை ஆகியவற்றை வாழ்க்கை துணைக்காக தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். தொழிலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நினைத்து பார்க்க முடியாதளவுக்கு அதிகரிக்கும்.
அதேநேரத்தில் ஆடம்பர செலவு அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். நண்பர்களால் ஏமாற்றம் வரும். தொழில் பார்ட்னர்களிடமும் கவனமாக இருக்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல் வேண்டாம். உத்யோகம் மற்றும் தொழிலில் அலைச்சல், பணிச்சுமை அதிகரிக்கும். ஓய்வு கிடைக்காது.
வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. ஆவணங்களை முறையாக வைத்து, விதிகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் லேசான சறுக்கல்கள் இருக்கும். எனவே கல்வியில் கவனம் தேவை. குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திலும் அதிகம் கவனமாக இருக்க வேண்டும். பலர் காதல் தோல்வி சந்திக்க வேண்டியிருக்கும். அருகில் உள்ள மகாலட்சுமி கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினால் பிரச்னைகள் குறையும்.












Click it and Unblock the Notifications