மே மாதத்தில் இந்த 3 ராசிகள் கவனம் தேவை.. ஜோதிடம் சொல்லும் எச்சரிக்கை!
மே மாத பலன்கள் 2026: மே மாதத்தில் 3 ராசியினர் மிகுந்த கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். என்ன விதமான நல்ல பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மே மாதத்தில் செவ்வாய், சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் முக்கியமான பெயர்ச்சிகளை சந்திக்கின்றன. மாதத்தின் ஆரம்பத்தில் ரிஷப ராசியில் செவ்வாய், புதன், சூரியன் ஆகியவை ஒன்றாக கூடும் நிலை உருவாகிறது. அதனைத் தொடர்ந்து மாதத்தின் பிற்பகுதியில் ரிஷபத்தில் புதன் மற்றும் சூரியன் இணையும் சேர்க்கையும் நடைபெறுகிறது.

இந்த கிரக அமைப்புகள் 12 ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை. அந்த வகையில், இந்த மே மாதத்தில் 3 ராசியினர் மிகுந்த கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். மேஷ ராசியினர் ஆரோக்கியம், பணம் காசு சம்பந்தப்பட்ட பிரச்சனை, கண், பல், கால் சார்ந்த பிரச்சனைகள் வரக்கூடிய வாய்ப்புள்ளது. தந்தையின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ரிஷபம், கன்னி ராசியினர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசியினருக்கு மே மாதம் அற்புதமாக இருக்கம். கழுத்துக்கு அணிகலன்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். புதிய வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள். அப்பார்டுமென்ட்டுக்கு குடிபோகக் கூடிய யோகம் ஏற்படும். உங்கள் தம்பி, தங்கைக்கு திருமணமாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெரிய வெற்றிகளைக் காணக்கூடிய யோகம் உண்டு. கம்மல், ஜிமிக்கி என புதிய புதிய கலெக்ஷன்களை வாங்கி குவிப்பீர்கள்.
மன நிம்மதி
அரசாங்கம் சார்ந்த, அரசியல் சார்ந்த நபர்களுக்கு பெரிய வெற்றிகள் ஏற்படும். முதலீடுகள் கண்டிப்பாக உண்டு. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மன நிம்மதி ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும். சனி செவ்வாய் சேர்ந்திருந்ததால் வீட்டில் நிறைய பிரச்சனைகளாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறும். செவ்வாய், கேது திரிகோணத்தில் இணைவதால் கணவரின் ஆரோக்கியம், மார்பகம், முதுகு போன்றவற்றை பார்த்துக் கொள்வது நல்லது.
பண வரவு
நீண்ட காலமாக செல்ல விரும்பிய இடங்களுக்குச் சென்று வருவீர்கள். அந்தப் பயணங்களுக்கான திட்டமிடல்களைச் செய்வீர்கள். நிதி சார்ந்த விஷயங்களில் நிறைய செலவுகள் ஏற்படும். செலவு செய்யும் விஷயத்தில் கவனம் தேவை. வருமானம் நன்றாக இருக்கும். பணியிடத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களை பொறுமையுடன் கையாள்வது நன்மையை ஏற்படுத்தும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசியினருக்கு ஆரோக்கியத்தை நன்றாகப் பார்த்துக் கொள்வது நல்லது. அரசாங்க சம்பந்தப்பட்ட வேலைகள் வாங்கித் தருகிறேன் என்று கூறி பணம் வாங்கி திருப்பிக் கொடுக்காத சூழ்நிலைகள் ஏற்படும். மாமனார், அப்பா பணம் கேட்டு நிலைமை ஏற்படும். தண்டச் செலவுகள் ஏற்படும். பணம் உங்களிடம் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்காத அமைப்பு ஏற்படும்.
ஆரோக்கியம்
முகம், கண், சளி தொந்தரவு காய்ச்சல் போன்ற பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மூக்குத்தி, வைர நெக்லஸ், எலக்ட்ரானிக் பொருட்கள், கணினி போன்றவற்றை வாங்குவீர்கள். உங்களுக்குத் தேவையான பொருட்கள், குழந்தைகளுக்குத் தேவையானவற்றை வாங்கி மகிழ்வீர்கள். இடத்தில் முதலீடு செய்வீர்கள். சகோதரர்கள் மூலமாக முதலீடு செய்யக்கூடிய யோகம் உண்டு.
முன்னேற்றம்
பெரிய வெற்றியும், முன்னேற்றமும் ஏற்படும். மே மாதத்தில் அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தை தவிர மற்ற எந்தவொரு பெரிய பாதிப்பும் இல்லை. பெரியவர்கள், உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காசு, பணத்திற்கு பெரிய பஞ்சம் எதுவும் ஏற்படாது. நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். பக்கத்து ஊருக்கு சென்று வருவீர்கள்.
யோகம்
நிகழ்ச்சிகளுக்கு, விழாக்களுக்கு சென்று வரும் யோகம் உண்டு. தேர்த் திருவிழாக்களுக்கு சென்று வரும் யோகம் உண்டு. நினைத்த விஷயங்களை எடுத்து முடிக்கும் யோகம் உண்டு. எந்தவொரு காரியத்தை செய்தாலும் அதனைத் திட்டமிட்டு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். பொறுமையாக இருந்து செய்யும் காரியங்களில் வெற்றிகள் ஏற்படும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியினருக்கு வருமான வரித் துறை, காவல் துறை, விஜிலென்ஸில் வேலை கிடைக்கக் கூடிய வாய்ப்புள்ளது. மருத்துவர் சீட் கிடைக்கும். நினைத்த காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்குள் சிறு சிறு தகராறுகள் கண்டிப்பாக ஏற்படும். உடல் உஷ்ணம் ஏற்படும். சளி, கண் பிரச்சனை, தொண்டை எரிச்சல் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது.
தொழில்
பெரிய மாற்றங்கள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். அருமையான தொழில் அமையும். பண வரவு நன்றாக இருக்கும். தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். அசாத்தியமான வெற்றிகள் ஏற்படும் காலகட்டம். புதிய மருத்துவ கண்டுபிடிப்புகள் வெளிவரும். பணம், பொருளாதாரம், இடமாற்றம் போன்றவை வருவதற்கான நல்ல காலகட்டமாக இருக்கும்.
ஆரோக்கியம்
பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்திருப்பதால் அம்மாவுடைய ஆரோக்கியம், கால் முட்டி, லிகமென்ட், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை, எலும்புகள் தேய்மானம், கண்ணாடி மாற்றக்கூடிய சூழல் ஏற்படும். கல்லூரிக்கு என்று பணம் கொடுத்து சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள், அரசு சம்பந்தப்பட்ட துறை, நெடுஞ்சாலைத் துறை, பைலட், ஏர் ஹோஸ்டர் துறைகளில் இருப்பவர்கள், பைலட்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications