மே மாத ராசி பலன் 2023: பிருகு மங்கள யோகத்தால் கொட்டும் பண மழை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்
சென்னை: மே மாதத்தில் சுக்கிரனும் செவ்வாயும் இணைந்து சில மாதங்கள் பயணம் செய்யப்போகின்றனர். இதனால் சில ராசிக்காரர்களுக்கு பிருகு மங்கள யோகம் கிடைக்கப்போகிறது. மே மாதத்தில் சூரியன் மேஷம், ரிஷபம் மாதங்களில் பயணம் செய்கிறார். புதன் மேஷ ராசியில் குரு, ராகு உடன் பயணம் செய்கிறார். சுக்கிரன் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி செவ்வாய் உடன் இணைவதால் மேஷம், ரிஷப ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மே மாதம் 12ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். மே 15ஆம் சூரியன் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். மே மாத இறுதியில் சுக்கிரன் கடக ராசியில் பயணம் செய்வார். கும்ப ராசியில் சனி, துலாம் ராசியில் கேது பயணம் செய்கிறார். நவ கிரகங்களின் பயணத்தால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு மே மாதம் மகிழ்ச்சியை அள்ளி தரப்போகிறது.

மேஷம்: உங்கள் ராசியின் அதிபதி செவ்வாய் காரிய வெற்றிகளை தருவார். குரு பகவான் உங்களுக்கு நல்லதொரு மாற்றத்தை தரப்போகிறார். ஏற்றங்களும் சுபிட்சங்களும் நடைபெறும். குருவின் பார்வையால் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. சுக்கிரன் குடும்ப ஸ்தானத்தில் இருந்து மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்திற்கு செல்வதால் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். காதல் மலரும். வசீகரம் உண்டாகும். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். வேலை விசயமாக செல்லும் பயணங்களால் வெற்றி கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மன நிம்மதி: புது வீடு வாங்கும் யோகம் வரும். பூர்வீக சொத்துக்கள் தேடி வரும் மன நிம்மதி தேடி வரும். புதன் உங்கள் ராசியில் இருப்பதால் மேன்மைகள் தேடி வரும். செல்வ வளம் கிடைக்கும். கொடுத்த கடன்கள் திரும்ப வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். சனி பகவான் பார்வையால் பலருக்கும் வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல புரமோசன் கைகூடி வரும். ராகு, குரு,புதன் சேர்க்கையும் இந்த கிரகங்களின் மீது சனிபகவானின் பார்வையும் விழுவதால் அற்புதமான மாதமாக மே மாதம் அமைந்துள்ளது.
ரிஷபம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு மே மாதத்தில் நல்லதொரு மாற்றத்தை தரப்போகிறது. ராசி அதிபதி இரண்டாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகிறார். உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் குரு பயணம் செய்வது சிறப்பு. நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். மன உளைச்சல்கள் நீங்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். குரு பகவான் உங்களுக்கு பொன் பொருள் சேர்க்கையை ஏற்படுத்துவார். தங்கத்தில் செய்யும் முதலீடுகள் உங்களுக்கு உயர்வை தரப்போகிறது.

கவனம் தேவை: பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நிறைய முதலீடு செய்வீர்கள். பண வருமானம் அதிகரிக்கும். பல வழிகளில் இருந்தும் பணம் வரும். எந்த ஒரு பிரச்சினைகளையும் எளிதில் எதிர்கொள்வீர்கள். பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிவிடாதீர்கள் சிக்கலாகிவிடும். மாத பிற்பகுதியில் செவ்வாய் பகவான் மூன்றாம் வீட்டிற்கு சென்று நீச்சமடைகிறார். உங்களின் பேச்சு தவறாக புரிந்துக்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகள் கவனமாக இருப்பது நல்லது. மருத்துவ ஆலோசனைகள் அவசியம். முருகப்பெருமானை செவ்வாய்கிழமை வணங்கி கந்த சஷ்டி கவசம் படிப்பது நல்லது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications