மே மாத ராசி பலன் 2023: திடீர் ஜாக்பாட்..அள்ளித்தரப்போகும் குரு பகவான்..என்ஜாய்!
சென்னை: மே மாதத்தில் நவ கிரகங்களின் பயணத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. சூரியன் மேஷம், ரிஷபம் ராசிகளில் பயணம் செய்கிறார். புதன் மேஷ ராசியில் குரு, ராகு உடன் பயணம் செய்கிறார். சுக்கிரன் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி செவ்வாய் உடன் இணைவதால் சில ராசிக்காரர்களுக்கு பிருகு மங்கள யோகம் கைகூடி வரப்போகிறது. மே மாதத்தில் சிம்மம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மே மாதம் 12ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். மே 15ஆம் சூரியன் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். மே மாத இறுதியில் சுக்கிரன் கடக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கும்ப ராசியில் சனி, துலாம் ராசியில் கேது பயணம் செய்கிறார்.

சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே நவ கிரகங்களால் உங்களுக்கு சந்தோஷம் பொங்கப்போகிறது. காரணம் குரு பகவானின் அற்புதமான பார்வை உங்களுக்கு கிடைக்கிறது. மன குழப்பமும், பாரங்களும் நீங்கப்போகிறது. புது முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள். மே மாதம் முழுவதுமே நீங்கள் பண மழையில் நனையப்போகிறீர்கள். காசு மேல காசு வந்து கொட்டப்போகிறது. பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியம் நடைபெறப்போகிறது.
பதவி உயர்வு: கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். திருமணமானவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். இளைய சகோதரர்களின் பாசமும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள். சுக்கிரன் பதவி உயர்வையும் சம்பள உயர்வையும் தரப்போகிறார். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்வும் வளர்ச்சியும் தேடி வரப்போகிறது. மாணவர்களுக்கு நல்ல காலம். கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களின் மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடியேறும். மே மாதத்தில் சிம்ம ராசிக்காரர்கள் அற்புதமான வளர்ச்சிகளை அனுபவிக்கத் தயாராகுங்கள்.
கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே..உங்களுக்கு மே மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் யோகங்கள் தேடி வரப்போகிறது. பாக்ய ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் பத்தாம் வீட்டிற்கு செல்வதால் புதிய பதவிகள் தேடி வரப்போகிறது. அஷ்டம ஸ்தானம் வலிமை பெற்றுள்ளது. குரு பகவான் எட்டாம் வீட்டிற்கு ராகு, சூரியன், புதனோடு இணைந்துள்ளார். திடீர் தன வருமானம் வரப்போகிறது. எட்டாம் வீட்டில் ராகு உள்ளதால் பண மழையை அள்ளித்தருவார். வரப்போகும் பணத்தை பத்திரப்படுத்துங்கள். அரசு விசயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நல்ல நேரம் வந்து விட்டது. கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். அதிகார பதவிகள் தேடி வரப்போகிறது.
வேலை மாற்றம்: ஆறாம் வீட்டில் உள்ள சனி அற்புதமான யோகத்தை தரப்போகிறார். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலையில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மருத்துவ ஆலோசனை அவசியம் தேவை. மாணவர்களுக்கு படிப்பில் அக்கறையும் ஆர்வமும் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேற்றமடைவீர்கள். படித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு புதிய வேலை வரப்போகிறது. மே மாதம் மாற்றங்களை தரக்கூடிய மாதமாக அமைந்துள்ளது. பண விசயத்தில் புதியவர்களை நம்ப வேண்டாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications