மே மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு என்னென்ன நன்மைகள் நடக்கும் தெரியுமா?
மே மாதத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம், அட்சய திரிதியை, வைகாசி விசாகம் என பல முக்கிய விஷேச தினங்கள் உள்ளன.ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மே மாதம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
மதுரை: மே மாதம் உழைப்பாளர்கள் மாதம். வசந்த மாதம். கோவில்களில் கொடை விழாக்கள் அதிகம் நடைபெறும் மாதம் முருகனின் விசாக திருவிழா நடைபெறும் மாதம் மே மாதம்தான். இந்த மாதத்தில் சூரியன் தனது உச்ச வீட்டில் இருந்து உழைப்பின் வீட்டிற்குள் நுழைகிறார். ரிஷப ராசிக்காரர்களுக்கு அருமையான மாதம். குரு அதிசாரத்தில் இருந்த வக்ரமடைந்து விருச்சிகத்தில் இருந்து ரிஷபத்தை பார்வையிடுவதால் உற்சாகமான மாதம்.
சூரியனின் சொந்த வீடு சிம்ம ராசி. கால புருஷ தத்துவப்படி பத்தாம் வீடு என்பது தொழிலைக் குறிக்கும். சூரியன் தனது உச்ச ராசியிலும், சொந்த ராசிக்கு பத்தாம் வீடாகிய தொழில் ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் காலமே மே மாதம். அரசனுக்கு உரிய கோளாகக் கருதப்படும் சூரியன் உழைப்பிற்கு உரிய வீட்டில் அமர்வதால் அரசன் முதல் சாமானியன் வரை அனைவரும் உழைக்க வேண்டிய காலமாக அமைந்துள்ளது. சாமானியனையும் உழைப்பினால் சாதிக்க வைக்கும் மே மாதம்.
நவகிரகங்களில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் கிரகங்களின் இடப்பெயர்ச்சி மே மாதத்தில் நிகழ்கிறது. சூரியன் மேஷத்தில் இருந்து 15ஆம் தேதி ரிஷபத்திற்கு மாறுகிறார். ரிஷபத்தில் உள்ள செவ்வாய் மே 7ஆம் தேதி மிதுனம் ராசியில் ராகு உடன் கூட்டணி சேருகிறார். மீனம் ராசியில் உள்ள சுக்கிரன் புதன் மேஷம் ராசியில் உச்சம் பெற்ற சூரியனுடன் கூட்டணி சேருகின்றனர். கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து மேஷம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

கிரகங்களின் கூட்டணி
ரிஷப ராசிக்காரர்களே சூரியன் உங்க ராசிக்கு 12ஆம் வீட்டில் இருந்து மாத பிற்பகுதியில் ராசிக்கு வருகிறார். ராசியில் உள்ள செவ்வாய் தன ஸ்தானத்திற்கு போய் ராகு உடன் சேருகிறார். ஏழாம் வீட்டில் குரு அஷ்டமத்தில் சனி, கேது லாப ஸ்தானத்தில் உள்ள ராசி அதிபதி சுக்கிரன், மே 11ஆம் தேதிக்கு மேல் விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாகவே உள்ளது.

சேமிப்புக்கு ஏற்ற மாதம்
சுக்கிரன் சஞ்சாரத்தினால் பண தேவைகள் பூர்த்தியடையும். பணவரவும் அதிகரிக்கும். மே 11ஆம் தேதிக்கு மேல் பண செலவுகள் சுப விரையங்கள் அதிகரிக்கும். சுப நிகழ்வுகள் அதிகரிக்கும். பண சேமிக்க ஏற்ற மாதம். பிள்ளைகள் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கலாம். எதிர்காலம் சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாடு செல்வதற்கான நேரம் வருகிறது. சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும்.

உதவி தேடி வரும்
ரிஷபத்தில் உள்ள செவ்வாய் ஏழு, எட்டாம் இடங்களை பார்ப்பதால் சிறு தடைகள் ஏற்பட்டு பின்னர் நடைபெறும். ஏழாம் தேதி மிதுன ராசியில் உள்ள ராகு உடன் செவ்வாய் அடைவதால் நன்மைகள் நடைபெறும். செவ்வாய் ஏழாம் வீட்டில் இருப்பதால் கணவன் மனைவி இடையே நெருக்கம், அதிகரிக்கும். குரு ராசியை பார்ப்பதால் பிள்ளைகளுக்கு முன்னேற்றகரமான காலம் இதுவாகும். சகோதரர்களின் உதவி கிடைக்கும்.

யோசித்து முடிவெடுங்கள்
மீன ராசியில் சுக்கிரன் புதன் லாப வீட்டில் அமர்ந்துள்ளதால் பணவரவு அதிகரிக்கும். குரு பார்வை அதிர்ஷ்ட வாய்ப்புகளை அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சுபமாக இருக்கும். புதிய வேலை கிடைக்கும். சனியின் சஞ்சாரம் அஷ்டமத்தில் உள்ளதால் இருக்கும் இடத்தில் அமைதியாக இருங்கள் சங்கடங்களை சகித்துக்கொள்ளுங்கள். எட்டில் சனி கேது இருப்பதால் சிறு தடைகள் ஏற்பட்டு பின் வெற்றிகரமாக முடியும். புதிய வேலைக்கு மாறும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கொள்ளவும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்லவிதமாக முடியும்.

வெளிநாடு யோகம்
சூரியன் 12ஆம் வீட்டில் உச்சம் பெற்றிருக்கிறார். சொத்துக்கள், வாகனங்கள் வாங்கலாம். சுக்கிரனுக்கு இரண்டாம் வீட்டில் இருப்பதால் புதன் சுக்கிரன் சூரியன் 12ஆம் வீட்டில் இணைவதால் பத்திரம் பதியலாம். வெளிநாடு யோகம் கைகூடி வரும். புதன் சூரியன் ரிஷபத்தில் இணையும் காலத்தில் நன்மைகள் நடைபெறும் சொத்து சேர்க்கைகள் அதிகரிக்கும். சுப செலவுகள் ஏற்படும். குரு பார்வையால் சங்கடங்கள் குறையும்.

விட்டுக்கொடுங்கள்
உறவினர்கள், சகோதரர்களுடன் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருங்கள். நேரத்திற்கு சாப்பிடுங்கள். வெளியிடங்களில் காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். மேலும் நன்மைகள் நடைபெற வெள்ளிக்கிழமைகளில் தாயாருக்கு நெய் விளக்கேற்றி வழிபடலாம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications