மேஷ ராசிக்கு ஏற்றம் தரும் மே மாதம்.. அடேங்கப்பா லிஸ்ட் பெருசா இருக்கே
மே மாத ராசி பலன்கள்: ஆங்கில புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, சனிப்பெயர்ச்சி என்று 2025 ஆம் ஆண்டின் பல முக்கிய நிகழ்வுகளை கடந்துவிட்டோம். அதன் தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சி இருப்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது மேஷ ராசியில் ஏற்படுத்தும் தாக்கத்தை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த மாதம் குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. வருடக்கணக்கில் பெயர்ச்சி ஆகும் சனி, குரு, ராகு - கேது மட்டுமல்லாமல் மாத மாதம் பெயர்ச்சியாகும் கிரகங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி 7 கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

சித்திரை பிறந்துள்ளது. புதிய நிதியாண்டு பிறந்துள்ளது. விரைவில் புதிய கல்வியாண்டும் பிறக்கவுள்ளது. இதனால் பல திட்டங்களுடன் மே மாதத்தை எதிர்பார்த்து காத்திருப்போம். அந்த வகையில் மே மாதத்தில் மேஷ ராசியில் பெறப் போகும் பலன்களை காணலாம்.
மேஷம்
இந்த மாதம் உங்களுக்கு அமோகமாக இருக்கும். மாதத்தின் முதல் 15 நாட்கள் உங்கள் சொந்த ராசியில் சூரியன் உச்சமாக இருப்பார். அதன் பிறகு அவர் உங்களின் இரண்டாம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிறார். இதுநாள் வரை விரயத்தில் இருந்த ராகு பகவான் மே 18 ஆம் தேதியுடன் லாப ஸ்தானத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். கேது பகவான் உங்களின் நான்காம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிறார்.
வெற்றி
இது உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும். ராகு பகவான் 11 ஆம் இடத்துக்கு பெயர்ச்சி ஆவது உங்ளுக்கு செல்வத்தையும், மகிழ்ச்சியையும் அளவில்லாமல் கொடுப்பார். உங்களின் மனக்கவலைகள் நீங்க போகிறது. இறங்கிய அனைத்து காரியங்களிலும் ஜெயம் கிடைக்கும். நீண்ட காலமாக திட்டமிட்டு செய்து வந்த காரியங்கள் வெற்றியில் முடியும்.
பணம்
எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். புதிய கடன்கள் உருவாகும். சுப செலவுகள் இருக்கும். குரு பகவான் இரண்டாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். இது அற்புதமான அமைப்பு. கடந்த காலங்களில் நிலவி வந்த தடைகள் நிவர்த்தியாகி, காரியங்கள் கைக்கூடும். பண வரவு திருப்தியாக இருக்கும். பழைய பாக்கி வசூலாகும்.
புகழ்
புதனுடன் சூரியன் இணைவதால் புத ஆதித்ய யோகம் உண்டாகும். நிறைய நல்ல அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் கொடுக்கும். தெளிவாக திட்டமிட்டு இறங்கும் காரியங்களில் பிரம்மாண்ட வெற்றி காத்திருக்கிறது. உங்களின் பெயர், புகழ் அதிகரிக்கும். ஐந்தாம் அதிபதி வலிமையாக இருப்பதால் போட்டித் தேர்வுகளுக்கு முயற்சி செய்வோருக்கு வெற்றி கிடைக்கும்.
நகை
உத்யோகம், தொழிலில் முன்னேற்றம் இருக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு போன்ற புதிய பொறுப்புகள் தேடி வரும். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். கனவுகள் நிறைவேறும். கல்வியில் எதிர்பாராதளவுக்கு சிறப்பான முன்னேற்றம் காணப்படும். ஆடை, தங்க ஆபரணங்கள் சேர்க்கை இருக்கும்.
லாபம்
தொழிலில் புதிய முயற்சிகள் நிறைவேறும். முதலீட்டில் லாபம் நன்றாக இருக்கும். சுப காரியங்கள் நிறைவேறும். முதியோர்களுக்கு மன நிறைவு ஏற்படும். ஆரோக்கியத்தில் நீண்ட காலமாக இருந்த பிரச்னையில் நிவர்த்தியாகும். சீருடை பணியாளர்கள், ரியல் எஸ்டேட், தகவல் தொடர்பு, கட்டுமானம் ஆகிய துறைகளில் இருப்போர் மிகப்பெரிய ஏற்றத்தை காண்பார்கள்.
கவனம்
வரவு நன்றாக இருந்தாலும், சனி பகவானால் வீண் விரயம் இருக்கத்தான் செய்யும். ஆரோக்கியத்தில் கழுத்து, கால் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெண்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பணிச்சுமை, பதற்றம் அதிகமாக இருக்கும். அருகில் உள்ள முருகன் கோயிலில் தரிசனம் செய்வதால் தடைகள் விலகி நன்மை பிறக்கும்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications