ரிஷப ராசிக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட்.. காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. வாழ்க்கையே மாறப்போகுது
மே மாத ராசி பலன்கள்: ஆங்கில புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, சனிப்பெயர்ச்சி என்று 2025 ஆம் ஆண்டின் பல முக்கிய நிகழ்வுகளை கடந்துவிட்டோம். அதன் தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சி இருப்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது ரிஷபம் ராசியில் ஏற்படுத்தும் தாக்கத்தை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த மாதம் குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. வருடக்கணக்கில் பெயர்ச்சி ஆகும் சனி, குரு, ராகு - கேது மட்டுமல்லாமல் மாத மாதம் பெயர்ச்சியாகும் கிரகங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி 7 கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

சித்திரை பிறந்துள்ளது. புதிய நிதியாண்டு பிறந்துள்ளது. விரைவில் புதிய கல்வியாண்டும் பிறக்கவுள்ளது. இதனால் பல திட்டங்களுடன் மே மாதத்தை எதிர்பார்த்து காத்திருப்போம். அந்த வகையில் மே மாதத்தில் ரிஷபம் ராசியில் பெறப் போகும் பலன்களை காணலாம்.
ரிஷபம்
குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என்று இந்த மாதம் நடைபெறவுள்ள அனைத்து கிரக பெயர்ச்சிகளும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். மற்றவர்கள் உங்களைப் பார்த்து பொறாமைப்படுமளவுக்கு அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். நான்காம் அதிபதி உச்சம் பெறுவதால் உங்கள் வாழ்க்கை சுக போகமான வாழ்க்கையாக மாறும்.
பரிசு
வண்டி, வாகனத்தில் ஆதாயம் உண்டு. உங்கள் தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளால் நல்ல பலன்கள் உண்டாகும். திடீர் பரிசுகள் கிடைக்கும். உங்கள் குழந்தைகள் மூலம் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சனி 11 ஆம் இடத்தில் இருப்பதால் ஏற்கனவே நற்பலன்கள் வரத்தொடங்கியிருக்கும். தற்போது ராகு பத்தாம் இடத்துக்கு வருவதால் நன்மைகள் மேலும் அதிகரிக்கும்.
தொழில்
உத்யோகத்துக்காக முயற்சி செய்வோருக்கு எதிர்பார்த்தபடியான நல்ல பணி கிடைக்கும். இருக்கும் நிறுவனத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். சுப காரியங்கள் நிறைவேறும். திருமண யோகம், குழந்தை பாக்கியம் உண்டாகும். தொழிலில் இருப்போருக்கு சிறப்பான லாபம் கிடைக்கும். முதலீடுகளில் லாபம் பல மடங்கு உயரும். நல்ல ஊழியர்கள் கிடைப்பார்கள்.
மாற்றம்
உங்களின் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை கிடைக்கும். உங்களின் திறமையை மேம்படுத்தும் வகையில் கூடுதல் பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். பெண்களாக இருந்தால் பலன்கள் இன்னும் சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய முயற்சிகளை செய்வதற்கு இது மிகச்சரியான காலகட்டம். தற்போது செய்யும் மாற்றங்களால் உங்களின் வாழ்க்கை மொத்தமாக மாறும்.
ஏற்றம்
கல்வியில் பிரமாதமான முன்னேற்றம் தென்படும். உங்களின் திறமைக்கு நல்ல வெளிச்சம் கிடைக்கும். கலை, ஊடகம் துறையினர் நல்ல ஏற்றத்ரைத காண்பார்கள். மனதில் தெளிவு பிறக்கும். பொருளாதாரத்தில் உயர்வு இருக்கும். வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய, ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். புனரமைப்பு உள்ளிட்ட பணிகளை செய்வீர்கள்.
காதல்
காதல் உறவில் இனிமை கூடும். கணவன் - மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்லுதல், மனம் விட்டு பேசுவது போன்ற சூழ்நிலை உருவாகும். வீண் விரயம் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். சகோதரர் மூலம் லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், உணவு துறையில் இருப்போர் நல்ல மாற்றம் காண்பார்கள்.
கவனம்
தாயின் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. இரண்டாம் அதிபதி சூரியனுடன் இணைவதால் உங்களின் ஆரோக்கியத்திலும் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காய்ச்சல், சளி ஆகியவற்றில் அலட்சியமாக இருக்காமல் உரிய சிகிச்சை எடுக்க வேண்டும். பிடிவாத குணத்தை தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பெருமாள் வழிபாடு மனதுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications