Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடக ராசிக்கு மிகப்பெரிய மச்சம் இருக்கு.. இனி தொட்டதெல்லாம் வெற்றி.. பண மழை கொட்டும்

Subscribe to Oneindia Tamil

மே மாத ராசி பலன்கள்: ஆங்கில புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, சனிப்பெயர்ச்சி என்று 2025 ஆம் ஆண்டின் பல முக்கிய நிகழ்வுகளை கடந்துவிட்டோம். அதன் தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சி இருப்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது கடக ராசியில் ஏற்படுத்தும் தாக்கத்தை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

இந்த மாதம் குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. வருடக்கணக்கில் பெயர்ச்சி ஆகும் சனி, குரு, ராகு - கேது மட்டுமல்லாமல் மாத மாதம் பெயர்ச்சியாகும் கிரகங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி 7 கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

may-month-zodiac-sign-what-kind-of-benefits-will-get-kadagam-rasi-people-cancer-in-may-month

சித்திரை பிறந்துள்ளது. புதிய நிதியாண்டு பிறந்துள்ளது. விரைவில் புதிய கல்வியாண்டும் பிறக்கவுள்ளது. இதனால் பல திட்டங்களுடன் மே மாதத்தை எதிர்பார்த்து காத்திருப்போம். அந்த வகையில் மே மாதத்தில் கடக ராசியினர் பெறப் போகும் பலன்களை காணலாம்.

கடகம்

அஷ்டம சனி முடிந்துவிட்டது. மே மாதம் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். இரண்டாம் இடத்தில் கேது பகவான் இருக்கப் போகிறார். இரண்டாம் அதிபதி உச்சமாகியிருப்பது அற்புதமான பலன்களை தரப்போகிறது. இரண்டு என்பது தன ஸ்தானம். இரண்டாம் அதிபதி பத்தாம் இடத்தில் உச்சமடைவது வருமானத்தை பெருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரம் உயர்வடையும்.

வெகுமதி

மாமனார், மாமியார் மூலமாக பண வரவு நிச்சயம் உண்டு. உத்யோகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு மகிழ்ச்சியளிக்கும் வெகுமதி கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கடந்த காலங்களில் இருந்த கஷ்டங்கள் நீங்கி மனதுக்கு சற்றே நிம்மதி கிடைக்கும்.

வெற்றி

பழைய கடன்கள் அடைவதற்கான சூழல் தென்படும். குரு பகவான் 12 ஆம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகப்போகிறார். இதனால் முதலீட்டில் லாபம் அதிகரிக்கும். மனதில் தெளிவு பிறக்கும். சரியான முடிவுகளால் இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றிகள் குவியும். பாக்கிய ஸ்தானத்தில் சனி இருப்பதால் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

வெளிநாடு

உங்கள் முயற்சிக்கு கை மேல் பலன் கிடைக்கும். வாழ்க்கை துணையின் பெயரில் சொத்து சேர்ப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். அம்மா, மனைவி, சகோதரி, அத்தை போன்ற உறவுகளால் ஆதாயம் உண்டு. தொலை தூர தொடர்புகளால் நன்மை பிறக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட முயற்சிகள் கைக்கூடும்.

முன்னேற்றம்

வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் உண்டு. நண்பர்களால் மகிழ்ச்சி பிறக்கும். பிரிந்த நண்பர்கள் ஒன்றிணைவார்கள். எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். ஜீரோவில் இருப்பவர்கள் கூட ஹீரோவாக மாறுமளவுக்கு வருமானம் தாறு மாறாக உயரும். தொழிலில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உங்களின் நீண்ட கால கனவு நனவாகும். இரும்பு, ஆட்டேமொபைல், கட்டுமான துறையினர் அருமையான ஏற்றம் காண்பார்கள்.

கவனம்

சூரிய பகவன் உச்சமாக இருப்பதால் வார்த்தையில் கவனமாக இருப்பது நல்லது. ராகு பகவான் எட்டாம் இடத்துக்கு வருவதால் உடல் நலத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் வந்து செல்லும். வாக்குவாதம், பிடிவாதத்தை விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நல்லது. எதிலும் பொறுமையை கடைபிடிங்கள். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

வயதானவர்கள் வயிறு, ஜீரணம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் அதிக கவனம் தேவை. திருவண்ணாமலை சிவன் வழிபாடு நல்ல பலன்களை கொடுக்கும். கோயிலுக்கு செல்ல முடியாவிடின் வீட்டிலேயே சிவன் படம் வைத்து வழிபடுவதால் நன்மை உண்டாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+