Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இளமை திரும்புதே".. மிதுன ராசிக்கு குஷியான காலகட்டம்.. ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்

Subscribe to Oneindia Tamil

மே மாத ராசி பலன்கள்: ஆங்கில புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, சனிப்பெயர்ச்சி என்று 2025 ஆம் ஆண்டின் பல முக்கிய நிகழ்வுகளை கடந்துவிட்டோம். அதன் தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சி இருப்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது மிதுன ராசியில் ஏற்படுத்தும் தாக்கத்தை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

இந்த மாதம் குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. வருடக்கணக்கில் பெயர்ச்சி ஆகும் சனி, குரு, ராகு - கேது மட்டுமல்லாமல் மாத மாதம் பெயர்ச்சியாகும் கிரகங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி 7 கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

may-month-zodiac-sign-what-kind-of-benefits-will-get-mithunam-rasi-people-gemini-in-may-month

சித்திரை பிறந்துள்ளது. புதிய நிதியாண்டு பிறந்துள்ளது. விரைவில் புதிய கல்வியாண்டும் பிறக்கவுள்ளது. இதனால் பல திட்டங்களுடன் மே மாதத்தை எதிர்பார்த்து காத்திருப்போம். அந்த வகையில் மே மாதத்தில் மிதுன ராசியினர் பெறப் போகும் பலன்களை காணலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களின் வீட்டில் வந்து குரு அமரப் போகிறார். இந்த மே மாதம் உங்களுக்குப் பிரகாசமாக இருக்கப் போகிறது. 12 ஆம் இடத்தில் 15 நாள்கள் குரு இருப்பதால் சிறிது கவனமாக இருப்பது நல்லது. ராசிநாதன் நீச்ச பங்க ராஜயோகத்தில் இருந்திருந்தாலும், நிறைய செலவுகள், மனக் குழப்பத்தில் இருந்திருப்பீர்கள். இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.

தைரியம் பிறக்கும்

3 ஆம் அதிபதி சூரியன் உச்சமாக இருக்கப் போகிறார். தைரிய, வீரிய, விஜய ஸ்தானத்தை இயக்கப் போகிறார். எந்த பிரச்சனைகள் வந்தாலும், சவால்கள் வந்தாலும் அதனை சமாளிக்கக் கூடிய தைரியத்தைப் பெறுவீர்கள். உடலும், மனதும் வலிமைப் பெற்று இயங்கப் போகிறது. இனி எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைப் பெறுவீர்கள். ஒளிமயமான காலகட்டமாக இருக்கும்.

உற்சாகப் பயணம்

பயணங்கள் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும். அதன் மூலம் ஆதாயத்தைப் பெறுவீர்கள். நிறைய பேருக்கு வழிகாட்டுவீர்கள். அதன் மூலம் நல்ல ஒரு ஆசிர்வாதத்தைப் பெறுவீர்கள். ராசிநாதன் புதன் 4 கிரகத்துடன் சிக்கிக் கொண்டிருந்த தன்மை மாறி, சூரியனுடன் இணையப் போகிறார். உங்களுடைய மதிநுட்பம், தலைமைத்துவம், சொல்வாக்கு அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும்.

நியாபகம் வருதே..

மிதுன ராசியினர் நினைவுகூரும் விஷயங்களை செய்வீர்கள். பிடித்த இடங்கள், நியாபகார்த்தங்களை திரும்பிப் பார்க்கும் காலகட்டமாக இருக்கும். குடும்பத்துடன் சுற்றுலா, பயணம் மேற்கொள்வீர்கள். பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும். இன்பச் செலவுகளைச் செய்வீர்கள். உங்களுடைய சந்தோஷம், சுயம் இயங்கும் நேரமாக இருக்கும்.

செலவுகள் அதிகரிக்கும்

ராகு பெயர்ச்சியையும் பொருத்து ஆடை, அணிகலன்கள், செல்போன் தொடர்பான விஷயங்கள் அனைத்தும் இயங்கப் போகிறது. மே 31 ஆம் தேதி வரைக்கும் தான் இதுபோன்ற செலவுகள் ஏற்படும். அதன் பிறகு படிப்படியாக இந்த தன்மை மாறும். ஆரோக்கியத்தில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். சந்தோஷமான காலகட்டமாக இருக்கும். பிடித்த விஷயங்களைச் செய்து மகிழும் காலகட்டமாக இருக்கும்.

இலக்கை நோக்கி பயணம்

மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். நீச்சல் பயிற்சி பெறும் யோகம் உண்டு. 19 வயதுக்கு மேற்பட்டவர்கள் கனவுகளை நோக்கிய பயணம் செய்வதற்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். கலை, கலைத் துறை சம்பந்தப்பட்ட மிதுன ராசிக்காரர்களுக்கு அமோகமான காலகட்டமாக இருக்கும். மதிநுட்பம் அதிகரிக்கும்.

மகிழ்ச்சியான வாழ்க்கை

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வெளிநாடு செல்லும் அல்லது வெளிநாடு, வெளிமாநிலம் சம்பந்தப்பட்ட ஏதாவதொரு நிகழ்வு நடக்கும். சந்தோஷம் மேலோங்கும். மனைவி உங்களுடைய பேச்சை கேட்டு நடப்பார். உங்கள் அழகு சம்பந்தப்பட்ட, ஆடை சம்பந்தப்பட்ட விஷயங்களை மேம்படுத்திக் கொள்வீர்கள். உங்களுக்கு நீங்களே முக்கியத்துவம் கொடுத்துக் கொள்ளும் காலகட்டமாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+