வாய்விட்டு சிரிங்க..ஆயுள் அதிகரிக்கும்..சிரிக்க சிரிக்க பேசும் ராசிக்காரர்கள் இவங்கதானாம்!
சென்னை: மகிழ்ச்சியாக இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கின்றனர். அடுத்தவர்களை மகிழ்ச்சிப்படுத்துபவர்களின் ஆயுள் அதிகரிக்கிறது. சிரிப்பு ஒருவருக்கு வருவது இயல்பானது. சிரிக்கத் தெரிந்த ஒருவர் மற்றவையும் சிரிக்க வைப்பார். நகைச்சுவையாக பேசத்தெரிந்தவர்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களின் ஆரோக்கியமும் ஆயுளும் அதிகரிக்கும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களில் யாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாக இருக்கிறது என்று பார்க்கலாம்.
மூளையில் தோன்றும் மாற்றமே நகைச்சுவை உணர்வையும் கூடவே சிரிப்பையும் ஏற்படுத்துகிறது. இதற்குக் காரகர் புதன். புதனை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் இயல்பாகவே நகைச்சுவையாக பேசும் குணம் கொண்டவர்கள். நகைச்சுவை உணர்வுக்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பு உள்ளது. ஜாதக அமைப்பில் புதன், சுக்கிரன், சந்திரன் ஆகிய மூன்று ஒருவரின் சுப தொடர்புகளான நகைச்சுவை, மகிழ்ச்சியையும் கொடுக்கிறது.

மேஷ ராசிக்கார்கள் நல்ல வாக்கு சாதுர்யம் கொண்டவர்கள். தங்களுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடுவார்கள். அதிலும் இவர்கள் காரியவாதிகள் என்பதால் வாக்கு திறமையால் பிறரை திணறும்படி செய்து தான் செய்த தவறை அப்படியே மறைத்து விடுவார்கள். வீண் பழி சொற்களுக்கும் செவிசாய்க்க மாட்டார்கள். சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றலும் இவர்களுக்கு உண்டு. வெகுளியாகவும், கபடமற்றும் காணப்படும் இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசுவார்கள்.
ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிஷபம் மற்றும் துலாம் லக்னமாக அமைந்து லக்னத்தில் சுக்கிரன், சந்திரன், புதன், இணைந்து அல்லது திரிகோணஸ்தானங்களில் நிற்பது நகைச்சுவை உணர்வு அதிகரிக்கச் செய்யும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு நகைச்சுவை உணர்வு என்பது மிகவும் அதிகமாக இருக்கும். ராசி அதிபதி புதன் ஆட்சி பெற்று அமர்ந்து விட்டால் போதும் பேச்சுக்கும் சிரிப்பும் பஞ்சமில்லாமல் இருக்கும். இவர்கள் செய்யும் ஒவ்வொரு விசயத்திலும் நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அனைத்து விஷயத்திலும் சிரித்து, மகிழ்ச்சியாக இருக்க என்ன விஷயம் இருக்கிறது என்பது பற்றி தான் சிந்திப்பார்கள்.
கால புருஷ மூன்றாம் இடமான மிதுன ராசி லக்னமாகி லக்னத்தின் புதன் ஆட்சி பெற்று திரிகோணஸ்தானமான துலாம் ராசியில் சுக்கிரனும், சந்திரனும் இணைந்து நிற்பது. காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகள் லக்னமாகி, இவற்றோடு சந்திரன், புதன், சுக்கிரன் தொடர்பு கொள்வது நகைச்சுவை உணர்வை அதிகரிக்கும்.
புதன் கன்னி ராசி லக்னமாகிலக்னத்தில் புதன் உச்சம் பெற்று வாக்கு ஸ்தானத்தில் சந்திரன் நின்று மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று நிற்பவர்கள் சிரிக்க சிரிக்க பேசுவார்கள். பொதுவாகவே எந்த ராசி லக்னமானாலும் சந்திரன், புதன் சுக்கிரன் ஆட்சி பெற்று தொடர்பில் நிற்பது சிரித்து பேசும் தன்மையை தரும்.
ஜாதகத்தில் புத்திரகாரகன் புதனுக்காக பத்ர யோகம் பெற்று நிற்பது மற்றும் சுக்கிரனின் மாளவியா யோகம் பெற்று நிற்பது. மிதுனம் மற்றும் துலாம் ராசிகளில் ராகு நின்று தனது திரிகோண பார்வையால் இரண்டு காற்று ராசிகளுக்கு தொடர்பு ஏற்பட்டிருந்தால் அவர்கள் நகைச்சுவை மன்னர்களாக இருப்பார்கள். அவர்களின் பேச்சுக்கு அகில உலகமே மயங்கும்.
மகரம் ராசிக்காரர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் படைத்தவர்கள் என்பதால் பேச்சில் தங்களுடைய சாமர்த்தியத்தை வெளிப்படுத்தி எதையும் சாதிப்பார்கள். சிரிக்க சிரிக்க பேசும் சுபாவம் கொண்ட இவர்களால் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்களாம். என்ன மக்களே சோகமாகவும் கோபமாகவும் பேசி என்னத்தை சாதிக்கப்போகிறோம். சிரிக்க சிரிக்க பேசுங்க ஆரோக்கியமாக வாழுங்க.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications