மீன ராசிக்கு ராஜயோகம் கொட்டப் போகுது.. பிரச்சனைகளுக்கு எல்லாம் எண்ட் கார்டு.. ஒரே குஷிதான்
Aavani matha palan: ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. 2025 ஆம் ஆண்டின் ஆவணி மாதத்தில் மீன ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள், என்னென்ன நன்மைகள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. சூரியனின் இயக்கத்தை வைத்தே தமிழ் மாதங்கள் ஆரம்பமாகின்றன. அதன்படி, தலைமை கிரகமான சூரியன் ஆட்சி என்கிறது உயர்நிலை அமைப்போடு சிம்மத்தில் வலுவாக இருக்கப் போகிறார். இது விசேஷமான அமைப்பாகும். குரு மிதுனத்திலும், சனி மீனத்திலும், சுக்கிரன், புதனின் இயக்கங்கள் கடகத்திலும், சிம்மத்திலும் மாறியிருக்கின்றன.

கன்னியில் செவ்வாய் இருப்பது நல்ல விசேஷமான நிலையாகும். புதனில் குருவும், செவ்வாயும், கடகத்தில் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பது நல்ல அமைப்பாகும். கும்பத்தில் இருக்கும் ராகுவை குரு பார்ப்பது நல்ல மாற்றங்களைத் தரும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கிறது.
இந்த ஆவணி மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு ஆவணி மாதம் மிகவும் நல்ல மாதமாக இருக்கும். 7 ஆம் இடத்தில் செவ்வாய் இருந்து மாதம் முழுவதும் ராசியைப் பார்க்கிறார். ராஜயோகாதிபதியான செவ்வாய் 9 க்கு உடையவர் 7 ஆம் இடத்தில் இருந்து ராசியைப் பாதுகாப்பது தைரியத்தை தரும். மாதம் முழுவதும் 4, 5 ஆம் இடங்களில் சுப கிரகம் இருப்பதும், 6 ஆம் அதிபதியான சூரியன் 6 ஆம் இடத்திலேயே ஆட்சியாக இருந்தாலும் அவர் உங்கள் நண்பர் என்பதால் பெரிய சோதனைகள் இருக்காது.
மன அழுத்தம் நீங்கும்
வேலை சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த அழுத்தங்கள் அனைத்தும் தீரும். வேலை இருந்தாலும் சம்பளம் இல்லை, வேலை இல்லை, வேலையில் அழுத்தம் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சந்தித்திருப்பீர்கள். 20 - 30 வயதுகளில் இருப்பவர்களுக்கு ஜென்மசனி நடந்து கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் வெட்கம், மானம் போன்றவை இருக்க கூடாது. கொஞ்சம் பொறுமையும், நிதானமும் வெளியிடங்களில் இருக்க வேண்டும்.
புரிதல் உண்டாகும்
வீட்டில் உங்களைப் புரிந்து கொள்வார்கல். வெளியிடத்தில் மிகுந்த நிதானமாக நடந்து கொள்வது நல்லது. சுவற்றுக்கும் கூட காது இருக்கும் என்பதால் வேலை செய்யும் இடத்தில் அனுசரணையாக செல்வது நல்லது. அக்கம்பக்கம் பார்த்து பேச வேண்டும். எதிர்ப்புகள், எதிரிகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இவற்றை எல்லாம் சமாளித்துக் கொண்டு போவீர்கள்.
தொழில், வேலை சூப்பர்
50 வயதுக்கு மேற்பட்ட மீன ராசியினருக்கு இதுபோன்ற எந்தவிதமான பிரச்சனைகளும் இருக்காது. நடுத்தர வயது தாண்டியவர்களுக்கு தொழில், வேலை நன்றாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் மிகப்பெரிய அளவில் இருக்கும். எல்லா விதமான வீட்டிற்குத் தேவையான பொருள்களையும் வாங்கி வைக்கும் யோகம் உண்டாகும்.
கவனம்
பிள்ளைகளுக்காக சொத்து வாங்குவது, திருமணம் செய்து வைப்பது, பேரன், பேத்தி எடுப்பதற்கான அத்தனை யோகமும் உண்டு. ஆரோக்கியத்தில் அருமையான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கடன் தொல்லைகள் இல்லாமல் இருப்பீர்கள். பெரிய சோதனைகள் எதுவும் ஏற்படாது. இளைய பருவத்தில் அகல கால் வைக்காமல் இருப்பது நல்லது. உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் காதல், கெட்ட பழக்க வழக்கங்கள் போன்றவற்றில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
இலக்கு
எதிர்காலத் திட்டங்களை நோக்கி செயல்படுவது நல்லது. எல்லாவற்றிலும் வெற்றி, எதையும் சமாளிக்கலாம் என்கிற தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படும் நல்ல மாதமாக இருக்கும். வயதிற்கு ஏற்றாற்போல மீன ராசிக்காரர்கள் அனைவருக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications