Rasi Palan This Week: மீன ராசிக்கு அள்ளி கொடுக்கும் அதிர்ஷ்ட லட்சுமி.. பிளான் பண்ணி ஜெயிக்கும் காலம்
Meenam Rasi Palan: ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் மீனத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன் (Meenam Rasi Palan)
மீனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு எல்லா விதமான முயற்சிகளும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். மனப் பக்குவம் அதிகமாக இருக்கும். டார்கெட் செய்யக்கூடிய விஷயங்கள் அனைத்திலும் வெற்றி பெறும் யோகம் உண்டு. தெய்வ அனுக்கிரகம் முழுமையாகக் கிடைக்கும். தலையில் அடிபடுவது, கால் பாதம், விரல்களில் அடிபடுவதற்கான வாய்ப்பு ஏற்படும். மிக்ஸி, ஜார் போன்றவற்றில் பிரச்சனைகள் வரம். புதிய ஆராய்ச்சிகளை செய்து மகிழ்வீர்கள்.
வெற்றி
மனதில் ஒரு இனிமை ஏற்படும். நண்பர்களுடன் ஒட்டி உறவாடுவீர்கள். எல்லாருடைய சந்தோஷத்தையும் பார்க்கக்கூடிய அமைப்பு ஏற்படும். சகோதர, சகோதரிகளிடையே நல்ல சந்தோஷத்தைக் காண்பீர்கள். தெய்வ வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறக்கூடிய அமைப்பு ஏற்படும். இந்த வாரம் முழுக்க அற்புதமாக இருக்கும். ரத்த அழுத்தம் சார்ந்த மாத்திரை எடுக்கும் வாய்ப்பு உள்ளது.
பயணங்கள்
வாரத்தின் இறுதிப் பகுதி நன்றாக இருக்கும். நல்ல பயணங்களை மேற்கொள்வீர்கள். திவ்யமான இடங்களுக்குச் சென்று வருவீர்கள். எல்லோருக்கும் நல்லது நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். உடம்பில் உள்ள சூடு குறையும். நிறைய மோர் கொடுப்பது நன்மை பயக்கும். மதுரை மீனா்சியம்மனை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
நல்ல மாற்றம்
வெளியிடம், உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் அனுகூலம் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் என அனைத்து விதமான நல்ல மாற்றங்களும் ஏற்படும் காலகட்டம். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக் கூடிய அற்புதமான காலகட்டம். ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வழிபாடு
கழுத்துப் பகுதி, காது, மூக்கு, தொண்டை, ஒற்றை தலைவலி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அம்பாள் வழிபாடு, பார்வதி தேவி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். அபிராமி அந்தாதியை கேட்பது படிப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். வார்த்தையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தூக்கத்தில், செல்போன் பேசும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications